சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

குர்ஆனின் படி சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

ஸூரா 3:45

அவர்கள் சூழ்ச்சி (மூல அரபி மொழியில் Wa'makaroo) செய்தார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் (wa'makara Allahu). அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன் (wa'Allahu khayru al-makireena). (பிஜே மொழிபெயர்ப்பு)

(அவர்கள்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு)

(மேற்கண்ட வசனங்களில் நாம்  அடைப்பிற்குள் அரபி வார்த்தைகளை கொடுத்துள்ளோம்.)

குர்ஆன் 3:54 க்கு ஒத்த வசனங்களை 8:30 மற்றும் 27:50 வசனங்களிலும் காணலாம்.

சூழ்ச்சி செய்வதில், சதிசெய்வதில், வஞ்சிப்பதில் மற்றும் மற்றவர்களை தவறாக வழிநடத்துவதில் எவராலும் மிஞ்ச முடியத ஒருவர் யார்.

ஸூரா 4:142
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர்அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (பிஜே மொழிபெயர்ப்பு)

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு)

ஸூரா 10:21
மனிதர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி (makrun) செய்கின்றனர். 'அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன் (makran) என கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர். (பிஜே மொழிபெயர்ப்பு)

மேலும் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை நம்புவதைப் பார்க்கிலும் சிறந்ததை அறிந்தவர்களாக இருப்பதால், அல்லாஹ்வின் சூழ்ச்சி மற்றும் வஞ்சிக்கும் பொய்களில் இருந்து பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்கள் என குர்ஆன் சான்று பகருகிறது:

ஸுரா 7:99
அல்லாஹ்வின் சூழ்ச்சியில் அச்ச மற்று இருக்கிறார்களா (makra Allahi)? இழப்பை அடைந்த கூட்டத் தினர் தவிர (மற்றவர்கள்அல்லாஹ்வின் சூழ்ச்சியில் (makra Allahi) அச்சமற்று இருக்க மாட்டார்கள். (பிஜே மொழிபெயர்ப்பு)

அதுமாத்திரமல்ல, சூழ்ச்சிகள் மற்றும் சதிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை என்று பெருமை பாராட்டிக் கொள்கிறது.

ஸூரா 13:42

இவர்களுக்கு முன் சென்றோரும் சூழ்ச்சி (makara) செய்தனர்சூழ்ச்சிகள் யாவும் (al-makru) அல்லாஹ்வுக்கே உரியன. ஒவ்வொரு வரும் செய்வதை அவன் அறிவான். யாருக்கு அவ்வுலகின் (நல்ல) முடிவு என்பதை (ஏக இறைவனை) மறுப்போர் அறிந்து கொள்வார்கள்.

அரபி மொழியில் உள்ளதை நாம் மாற்றிச் சொல்கிறோம் என்று எவரும் குற்றம் சாட்டாதபடி, தரமான சொல்லகராதிகள் makr/makara  என்ற பதத்திற்கு தரும் பொருள் கீழே தரப்பட்டிருக்கிறது
م ك ر Miim-Kaf-Ra  = வஞ்சித்தல் அல்லது சூழ்ச்சி செய்தல் அல்லது குறுக்கு வழியில் செல்லுதல், தப்பிச் செல்லுதல் அல்லது விலகுதல், சதி செய்தல்,   தந்திரமாக செயல்படுதல், விதிகளுடன் செயல்படுதல்.
م ك ر makara வினைச்சொல். (1)
perf. act. 3:54, 3:54, 7:123, 13:42, 14:46, 16:26, 16:45, 27:50, 40:45, 71:22
impf. act. 6:123, 6:123, 6:124, 8:30, 8:30, 8:30, 10:21, 12:102, 16:127, 27:70, 35:10
n.vb. 7:99, 7:99, 7:123, 10:21, 10:21, 12:31, 13:33, 13:42, 14:46, 14:46, 14:46, 27:50, 27:50, 27:51, 34:33, 35:10, 35:43, 35:43, 71:22
participle. act. 3:54, 8:30

LL, V7, p: 256 (Source: http://www.studyquran.co.uk/14_MIIM.htm)
ஏமாற்றுதல், வஞ்சனை அல்லது சதி செய்தல், மற்றவர்களை முட்டாளாக்க விரும்புதல், அருவருக்க தக்கதைச் செய்தல் அல்லது தீய செயலைச் செய்தல், இரகசியமாக அல்லது மற்றவர்கள் அறியாமல் செய்தல்.

(Lane's Arabic-English Lexicon -www.studyquran.org/LaneLexicon/Volume7/00000256.pdf)
makara u (makr) ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொய் சொல்தல், முட்டாளாக்குதல், காட்டிக் கொடுத்தல்… 
III to try TO DECEIVE ஏமாற்ற முயற்சி செய்தல்
(Hans-Wehr, 4th edition, P. 1076:; http://ejtaal.net/aa/#hw4=1089)

பைபிளின் படி சூழ்ச்சி செய்வதில் சிறந்தவர் யார்?

சூழ்ச்சிச் செய்வதில் சிறந்தவர் மற்றும் முழு உலகத்தையும் தேவனின் சத்தியத்தில் இருந்து தன் வஞ்சனை மற்றும் புரட்டு மூலமாக வழிவிலகப்பண்ண விரும்புகிறவன் உண்மையில் யார் என பரிசுத்த வேதாகமம் சொல்வதை நாம் இப்பொழுது காண்போம்:

"நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." யோவான் 8:44


"உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறதுஇரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்." (வெளிப்படுத்தல் 12:9-12)

Comments

Popular posts from this blog

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?