அடிப்படைவாதிகளுக்கு எதிராக


லூடன்:

இங்கிலாந்தின் இலன்டன் நகரிலிருந்து 40 மைல் வடக்கில் லூடன் தீவு அமைந்துள்ளது. அது பல கலாச்சாரங்களுடைய வசதிபடைத்த வௌ்ளையர்களின் நகரங்களில் ஒன்றாகும்.
இதன் சனத்தொகையில் 25 வீதமானவர்கள் முஸ்லீம்களாகும். 1990 களிலிருந்து இந்த நகரம் தீவிரவாதத்தின் தலைமையகமாக அறியப்படுகிறது.

 சமீப காலமாக இடதுசாரிகளின் முஸ்லீம்களுக்கு எதிரான எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. மார்ச் 2009ம் ஆண்டு, ஒரு சிறிய இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு பிரித்தானிய இராணுவ அனுவகுப்பு நடக்கும் இடத்தில் எதிர்ப்பு ஆராப்பாட்டத்தை நடத்தினார்கள். அடுத்த வாரமே எதிர்ப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்தன. ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றும் நடந்தது.

இதனால் முஸ்லீம் விரோத ஆங்கில பாதுகாப்புக் கழகம் (EDL) மிகவும் வேகமாக நாடு பூராவும் பரவியது.

இந்த குழப்பங்களை கண்கண்ட சாட்சியாக பீடர் அடம்ஸ் என்கிற உள்நாட்டு சபை ஊழியர் ஒருவர் இருந்தார். அவர் சமாதானத்தை கட்டியெழுப்பும் ஒப்புரவாக்குதல் ஊழியத்தை செய்துகொண்டிருந்தார். மறுநாள் முஸ்லீம் விரோத எதிர்ப்புகள் சமூக ஊடகங்களில் இருப்பதை கண்டார்சபைத் தலைவர்களுடனும் முஸ்லீம் நண்பர்களுடனும் அதனைப்பற்றி பேசினார்.

சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பெரும்பான்மையாக வாழும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் என்பதை புரியவைத்தார்.
குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த மசூதி இமாமுடன் கிறிஸ்த iலைவர்களும் முஸ்லிம் தலைவர்களுமாக இணைந்து 2009ம் ஆண்டு மே மாதத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள்.“இந்த அடிப்படை வாதக்குழுக்களைபெரும்பான்மையான முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நாம் இரு இனங்களும் ஒற்றுமையாக புரிந்துணர்வோடு வாழ்வோம். நாங்கள் எங்கள் வேதங்கள் சொல்கிறபடி எங்கள் அயலவர்களை நேசிப்போம் என்று உறுதியளிக்கிறோம். நாங்கள் வித்தியாசமானவர்கள். வெறுப்புக்கும் கலவரத்துக்கும் மாறாக, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் நம்புவோம். நல்லிணக்கம், பரஸ்பர நல்லென்னத்துடன் நேர்மையாகவும் நிம்மதியாகவும் வாழ்வோம் என்று உறுதியளிக்கிறோம்.”

அந்த அர்ப்பணிப்பு வளர்ச்சியுற்றது. அவர்கள் மத்தியில் பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க, நற்புறவை பேண EDL அதற்கு என்று ஒரு தனி பிரிவையும் உருவாக்கியது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் மேற்கத்தேயஜனநாயகமும் இனிமேல் மோதாது என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். துரதிஷ்டவசமாக கிறிஸ்தவ குரல்கள் அடிக்கடி மோதலை துண்டுவதாகவுள்ளது.

நாங்கள் வேறு ஒருவழியை கண்டுகொள்ளவேண்டும். எனது முஸ்லீம் நண்பர்களுக்கு தெரியும் எனது விசுவாசத்தைப் பற்றி. அவர்கள் அதனை மதிக்கிறார்கள். அவர்களும் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புவதையும் அவர்கள் அறிவார்கள். ஆனால் கிறிஸ்தவர்ளின் பயத்தாலும் வெறுப்பாலும் கிறிஸ்து அந்த முஸ்லீம்களை இழந்துவிடுகிறார் என்று பீட்டர்தெளிவுபடுத்தினார்.

ஜெபம் செய்வோம்

           
  •  2யோவான் 4:18: அன்பிலே பயமில்லை; பூரணஅன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்;” என்பதற்குஅமைய கிறிஸ்தவ சமுதாயத்தை தேவன் அன்பினால் நிறப்பவேண்டும் என ஜெபிப்போம்.
  • முஸ்லீம்களின் எதிர்மறையான கருத்துக்களுக்கு ஏனைய முஸ்லீம்களே பதில் கொடுக்கவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • அயலில் வாழ்கிற கிறிஸ்தவர்கள் கறிஸ்துவின் அன்பை முஸ்லீம்களுக்கு காண்பிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்க வேண்டும் என ஜெபியுங்கள்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?