இஸ்லாம் சஹாரா முழுவதும் பரவியது

மேற்கு ஆப்ரிக்கா

மவ்ரித்தானிய மௌரஸ் மக்கள் குழு

மவ்ரித்தானியா ஜெர்மனியைப் போன்று ஏறக்குறைய மூன்று மடங்கு பெரிய நாடாகும். அதிகமான பாலைவனங்களைக் கொண்டுள்ளது. அரேபியர்கள்> பாபேரியர்கள்> கறுப்பு ஆபிரிக்க மக்கள் குழுக்கள் ஒன்றாக கழந்து இங்கு வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் 70 சதவீதம் அரபு பேசுகின்ற அரபு-பபேரிய மவ்ரஸ் மக்கள் குழுவை சேர்ந்தவர்கள். இந்த மக்கள் குழுவில் ஒரு பாதையினர் வள்ளை மௌரஸ் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் வியாபாரிகள்> சீமான்கள்> கல்வித் துறை மற்றும் உயர் பதவிகள் வகிக்கின்றனர். மற்றவர்கள் கறுப்பு மௌரஸ் எனப்படுகின்றனர். இவர்கள் அடிமைகளின்; வம்சாவளியினர் ஆவர். மீதமுள்ள 30 சதவீதம் மக்கள் தெற்கு மற்றும் தலைநகரில் வாழ்கின்ற கறுப்பின ஆபிரிக்க ஜனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
1957 இல் இருந்து 90 சதவீதமான மௌரஸ் மக்கள் நாடோடிகள் போல கூடாரங்களில் பெரிய நகரங்களில் குடியிருந்தனர். 1970 இல் ஏற்பட்ட கடுமையான வறட்சியினால் எஞ்சியிருந்த ஆடு மாடுகளை விற்று பாதுகாப்பான நகரங்களுக்குச் சென்றனர். தொடர்ந்து அங்கேயே வாழத் தொடங்கினார்கள்.

எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் சஹாரா முழுவதும் பரவியது. இது பாபேரியர்களை பலவீனப்படுத்தியது. 1920 இல் மவுரித்தானியா ஒரு பிரஞ்சு காலனித்துவ நாடாக மாறியது. 1960 புரட்சியின் மூலம் இஸ்லாமிய அதிகாரம் கொண்ட ஒரு அரசாக சுதந்திரம்
பெற்றது.

பிறகு இன்னும் கவனமாக இஸ்லாமிய சட்டத்திற்குள் மக்களை வழிநடத்தியது. வறுமை> ஊழல்> அடிமைத்தனம்> அநீதி> வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு இது தற்காலிக தீர்வாக அமைந்தது. இன்றும் அநேகர் நாடோடிகளாகவே வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து சட்டங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கிறார்கள். திருமணமும் விவாகரத்தும் பலமுறை செய்கிறார்கள். நாற்காலிகளில் அமர்வதைவிட கம்பளத்தில் அமர்வதையே விரும்புகிறார்கள்.

இன்று மவுரித்தானியாவின் மக்கள் சனத்தொகையில் 100 வீதமானவர்கள் சுன்னி முஸ்லீம்களாவார்கள். இவர்களில் ஒரு சில கிறிஸ்தவர்களே இருக்கின்றார்கள்.

ஜெபம் செய்வோம்:

  • இந்த முன்னாள் நாடோடி மக்கள் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெபிப்போம்.
  • தேவ அன்பை மவுரித்தானியா மக்கள்மத்தியில் காண்பிக்க அழைக்கப்பட்ட விசுவாசிகளுக்காக ஜெபிப்போம்.
  • புதிய விசுவாசிகள், விசுவாசத்தில்பலப்பட்டு மற்றவர்களுடன் அவர்கள் விசுவாசத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும்என்று ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?