தெவ்பந்தியும் தெவ்பந்தியரும்

மேற்கு தென் ஆசியா

100,000 மக்கள் தொகை கொண்ட தேவ்பந்த் நகரம், வட இந்தியாவின் பிராந்தியம் முழுவதும் உள்ள மெகா நகரங்கள், பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய ஒரு நகரமாகும். கரும்பு மற்றும் மாம்பழ மரங்கள் இங்கு உள்ளன. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் விட மாடு வண்டிகளே அதிகம் காணக்கூடியதாகவுள்ளது.

ஆயினும் தாருல் உலூம் மசூதி (கல்விக்கான இஸ்லாமிய மையம்) உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் தேவ்பந்த் முஸ்லீம்களுக்கு முக்கியமானதாகும். தாருல் உலூம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பழமைவாத சுன்னி இஸ்லாத்தை பரப்பிடும் நோக்கத்துடன் 1867 இல் திறக்கப்பட்டது. இங்கு கல்விகற்ற பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் இந்தியா, பாக்கிஸ்தான், வங்காளம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் மத்ரஸாக்களை துவங்கினார்கள்.

 இந்தியா, பாக்கிஸ்தான் முஸ்லிம்களில் இருபது சதவீதம் தேவ்பந்தி (75 மில்லியன் மக்கள்) முஸ்லீம்களாவார்கள். இங்கிலாந்தில் 40 சதவீதமான மசூதிகள் இவர்களுடையதாகும். பல சுன்னி முஸ்லிம்களிடம் அறிவார்ந்த, பழமைவாத, தூய தெவ்பந்தி இஸ்லாம் பிரதிபலிக்கிறது. ஆனாலும் பாகிஸ்தானிலுள்ள தெவ்பந்தி மத்ரஸாக்களில் தாலிபான்களின் தடயங்கள் உள்ளனர் என்ற சந்தேகத்தால், 2013 ல் தாருல் உலூம் பயங்கரவாதத்தை கண்டித்து ஒரு பத்வாவை (ஒரு பொது அறிக்கையை) வழங்கியது.

 உலக முழுவதிலிருந்தும் முஸ்லிம்கள் தேவ்பந்த் நகரத்துக்கு வருகை தருகிறார்கள். சிலர் சுற்றுலாவுக்காக வருகிறார்கள். சிலர் ஏழுவருடங்களுக்கு மேலாக அங்கே தங்கி, மத்ரஸா அல்லது மசூதி தலைவராக உருவாகுவதற்கு கல்வி கற்கிறார்கள்.
 ஈரானிய சுன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த இப்ராஹிம் பாய், ஒரு குளிர்காலத்தில் இரண்டு வாரங்களுக்கு தெவ்பந்தி நகருக்கு வந்தார். “இந்த இடத்தில் இறைவன் பெரிய காரியங்களை செய்கிறான்!” என்று கூறினார்.

இந்த தெவ்பந்தி முஸ்லீம்களுக்கு இயேசு யார் என்கிற வழிப்புணர்வு ஏற்பட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். இவர்களின் செல்வாக்கு நாடுமுழுவதும் பரவியிருக்கிறது. தாங்கள் நம்புவதை பல கண்டங்களுக்கும் அறிவிக்கிறார்கள். மிகவும் உறுதியான ஒரு நெட்வொக் இவர்கிடம் இருக்கிறது. இந்த அர்ப்பணிப்பும், பேரார்வமும் இயேசுவுக்கு எவ்வளவு மகிமையாக இருக்கலாம். சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஆபகூக் 2:14)

ஜெபம் செய்வோம்

  • இந்து முஸ்லீம் அழுத்தங்கள் அடிக்கடி ஏற்படாமல், அமைதியும் ஆசீர்வாதமுமான ஒரு நகரமாக தெவ்பந்தி நகரம் இருக்கவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • உலகம் முழுவதும் தேவ்பந்தி நெட்வொர்க்குகள் வழியாக உண்மையான சமாதானமும் நீதியும் கடத்தப்படவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • மறைந்திருக்கின்ற தெவ்பந்தி பெண்கள், பிதா தங்களுக்கு கொடுத்துள்ள பெருமதியை புருந்துகொள்ள இயேசுவின் மூலம் அவர் காட்டிய அன்பை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?