இது கிறிஸ்தவர்களுக்கு மட்டும்

இந்தோ-மலேசிய அறை

இந்தோ-மலேசியா என்ற இஸ்லாமிய இல்லத்தின் அறையில் மலேசியா, சிங்கப்பூர், தென் பிலிப்பீன்ஸ், 17,000 திற்கும் அதிகமான இந்தோனேசிய சங்கிலி தீவுகளும் அடங்குகின்றன.
இந்தோனேசியா 250 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மகிப் பெரிய இஸ்லாமிய நாடாகும். அங்கு வாழும் 87 வீதமானவர்கள் முஸ்லீம்கள்.

இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்தோ-மலேசியாவுக்குள் வருவதற்கு முன்பு அங்கிருந்த மக்கள் மிருக வழிபாட்டிலும், இந்து, மௌத்த மதங்களை பின்பற்றியவர்களுமாக இருந்தார்கள். இன்றும் அதன் தாக்கம் அவர்களது சமூக கலாச்சாரங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

1870 இல் இன்தோனேசியாவில் முதலாவது கிறிஸ்துவுக்கான முஸ்லிம் இயக்கம் ஆரம்பமானது. பிறகு 1967-71 வரை கிறிஸ்த சரித்திரத்தில் பெரியதொரு எழுப்புதல் ஏற்பட்டது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம்கள் கிறிஸ்தவ சபைகளில் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இன்று இன்தோ-மலேசியாவில் அநேக முஸ்லீம்கள் ஐந்து படிமுறை அணுகுமுறைக்கூடாக கிறிஸ்தவ விசுவாசத்தை பகிர்கிறார்கள். “Any-3”: யாருக்காவது, எங்காவது, எந்த நேரத்திலும் - இ மைக் ஷிப்மேன் என்பவர் யோவான் 4ம் அதிகாரத்தில் சமாரிய பெண்ணுடனான இயேசுவின் உரையாடலிலிருந்து எடுத்தது.

படிமுறை ஒன்று
ஒரு முஸ்லிமுடன் தொடர்ப்பை ஏற்படுத்துதல்.  இந்தோ-மலேசிய அநேக முஸ்லீம்கள் சுவிசேஷத்தை ஒருபோதும் கேட்டதில்லை. காரணம் அவர்களுக்கு கிறிஸ்தவர்கள் யாரையும் தெரியாது.

படிமுறை இரண்டு
ஆரோக்கியமான கலந்துரையாடல்கள். முஸ்லீம்கள் எப்பொழுதும் இறைவனைப்பற்றி பேச விரும்புவார்கள். உங்கள் இறைவனை திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு மைக் பரிந்துரைக்கிறார். ஆவிக்குறிய காரியங்களிலிருந்து சம்பாஷனைகளை ஆரம்பிப்பது நல்ல ஆரம்பமாக இருக்கும்.

படிமுறை மூன்று
எமது கிரியைகளினால் இறைவனை திருப்திப்படுத்த முடியாது என்பதையும் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றி அடிக்கடி கேள்வியெழுப்ப வேண்டும். அநேக முஸ்லீம்களுக்கு இறைவனின் சித்தம் என்றால் என்ன என்பதும் மீட்பின் நிச்சம் என்றால் என்ன என்பதும் தெரியாது.
படிமுறை நான்கு
சுவிசேஷ செய்திகளை அவர்கள் உள்ளத்துக்கு கொண்டுச் செல்லுங்கள். இயேசுவின் மரணத்துக் கூடாகவே நித்திய வாழ்வு உண்டு என்பதை தெளிவுபடுத்துங்கள்.

படிமுறை ஐந்து
இயேசுவுக்கூடாக இரட்சிப்பை பெற அவர்களை அழைப்பு விடுங்கள். இந்த இலகுவான அணுகுமுறையானது புதிய விசுவாசிகளுக்கு பின்பற்ற உதவியாக இருக்கும். அதன் பிரதிபலன் இந்தோ-மலேசியா முழுவதும் சுவிசேஷம் பரவ உதவும்.

ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்கள் பிரார்தனைகளில் இயேசுவை சொந்த இரட்சகராக அழைத்தார்கள். இப்பொழுது அவரின் சீஷர்களாக இருக்கிறார்கள்.

ஜெபம் செய்வோம்.


  • இந்தோ-மலேசியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் செய்மதி தொலைக்காட்சிக்கூடாகவும், இயேசு திரைப்படத்துக்கூடாகவும், தனிப்பட்ட கிறிஸ்தவ சாட்சிகளுக்கூடாகவும். Any-3 முறைமைக்கூடாகவும் சுவிசேஷம் பகிரப்படவேண்டும் என்று ஜெபிப்போம்.


  • இந்தோ-மலேசியாவிலுள்ள 282 மக்கள் குழுக்களை சேர்ந்த 280 மில்லியன் முஸ்லீம்களில் இன்னும் கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாதவர்களுக்காக ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?