Posts

Showing posts from June, 2015

தம்பியின் கேள்வியும் நானாவின் பதிலும் 2

உமரின் தம்பி எழுதிய பதில் கடிதம்: அன்புள்ள அண்ணாவுக்கு, உங்கள் தம்பி எழுதிக் கொள்வது. உங்கள் கடிதத்தை படித்தேன். இஸ்லாம் பற்றியும், ஐஎஸ் பற்றியும் உங்களுக்கு இருக்கும் அறியாமை உங்கள் கடிதத்தில் தெளிவாக வெளிப்பட்டதை என்னால் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை.  உங்களுக்கு இஸ்லாமின் இரண்டு முக்கியமான அஸ்திபாரங்களை (கட்டளைகளை) விவரிக்க விரும்புகிறேன். முதலாவது அஸ்திபாரம்,  இஸ்லாமின் ஆன்மீக கட்டளைகளாகும். அதாவது மனிதனை திருத்தி, நல்வழிப்படுத்தி, இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படியச் செய்து, சரியான முறையில் இறைவனை தொழுவதற்கு கற்றுக்கொடுத்து, கடைசியாக அவனை சொர்க்கத்தில் சேர்ப்பது தான் இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரம். இரண்டாவது அஸ்திபாரம்,  இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளாகும். இஸ்லாமின் ஆன்மீக சட்டங்கள் தனி மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது போல, இஸ்லாமிய அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகள் இஸ்லாமிய ஆட்சி தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  தனி மனிதனின் ஆன்மீக கட்டளைகளில் அன்பும் அமைதியும், ஒழுக்கமும் காணப்படுவதுபோல, இஸ்லாமின் அரசு சம்மந்தப்பட்ட கட்டளைகளில் தவறு செய்பவ

தம்பியின் கேள்வியும் நானாவின் பதிலும் 1

கடிதம் 1 - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன் . . . அன்புள்ள தம்பிக்கு, உன் அண்ணன் எழுதிக்கொள்வது. உனக்கு இறைவனின் கிருபையும்  சமாதானமும் உண்டாவதாக.  நீ ஒவ்வொரு நாளும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கும் படி உனக்காக பிரார்த்தனை செய்கிறேன்.  ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதத்தில் நாம் இருவரும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கடிதங்களை எழுதிக்கொள்கிறோம். இந்த ஆண்டும், ஒரு முக்கியமான தலைப்பில் உன்னோடு கடித உரையாடல்களை புரியலாம் என்று விரும்புகிறேன். இஸ்லாம் அமைதி என்றால், ஏன் முஸ்லிமாகிய நீ வன்முறையை ஆதரிக்கிறாய்? ஒவ்வொரு வாரமும் நாம் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் போது பல முக்கியமான விஷயங்களை பேசிக்கொள்கிறோம். ஆனால், கடந்த வாரம் நாம் பேசிக்கொள்ளும் போது, உன் வார்த்தைகளில் மறைமுகமாக தெரித்த சில விஷயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. முதலாவதாக, நீ ஒரு கிறிஸ்தவ பின்னணியை உடையவன், இரண்டாவதாக, அமைதி மார்க்கம் என்று நீ கருதுகின்ற இஸ்லாமை தழுவியவன், இப்படிப்பட்ட நீ ஐஎஸ் (IS) என்ற தீவிரவாத இயக்கத்தை ஆதரித்து பேசினாய். உன் வார்த்தைகளில் காணப்பட்ட அழுத

பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும்

குர்ஆனில் இவ்வசனங்கள் (4:106, 9:43, 23:118, 48:3, 110:3) முஹம்மது நபி பாவம் செய்தவர் என்று கூறுகின்றன . 34:36 என்ற   வசனம் இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவர் என்று சொல்கிறது . இவ்விரண்டையும் எடுத்து நோக்கும்போது முஹம்மது நபியை விட இயேசு சிறந்தவர் என்று தெளிவாக புரிந்துக் கொள்ளலாம். திருக்குர்ஆனே இயேசுவை உயர்த்திச் சொல்கிறது   என்பதை இஸ்லாமியர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த குர்ஆன் ஆதாரத்தை கிறிஸ்தவர்கள் காண்பிக்கின்றனர். திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வாதிடுவது என்றால் குர்ஆனில் உள்ள அனைத்தையும் அவர்கள் நம்ப வேண்டும் என்று ஒரு வாதத்தை இப்பொழுது இஸ்லாமியர் முன்வைக்கலாம். அப்படி அவர்கள் சொல்வார்களானால் முஹமது நபியின் பெயரை பைபிளில் தேடும் போது முழு பைபிளையும் அவர்கள் ஈமானம் கொண்டிருக்கவேண்டும். அதி பரிசுத்த புதல்வன் என்று இயேசுவை பற்றி சொல்லும் குர்ஆன் இறைவனின் அடிமை தான் . மகனல்லர் என்றும் சொல்வதை பார்க்கலாம். “நிச்சயமாக நான் உன்னை மரணிக்கச் செய்து என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என்று சொல்லும் குர்ஆன் இயேசு கொல்லப்படவுமில்லை ; உயிர்த