அரபு அறையில் அமாலி….


அமாலியின் ஷஹாதா

அரபு உலகமானது இஸ்லாத்தின் ஆன்மீக மையப் பகுதியாகும், இதுவே இஸ்லாத்தின் பிறப்பிடமுமாகும், புனிதச் சின்னங்களின் தாயகம் மற்றும் மொழிப்பெயர்க்க முடியாத குர்ஆனின் பாதுகாவலராகவும் இருக்கிறது.

அரபு மொழியானது குடும்ப மொழியாகும். அரபு பேச்சு வழக்குகள் மிகவும் பரந்தளவிலும், அநேகமான அரபிகள் இன்றும் 7ம் நூற்றாண்டுக் குர்ஆனின் சொல்லகராதிக் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இதற்கு விடையாக அநேகமான அரபு முஸ்லிம்கள் வேறு ஆதாரங்களிலிருந்து வழியைத் தேடுகிறார்கள், அமாலின் கதையைப்போல.

அமால் 23 வயதையுடைய முஸ்லிம் யுவதியாகவும் புன்னகையால் பிரகாசிக்கக் கூடியவளாகவும் இருந்தாள். அநேகமான எகிப்தியர்களைப் போல் அவள் நட்புறவும் மேற்கத்திய பற்றும் கொண்டவள். இந்த பழக்கமானது அவளை ஒரு அமெரிக்க குடும்பமொன்றோடு நட்புக்கொள்ள செய்தது. அவர்கள் அவளுக்கு கிறிஸ்துவின் அன்பைக் காட்டினார்கள். இதன் வாயிலாக கிறிஸ்துவின் மீது விசுவாசம் ஏற்பட்டது.
அமாலியின் உடனடியான உத்வேகம் அவளுடைய விசுவாசத்தை அவளுடைய தாயிடம் பகிரச் செய்தது. அதன்பின் அவர்கள் இருவரும் ஒன்றாகஇயேசு (Jesus)” என்ற திரைப்படத்தைப் பார்த்தார்கள். பின்னர் அமாலின் தாயார் சிலைப்போல் உறைந்து அமர்ந்துவிட்டு அமாலிடம் கூறியதுஇதற்காக நான் உன்னை கொலை செய்யவேண்டும் இதைக்கேட்டு மாமாவுக்கு முடிந்தது ஏன் என் அம்மாவுக்கு முடியவில்லை” என்று திகைப்படைந்தாள்.

அமால் வீட்டைவிட்டு வெளியே வந்து ஹாட்டல் ஒன்றில் வேலைத் தேடிக்கொண்டாள். அவளுடைய எஜமான் அவளை அச் சுறுத்தி பாலியல் பலாத் காரத்திற்கு உட்படுத்த முயற்ச்சித்தார் .
அமாலி அதிலிருந்து தப்பியோடிய பொழுது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டாள். அதன் பின்பு அவர்கள் அவளிடம் யார் உன்னை மதம் மாற்றியது என்று கூறு அப்பொழுது உன்னைப் போகவிடுவோம் என்று அதட்டினார்கள்.

ஒரு வருடத்திற்குப் பிறகு நான் அமாலை காணும்போது அவள் ஒரு முஸ்லிம் தம்பதியினரின் வீட்டில் ஒழிந்து இருந்தாள். நான் அவளிடம் ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை கொடுத்து அவளை மீண்டும் சந்திப்பேன் என்று உறுதியளித்தேன். நான் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு ஒரு நாள் மட்டுமே உள்ளது என்று அறிந்திருந்தும் அப்படிக் கூறினேன்.

இந்த சகோதரியின் விசுவாசத்தை வலிமைப்படுத்திய வேத வசனங்கள் எதுவாக இருக்கும் என்று தொடர்ந்தும் வியப்பில் இருக்க அவள் இடம் கொடுக்கவில்லை. “இதை கேளுங்கள் என்று வாசிக்கத்தொடங்கினாள்.

“... அவர்கள் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள்.அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.” (மத்தேயு 10: 17-20)

அமாலி  நிமிர்ந்து என்னைப் பார்த்தாள் ,அவள் கண்களில் கண்ணீர் மல்கியிருந்ததைக்  காணக் கூடியதாக இருந்தது. ஆனாலும் அவள் புன்னகைத்துக் கொண்டிருந்தாள், “அவர் அறிந்திருக்கிறார் என்று சத் தமாகக்  கூறினாள். இப் பொழுதும்  இயேசு என் நிலைமையை அறிந்திருக்கிறார், அவர் எப்பொழுதும் என்னுடன் இருப்பார், அவர் என்னை ஒருபோதும் கைவிடமாட் டார் என்றாள்.

ஜெபம் செய்வோம்:

  • அமாலைப்போல துன்புறுத்தலினால் பாதிக்கப்படும் முஸ்லிம் விசுவாசிகளுக்காகவும், மற்றும் இயேசுவுக்குள்ளான அவர்களின் விசுவாசத்துக்காகவும் ஜெபிப்போம்.
  • அரபு உலகின் இளைஞர்களுக்காக, அவர்களுக்கு எவ்விதமான துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் ஏற்படாமல் கிறிஸ்த விசுவாசத்தைப் பற்றிக் கற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை அளிக்குமாறு ஜெபிப்போம்.
  • அரபு உலகிலுள்ள அரசியல், மதத்தலைவர்கள் அந்த மக்களுக்கு இறைவனைப்பற்றிய சொந்த அபிப்பிராயத்தை அல்லது விளக்கத்தை தெரிந்துக்கொள்ள சுதந்திரத்தைக் கொடுக்குமாறு ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?