இறை பிரசன்னத்தைத் தேடி எனது பயணம்

ஒரு இஸ் லாமிய பின் னணி விசுவாசியின் சாட் சி:

நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன். எனது சில சகோதரர்கள் உலக வாழ்க்கை வாழ்கிறவர்கள். சிலர் மதப்பற்று கொண்டவர்கள்.
 எனது தந்தை ஒரு சூபி மதவைராக்கியம் கொண்டவர். அவர் என் வாழ்க்கையில் மிகவும் தாக்கம் செலுத்தினார்

எனக்கு பத்து வயதாக இருக்கும்பொழுது உண்மையான இறைவனை தேட ஆரம்பித்தேன். என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் அவரை நெருங்குவதற்கு, அவர் பிரசன்னத்தை பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்தேன்.
எனது வாலிப பருவத்திலும் இந்த தேடுதலை தொடர்ந்தேன். பள்ளிக்குச் சென்று தொழுவது, நோன்பு பிடிப்பது போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டேன்.

நான் கடமைக்காக தொழுகை செய்யவில்லை. எனது முழு உள்ளத்துடனும் இறைவனை அழைத்தேன்.

ஆனாலும் இஸ்லாமிய இறைவன் எனக்கு மிகவும் தூரமாகவே இருந்தார். அந்த நேரத்தில் நான் மேற்படிப்புக்குச் செல்லவேண்டியிருந்தது. இறைவனை தேடுவதை கைவிட்டேன்.
ஒரு நாள் மாலை வேளையில் நான் எனது நண்பர்களுடன் கைரோ நகர வீதியில் நடந்துகொண்டிருந்த போது முதல்முறையாக சுவிசேஷத்தை செவிமடுத்தேன். மறுப்பிறப்படைந்த ஒரு கிறிஸ்தவர் எங்கள் இருவரின் பொது நண்பருக் கூடாக இயேசுவைப்பற்றி எனக்கு அறிவித்தார். ஒரு வாரத்திற்கு பிறகு நான் அவருடன் திருச்சபை ஆராதனைக்குச் சென்றேன்.

 நான்கு வாரங்களில் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்! எனது அனுவபம் ஒரு புது விசுவாசியின் விளகம் போன்றதே வந்து உன்னைப்பற்றி அறிந்துகொள். இயேசு ஜீவிக்கிறார். அவர் சுகம் கொடுத்து மக்களை விடுவிக்கிறார்’. அன்று மாலை முதல்முறையாக இயேசுவிடம் பிரார்தித்தேன். எது சரியான வழி? இறைவனிடம் செல்கின்ற வழி கிறிஸ்துவா?’ என்று கேட்டேன். அதற்கு பதில் ஆம் என்று இருந்தது. உடனேயே இறைவனுடைய பிரசன்னத்தால் நான் நிறைந்தேன். பரலோக சமாதானமும் சந்தோஷமும் என்னில் நிரம்பியது. நான் இயேசுவுக்கு சரி என்று சொன்னதிலிருந்து கிறிஸ்தவனாக மாறிவிட்டேன்!

 சில சமயங்களில் குடும்பத்திலிருந்தும் சமுதாயத்திலிருந்தும் பல துன்புறுத்தல்களை சந்திகவேண்டியுள்ளது. அவை எல்லாவற்றிற்கும் மேலாக இறை பிரசன்னம் என்னை தாங்குகிறது.

ஜெபிப்போம்

  • முஸ்லீம்கள் ஒரு மதத்தை தேடாமல் உண்மையான இறைவனை தேடவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • விசுவாசத்தை வெளிப்படுத்த தடையாக உள்ள பிரதேசங்களில் வாழும் இஸ்லாமிய பன்னணி விசுவாசிகள், சாட்சியான வாழ்க் கையை கொண்டு தங்கள் குடும்பத்தாருக்கும் நண் பர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கவேண்டும் என்று ஜெபிப்போம்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?