ரோஹிங்கியா : உலகங்களுக்கு மத்தியில் ஒரு மக்கள் குழு

ஆகதிகள்

ரோஹிங்கியா மக்களின் தாயகம் இஸ்லாமிய இல்லத்தின் தெற்காசிய அறைக்கும் இந்தோ-மலேசிய அறைக்கும் மத்தியில் அமைந்துள்ளது. இவர்கள் மிக பெரிய இன, மொழி, மத மற்றும் அரசியல் சாவால்களை சந்தித்த மக்கள் குழுவினர். வங்காள வளைக்குடாவின் கான் மலைகளின் வட பகுதியில் பல நூற்றாண்டுகளாக ரோஹிங்கியா முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள். அநேக காலமாக பௌத்த அயலவர்களுடன் சமாதானமாக வாழ்ந்துவந்தார்கள்.

1948ம் ஆண்டு பர்மா சுதந்திரம் அடைந்தவுடன் அங்கு பெரும்பான்மை மக்களாக பௌத்தர்கள் காணப்பட்டார்கள் . ஆரம்பத்தில் சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கப்பட்டது.
1982ம் ஆண்டு இராணுவ புரட்சியைத் தொடர்ந்து ‘ரோஹிங்கியா மக்களை தொடர்ந்தும் மியன்மாரின் குடியுரிமை  உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று சட்டம் மாற்றப்பட்டது
இதனால் இர ண் டு மில்லியன் மக்கள் குடியுரிமை இழந்த ஒரு பெரும் மக்கள் குழுவாக அடையாளம் காணப்படுகிறார்கள்

இப்படி வளர்ந்து வந்த பாகுபாடு 2012 இல் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. வன்முறை கொந்தளிப்பு பௌத்த, ரோஹிங்கியருக்கிடையில் வெடித்த போது, நூற்றுக் கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டு, பல கிராமங்கள் பூரணமாக அழிக்கப்ட்டது. 100,000 அதிகமான ரோஹிங்கியர்கள் தங்கள் சொந்த கிராமங்களிலிருந்து ஒரு கிலோமீ ட்டர் தூரத்தில்
அகதி முகாம்களில் இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக் கிறார்கள். இதனால் அகதிகள் பெருகினார்கள். பல்லாயிரக் கணக்கானவர்கள் அன்மையிலுள்ள நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். அவர்கள் மனித கடத்தல்களுக்குப்  பலியாவது அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுவது கவலைக்குறிய காரியமாகும்.

 ரோஹிங்கியா மக்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே இருக்கிறது - சொந்த நாடு இல்லைஅவர்களுக்கா பரிந்து பேச யாரும் இல்லை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் சங்கீதக்காரன் சொல்கிறபடி மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே (சங்கீதம் 9:13) இந்த இறைவன் ரோஹிங்கியா மக்களையும் தூக்கிவிடுகிறார். சில இடங்களில் இந்த மக்கள் இயேசுவில் விசுவாசம் வைத்து, நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்கள். ஆனால் இன்னும் அனேகருக்கும் சுவிசேஷத்தை செவிமடுக்க இன்னும் ஒரு சந்தர்ப்பம்கூட கிடைக்கவில்லை.

ஜெபம் செய்வோம்

  • இந்த மோதலுக்கான நீதி கிடைக்கவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • ரோஹிங்கியா மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலும் வெளியேறி வாழும் இடங்களிலும் நிம்மதியாக வாழவேண்டும் என ஜெபிப்போம். .
  • இவர்கள் கண்ணியமாக வாழவும், இவர்கள் பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கவேண்டும் என்றும் ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?