துர்கிஸ்தான்: ஆவியினால் வழிநடத்தப்படுகிறது


மத்திய ஆசியாவிலுள்ள மில்லேனியா சமவெளி முழுவதுமாக உள்ள துருக்கியின் ஹட்டிலாத ஹன் (Hattila the Hun) டமர்லேன் தங்க கும்பல் (Tamerlane, The Golden Horde) - பழம்பெறும் நாமங்களைக்கொண்ட பழங்குடி நாடோடிகள் பயத்தினால் தேங்கி இருந்தனர்.

உஸ்பெகுஸ், உய்குருஸ், கஸாக்ஸ், டாடர்ஸ், டாரக்மென், அசெரிஸ் மற்றும் துருக்கியன் போன்ற பழங்குடி வம்சாவளிகள் இன்று 200 மில்லியனுக்கும் அதிகமானோராக கானப்படுகிறார்கள். இதில் கிட்டத்ட்ட 160 மில்லியன் முஸ்லிம் இனத்தவராவர்.

இஸ்லாமிய இல்லத்தின் ஒரு அறையாக துருக்கி காணப்படுகிறது. இன்று துருக்கி முஸ்லிம்கள் பல்வேறு மாற்றங்களோடு இயேசு கிறிஸ்த்துவின் விசுவாசத்திற்குள் வருகிறார்கள். கஸகஸ்த்தான் மற்றும் ரஷ்யா போன்ற திறந்த நாட்டிலுள்ள மக்கள் இன்று ஆலயங்களிலே சந்தித்துக்கொள்கிறார்கள். எவ்வாராயினும் மிகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட துருக்கிய விசுவாசிகள் வீடுகளிலும் தனிப்பட்ட இடங்களிலும் சந்தித்துக்கொள்கிறார்கள்.

நாம் அடிக்கடி பிரச்சினைகளுக்கு முகம்கொடுதது வருகிறோம், ஆனாலும் இன்றும் நாம் கடவுளைத் துதித்துக்கொண்டே வருகிறோம் என்று உஸ்பெக் நாட்டைச் சேர்ந்த மறுபிறப்படைந்த பெக் (Bek) என்பவர் தெரிவித்தார்.

எங்களுக்கு ஒரு பழமொழி இருக்கிறது,

நீ சிறைப்படுத்தப்பட்டால் கடவுளைத் துதி அப்பொழுது தாக்கப்பட மாட்டாய்!
நீ தாக்கப்படுவாயானால் கடவுளைத் துதி அப்பொழுது கொழைசெய்ய்ப்படமாட்டாய்!
நீ கொலை செய் யப் படுவாயானால் கடவுளைத் துதி இப்பொழுது நீ இயேசுவோடு பரலோகத்திலிருப்பாய்!.

இந்த உற்சாகமான நன்றியறிதலானது சோதனைகளுக்கு முகங் கொடுத்தப் போதும் துர்கிஸ்தான் விசுவாசிகள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

ஏறத்தாள 30 வருடங்களுக்கு முன் ஒரு தை மாதத்திலே துணிச்சலான முன்னோடியினர், மத்திய ஆசியாவின் தியன் சான் மலைக்கு மேல் ஊழியம் செய்வதை நான் கண்ணுற்றேன். கடுமையான குளிராகவும், இளஞ்சூடாகவும் அந்த நகரம் காணப்பட்டது. அங்கே மூன்று குடும்பங்கள் கம்யூனிஸ பழ்கலைகழகத்திலே ஆங்கிலம் கற்பிப்பதின்மூலம் கிடைக்கும் 50 பவுண் வருமானத்தில் போராட்டத்தினூடாக வாழ்ந்துவந்தார்கள்.

அன்று மாலை, ஜோன் என்ற ஆசிரியர் எனக்கு அப்துல்லாஹ் என்ற மாணவன் ஒருவனை அறிமுகம் செய்துவைத்தார், அந்த மாணவன் முஸ்லிம் பின்னணியைக் கொண்டவனாகவும் உய்குர் என்ற இனத்தைச் சேர்ந்தவனாகவும் இருந்தான். இவனே உய்குர் இனத்திலே முதன் முதலாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவனாகக் காணப்பட்டான். “நீங்கள் எப்படி அப்துல்லாஹ்வை கிறிஸ்துவின் நம் பிக்கைக்குள் வழிநடத்தினீர்கள்?” என்று ஜோனிடம் கேட்டபோது, நாம் வழிநடத்தவில்லை, பரிசுத்த ஆவியானவரும், ஜெபமும் தான் வழிநடத்தியது என்று ஜோன் பதிலளித்தார். மேலும் அவர் விவரிக்கையில் அப்துல்லாஹ் பிரச்சினையான ஒரு சூழ்நிலையில் கனவொன்றை கண்டு, யாரோ ஒருவர் வழங்கிய புனித நூல் ஒன்றை எடுத்துக்கொண்டு கடந்த வருடம் என்னிடம் வந்தான். இது என்ன புத்தகம்?” என்று என்னிடம் வினவினான். “அப்பொழுது நான் பதட்டமடைந்தேன் என்று ஜோன் கூறினார். என்னிடம்உய் குர் மொழியில் மொழிபெயர்க் கப்பட்ட பழைய ஏற்பாடு ஒன்று இருந்தது. இந் தப் புத்தகம் உன்னுடைய கனவாக இருக்கலாமா?” என்று நான் அவனிடம் கேட்டேன்.

அவன் அந் த புத்தகத் தில் சிலவற்றை திறந்து பார் த்துவிட் டு இதுபழய மொழி வடிவிலே இருக் கிறது. என்னுடைய தந்தை இதை எவ்வாறு வாசிப்பது என்று கற்றுத் தந்திருக்கிறார்என்றான். நான் அப்துல்லாஹ்விடம் அந்த பழைய ஏற்பாட் டை கொடுத்துவிட் டேன்.

பல வாரங்களின் பின் அவன் கர்த்தராகிய இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற் றுக் கொண்டான் என் றுகூறி ஜோன் புன்னகைத்தார்.

ஜெபம் செய்வோம்:

  • துன்புறுத்தப்படும் இஸ்லாமிய பின்னணி விசுவாசிகளுக்கும், அவர்களின் விசுவாசத்தில் தைரியத்தையும், அந்நியோனியம் மற்றும் ஊக்கத்தையும் அளிக்குமாறு ஜெபிப்போம்.
  • 227 முஸ்லிம் மக்கள் குழுக்களுக்கு நற்செய்தியை கொண்டுச்செல்லும் மிஷனரிகளுக்கு தைரியம் கொடுக்கும்படி ஜெபிப்போம்.
  • துருக் கிஸ்தான் நாட்டிற்கு மதசார்பான விடயங்களில் சுதந்திரத்தை முன்னெடுக்கவும், இதைத் தேடுபவர்களுக்கு சிறைப்படுத்தல், தாக்குதல் மற்றும் கொலைகள் பொதுவானதாக இல்லாமல் இருக்க வேண்டுமென ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?