merantau:ஓரு இந்தோனேசிய பயணம்




அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.”
(நியாயாதிபதிகள் 18:6)

இந்தோனேசிய சுமத்ரா தீவின் எளிய கிராமிய மக்கள் குழுக்களுக்கு மத்தியில் மேரான்தவ் மக்கள் குழுவினர் மிகவும் பிரசித்தமானவர்கள். மேரான்தவ் என்றால் அலைந்துதிரிதல் என்று பொருள்.

இந்த இனத்தைச் சேர்ந்த இளம் வாலிபர்கள் அவர்களுடைய கட்டிளமைப்பறுவத்தில் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி, பேரும் புகழும்தேடி கிராமப்புறத்தை விட்டு நகரங்களுக்குச் செல்வார்கள்.

இதனால் இவர்களுக்கு நல்ல தொழில்வாய்ப்பும் வாழ்க்கை அனுபவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இப்படி பல வருடங்களாக அலைந்துதிரிந்து ஏதாவது ஒரு தொழிலை பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். குடும்பம், நண்பர்கள் மற்றும் அயலவர்களால் வரக்கூடிய சமுதாய அழுத்தங்களிலிருந்து விடுபட்டவர்களாகவே இந்த மேரான்தவ் வாலிபர்கள் இருப்பார்கள்.

இவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது இலகுவானதும் சவால்கள் குறைவான செயலுமாகும். இவர்கள் மிகவும் குறைந்த இஸ்லாமிய அறிவுடனேயே இருக்கிறார்கள். இவர்களில் மனமாற்றம் அடைந்தவர்களும் இருக்கிறார்கள். இந்தோனேசிய இளம் மிஷனரிகளை புதிய இடங்களுக்கு மேரான்தவ்கள் போல அனுப்பமுடிம். இது புதிய குழுக்களை அறிந்து அவர்களுக்கு இயேசுவை பற்றி அறிவிக்க இது ஒரு நல்ல முறைமையாகும்.

ஜெபம் செய்வோம்

  • இந்தோனேசிய மேரான்தவ்கள் தேவ ராஜ்யத்தை நோக்கி பயனிக்கவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • கிறிஸ்த வியாபாரிகள் இந்த இளம் வாலிபர்களுடைய வாழ்க்கையில் வியாபார அனுபங்களையும் தேவ ராஜ்யத்தையும் முதலீடு செய்யவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • உள்நாட்டு இளம் மிஷனரிகள் மேரான்தவ்களாக இன்னும் சுவிசேஷம் அறிவிக்கபடாத பகுதிகளுக்குச் சென்று ஊழியம் செய்யவேண்டும் என்று ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?