மத்ரஸாக்களில் சிறுவர் உரிமை!!!

மேற்கு ஆபிரிக்காவின் கரிபவ்போய்ஸ்

மேற்கு ஆபிரிக்காவின் பகுதிகளில் நவீன நாட்களின் குழந்தைச் சுரண்டலாகவும், கடத்தல் மற்றும் அடிமைத்தனத்திற்கும் காரனமாகக் கருதப்படுவது தொன்றுத்தொட்டு வரலாற்றினடிப்படையின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு முறையாக இருந்து வந்த இளைஞர்களை இஸ்லாத்தின் அடிப்படைகளை கற்பித்தலும், குர்ஆனை  மனனம் செய்வித்தலுமாகும். கரிபவுர் மற்றும் டலிப்போய்ஸ் போன்றன மேற்கு ஆபிரிக்காவிலே மக்கள் நிறைந்த இடங்களான மாலி, செனகல்இ பர்கினா, பஸோ குயினியா பிசவு போன்ற இடங்களில் வாழ்கிறார்கள்.  இந்த சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களால் மத்ரஸா அல்லது இமாம்களிடம் அனுப்பப்படுகிறார்கள்.

19 வயதாகும் போது குர்ஆன் முழுவதையும் மனனம் செவிப்பது இதன் நோக்கமாகும். நாளார்ந்த உணவுக்கும் செலவுக்கும் இவர்கள் பிச்சை எடுப்பார்கள். சிறுவயதிலே இவர்களுக்கு  நல்ல நல்லப் பழக்க வழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுவார்கள். பயிரிடப்படும் காலத்தில் இவ்விளைஞர்கள் விவசாயிகளுக்கு கொடுக்கப்படுவார்கள் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அந்த இமாம்கள் எடுத்துக்கொள்வார்கள்.

கொடுக்கப்படும் பயிற்சிகளை சரியாக செய்யாவிட்டாலோ, குர்ஆன்  மனனமிடுவதில் தேர்ச்சியடையாவிட்டாலோ, அந்த சிறுவனுக்கு முறைக்கேடான தண்டனைகள் கொடுக்கப்படும். அநேக  சிறுவர்கள் பாலியல் முறைக்கேடுகளுக்கு அகப்படாமல் மிகவும் பயத்துடன் வாழ்ந்து வருவார்கள், வீதிகளிலே பிச்சையெடுக்கும்போது, விபத்துக்களையும் சந்திக்கிறார்கள். கடும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவும் மாட்டாது. சிறுவர் கடத்தல்களும் நடந்துக்கொன்டிருக்கின்றன.

 மார்ச் 2015 இல் இரண்டு பெரியவரகள் குயினியா பிஸாவிலே வைத்து 54 சிறுவர்களை செனகலுக்கு கடத்தப்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டனர். ஆக்குறைய 100,000 ற்கும் அதிகமான சிறுவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கங்கள் தனிப்பட்ட மதத் தலைவர்களின் அழுத்ததிற்கு உள்ளாகிக் காணப்படு கிறார்கள்.  இந்த பிள்ளைகளின் உடல்கள் குடும்பங்களுக்கு திரும்பி வந்தப்போதும் மரணத்துக்கான காரணங்கள் பதிவுச் செய்யப்படுவதில்லை.  இந்த சிறுவர்கள் குழந்தைப்பருவத்தில் தங்களுடைய உரிமைகளை இழந்து, பின்தங்கி காணப்படுகிறார்கள். இமாம்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவிட்டால், தொடர்ந்தும் வீதிகளிலேயே வாழ விரும்புகிறார்கள். காரணம் குடும்பத்தாரிடம் சென்றால் மீண்டும் அந்த இமாம் இடத்திற்கே கொண்டுபோய் விட்டு விடுவார்கள் என்று நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஜெபம் செய்வோம்:

  • ·       மேற்கு அபிரிக்க அரசு இந்த சிறுவர;களைப் பாதுகாத்து, கல்வி கற்க வாய்ப்பைக்கொடுத்து, இமாம்கள் செய்யும் அநியாயங்களை ஆராய்ந்து நியாயம் செய்யவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • ·       குர்ஆனை கற்றுக்கொடுக்கிறோம் என்று பணம் சம்பாதிக்கும் இமாம்களின் முக மூடிகள் கிழியப்படவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • ·         மத்ரஸாக்களில் நடக்கும் துன்புறுத்தல்களுக்குத் தப்பி வாழும் சிறுவர்களுக்கு நல்ல போஷாக்கும், மருந்தும், அன்பும், கல்வியும் கொடுத்து உதவுகிறவர்களுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் கிடைக்க ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?