விசுவாசத்துக்கான ஒரு ஹிஜ்ரத்
மில்லியன் கணக்கான நகர்வுகள்:
21 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நடந்த மிகவும் முக்கியமான நிகழ்வு சிரியா, ஈராக் தேசங்களிலிருந்து மில்லியன் கணக்கான முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அகதிகளாக வெளியேறியதாகும்.
சிரிய
உள்நாட்டுப்
போருக்கு
இப்பொழுது
ஐந்து
வருடங்கள்.
நான்கு
மில்லியனுக்கும்
அதிகமானவர்கள்
சுற்றியுள்ள
நாடுகளிலும்
மேற்கு
நாடுகளிலிம்
தஞ்சம்
புகுந்துள்ளனர்.
இரண்டு
மில்லியன்
ஈராக்கியரும்
வெளியேறியிருக்கிறார்கள்.
1.6 மில்லியன்
ஈராக்கியர்
உள்நாட்டுளேயே
இடம்பெயர்ந்துள்ளார்கள்.
இப்படி
சொந்த
நாட்டைவிட்டு
வெளியேறுவது
யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் நடந்துள்ளது.
ஆபிரகாம் தனது தேசமான ஊர் என்ற தேசத்திலிருந்து மெசபொத்தேமியாவுக்குச் சென்றான். மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தான். இயேசு தன் பெற்றோருடன் எகிப்துக்குச் சென்றது போல் பல சம்பவங்களை சரித்திரத்தில் பார்க்கலாம்.
இஸ்லாத்தில் விசுவாசத்துக்கான பயணத்துக்கு அரபியில் ‘ஹிஜ்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நேரடி அர்த்தம் குடியேற்றம் என்பதாகும்.
நடைமுறையில்
கி.பி 622 இல், முஹம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பயணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்காவில் துன்புறுத்தல்களை சகிக்கமுடியாமல் மதீனாவுக்கு முஸ்லீம்கள் ஹிஜ்ரத் செய்தார்கள். இந்த சம்பவத்திலிருந்தே இஸ்லாமிய கலண்டர் ஆரம்பமாகிறது. அதற்குப் பின்னான சரித்திரம் ஹிஜ்ரத்துக்குப் பின் என்று அறியப்படுகிறது.
ஹஜ்
இஸ்லாத்தின்
ஐந்து
தூண்களில்
ஒன்றாகும்.
அதன் அர்த்தம் ‘புனித யாத்திரை’ என்பதாகும். செல்வம் படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளவேண்டும். ஹிஜ்ரத்தும் ஹஜ்ஜும் இரண்டு பயணங்களாகும். ஆனால் இரண்டிலும் சில ஒற்றுமைகளும் இருக்கின்றன. இரண்டு பயணங்களும் விசுவாசத்துக்காகவே மேற்கொள்ளப்படுகிறது. இரண்டிலும் சொந்த தேசத்தை விட்டு வெளியேற வேண்டியுள்ளது. ஆனால் ஹிஜ்ரத் நீண்டகால குடியேற்றமாகும்.
சிலவேளை
வாழ்நாள்
முழுவதும்
நீடிக்கலாம்.
முஹம்மது
நபியும்
எட்டு
வருடங்களின்
பின் மக்கா வெற்றியோடுதான் மீண்டும் மக்கா வந்தார்.
அநேகமான அகதிகளுக்கு மீண்டும் சொந்த தேசத்துக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இல்லை. எத்தனை பேர் வெளியேற்றத்தை ஹிஜ்ரத் என்று நம்புகிறார்கள்? முஹம்மது நபியுடைய ஹிஜ்ரத் மக்காவின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிச் சென்றதாகவும், இஸ்லாத்தை வலுவூட்டுவதாகவும் அமைந்தது. இது மதீனா வாசிகள் மதமாறுவதற்கும் ஏதுவாக அமைந்தது.
இன்றும்
அகதிகளாக
செல்லும்
முஸ்லீம்கள்
மற்றவர்களை
மதமாற்றுகிறார்கள்
என்பது
கவலையான
விடயமாகும்.
பயங்கரவாத
செயல்களிலும்
ஈடுபடுகிறார்கள்
என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. மில்லியன் கணக்கான குடியேற்றங்கள் ‘உண்மையான ஹிஜ்ரத்’ ஆகவுள்ளது. எகிப்திய எழுத்தாளர் சஹர் அல் நதி “ஐந்து பிரதான பகுதிகளில் ஒருவன் வாழ்வானேயானால் அவன் உண்மையான ஹிஜ்ரத் செய்தவன்” என்று
எழுதுகிறார்.
1. எல்லா துன்பங்களையும் சகித்துக்கொண்டு அல்லாஹ்வில் தங்கியிருக்கும் உறுதியான விசுவாசம் இருக்கவேண்டும்.
2. அவனுடைய பயணத்தைக் குறித்த தெளிவான அறிவு இருக்கவேண்டும், அர்த்தமற்ற பயணமாக இருக்கக்கூடாது.
3. தங்கள் புதிய தாயகத்தில் வழமையான கிரியைகளையும் வணக்க வழிபாடுகளையும் செய்வார்கள்.
4. சூழ உள்ள சமுதாய அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் அல்லாஹ்வில் தங்கியிருப்பார்கள்.
5. புதிய சூழலில் நீதியாக வாழ தங்களை அர்ப்பணிப்பார்கள்.
இந்த ஐந்து அடையாளங்களும் யூத கிறிஸ்தவ விசுவாசத்தை ஒத்திருக்கிறது. மேலும் உண்மையான ஹிஜ்ரத்துக்கான விருந்தோம்பலையும் சரியாக செய்கிறார்கள். மூன்று விசுவாசங்களிலும் ஹிஜ்ரத் ஒரு பொதுவான நிரந்தர பயணமாக இருக்கிறது. 21ம் நூற்றாண்டில் உண்மையான ஹிஜ்ரத் என்ற கருத்து, மதங்களுக்கிடையே ஒரு பாலமாக விளங்குகிறது.
Comments
Post a Comment