அகதிகளுக்கான குறுக்கு வழி
துருக்கி:
ஐரோப்பா மற்றும் ஆசியா இரண்டிற்கும் இடைப்பட்டப்பகுதியில் இந்த துருகிஸ்த்தான் அமைந்துள்ளது. இவ்விரண்டு கண்டங்களிலும் தொடர்புப்பட்ட வகையில் குறிப்பிடத்தக்க விடயங்களுடனான ஒரு குழப்பமான வரலாறு துருக்கிக்கு உள்ளது.
இதுவே ஐரோப்பியாவிலுள்ள அகதிகளின் நெருக்கடிக்கு முன்னணி உந்துவிசையாக அமைந்தது. இது தமது நாட்டைவிட்டு வெளியேரிய சிரியாவின் அகதிகளையும் இணைத்துக்காணப்படுவதுடன் தற்போது இவர்களின் எண்ணிக்கையானது 1.7 மில்லியனாக காணப்படுகிறது.
உள்நாட்டு போரின் ஆரம்பத்திலிருந்து, சுமார் 5 வருடங்களாக துருக்கியானது இந்த மோதல் அதிசீக்கிரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து சிரியாவிலிருந்து அகதிகளை ஏற்றுக்கொள்ளத்தொடங்கியது. ஆனாலும் இந்த யுத்தம் நீண்டதன் காரணமாக துருக்கியில் பதட்டநிலை உருவானது, அத்தோடு அகதிகளாக வந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்லவும் இயலாமல் தொடர்ந்து அந்த இடத்திலேயே வேலைச் செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவும் இயலாமல் இடைநடுவான லிம்போவிலே அகப்பட்டுக்கொண்டார்கள்.
துருக்கியில் சனத்தொகை வளர்ச்சியடைந்ததன் காரணமாக வாடகையும் அதிகரித்தது, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளிடமிருந்து
ஆபத்தையும் எதிர்
கொண்டுள்ளது.
ஒக்டோபர்
2015 ம் ஆண்டு
துருக்கியின் தலைநகரமாகிய
அன்காராவிலே குண்டு
வெடிப்பில் சுமார்
102 பேர் கொள்ளப்பட்டதுடன்
அநேகமானோர் காயப்பட்டார்கள். இதன் காரணமாக தீவிரவாதக் குழுக்கள் மேல் சந்தேகம் எழஆரம்பித்தது.
தொடர்ந்தும் சிரியாவின் அகதிகள் அதிகரித்ததின் காரணமாக ஐரோப்பாச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையோடு கலந்துரையாடி அவர்களுக்கு நிரந்தரமான ஒரு இடத்தை ஐரோப்பிய நாடுகளிலே ஏற்படுத்தித் தரவேண்டிய நிலையை உருவானது.
ஜெபம் செய்வோம்:
- சிரியாவின் அகதிகளுக்கு அடைக்கலமும்உபசரிப்பையும் வழங்கி வரும் துருக்கியருக்கு சகிப்புத்தன்மையும், பொறுமையும் பெருக வேண்டும் என்றுஜெபிப்போம்.
- துருக்கியின் சமாதானத்திற்கும், அங்குள்ள சபைகள் ஐக்கியத்துக்கும், அன்பிற்கும் உதாரணமாக இருக்கவேண்டும் என்றுஜெபிப்போம்.
- வசிப்பிடத்திற்கான ஏக்கத்துடன் பலவருடங்களாக துருக்கியிலேஅகதிகளாக இருக்கும் அகதிகளுக்காக மன்றாடுவோம். சங்கீதம் 46:9 களில் கூறுவதுபோல்“ அவர்பூமியின் கடைமுனைமட்டும்யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லைஒடித்து ஈட்டியைமுறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால்சுட்டெரிக்கிறார்”
Comments
Post a Comment