தேவ ஆட்டுக்குட்டி
வட ஆபிரிக்கா:
ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படைகள் வட ஆப்ரிக்காவின் கரையோரங்களை கைப்பற்ற முன்னர் வரை வட ஆப்ரிக்கா கிறிஸ்தவத்தின் துடிப்பான ஒரு தாயகமாகத் திகழ்ந்தது. இஸ்லாமிய ஷரீஆ கிறிஸ்தவ சமுதாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கியது. இன்று வட ஆபிரிக்காவில் 100 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள். மவுரித்தேனியா, மேற்கு சகாரா, மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா, மற்றும் லிபியாவின் மக்கள் தொகையில் 98-100 சதவீதம் முஸ்லீம்கள் ஆவார்கள். வட ஆப்பிரிக்கா, அதன் வரலாற்றில் அலையலையான ஆக்கிரமிப்பாளர்களை கண்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களுடைய அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளார்கள். ஆனால் அரேபியர்கள் ஆட்சி, மதம் இரண்டிலும் மேலாதிக்கம் செலுத்திவிட்டார்கள்.
20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனித்துவத்துக் குள்ளானாலும் வட ஆபிரிக்கா, அரேபிய கலாச்சாரத்தையும் இஸ்லாமிய மதத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை.
ஆயினும் வட ஆபிரிக்க நாடுகளின் மையத்தில் பாபேரி இன பழங்குடியினர் தங்கள் கலாச்சாரத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் வட ஆபிரிக்கா அவர்களின் பூர்வீகமாகும்.
பல நூற்றாண்டுகளாக கலாச்சார அடக்குமுறை நடந்துகொண்டிருந்தாலும், குறைந்த பட்சம் 19 வேறுபட்ட பாபேரிய மக்கள் குழுக்கள் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பாபேரிய மொழிகளை பேசக்கூடிய 30-40 மில்லியன் பாபேரியர்கள் உள்ளனர். சகாரா பாலைவன நாடோடிகள் (1.2 மில்லியன்), வடக்கு மொராக்கோ ரிபீ (4-6 மில்லியன்) மற்றும் அல் ஜீரிய கபாய்ல் பாபேரியர்கள் (5-6 மில்லியன்) அவர்களுன் அடங்குகின்றனர். அவர்களின் எண்ணிக்கையை சரியாக கணிக்க கடினம் என்றாலும், அவர்கள் மத்தியில் உருவாகும் புதிய சபைகள் கிறிஸ்து உயிரையே கொடுத்த நல்ல மேய்ப்பன் என்பது அவர்கள் விசுவாசத்தை உறுதியாக்குகிறது.
பாபேரிய கிராமங்கள் உள்ள மலை அடிவாரத்தின் வழியில் நான் பயணித்து, பாபேரிய விசுவாசிகளின் வீடுகளையும் ஆலயங்களையும் சந்தித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு வீட்டில் நல்ல மேய்ப்பன் இயேசுவின் படத்தை கண்டேன்.
அதில் பாபேரிய மொழியில் “நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக உயிரையே கொடுப்பான்” என்ற வாசகம் எழுதியிருக்கக் கண்டேன். சைனப் என்ற பாபேரி பெண் “எங்களுக்கு மேய்ப்பனை பற்றி நன்றாக தெரியும். ஏனெனில் எங்களிடம் மந்தைகள் உள்ளது. ஒரு மேய்ப்பன் எந்த அளவுக்கு மந்தைகளை நேசிப்பான் என்றும் மந்தைகள் அவன் உள்ளத்தை நன்றாக அறிந்திருக்கும்” என்றும் எனக்கு விளக்கம் கொடுத்தாள். இந்த பாபேரிய விசுவாசிகள் மேய்ப்பன் இல்லாத ஆடுகள் இல்லை. அவர்கள் தங்கள் மேய்ப்பனின் சத்தத்தை கேட்கிறார்கள்.
ஜெபம் செய்வோம் :
- வட ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் கிறிஸ்தவ இயக்கங்களை அரபுமயம், இஸ்லாமிய மயமாக்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக ஜெபிப்போம்.
- பாபேரிய சுவிசேஷ மொழிபெயர்ப்புகள் வட ஆபிரிக்காவில் மறைந்து வாழும் பாபேரிய பழங்குடியினருக்கு விசுவாசத்தை கொடுக்க வேண்டும் என்று ஜெபிப்போம்.
- வேத மொழிபெயர்ப்பு, வானொலி, செயற்கைக்கோள் தொலைக்காட்சி, மற்றும் உள்நாட்டில் நேரடியாக சாட்சி பகிர்கிற வட ஆப்பிரிக்க கிறித்தவர்களுக்காக ஜெபிப்போம்.
Comments
Post a Comment