எப்போழுது ரமளான்?
ரமளான் மாதம் என்பது இஸ்லாமிய மாதங்களுல் ஒன்றாகும். இது சந்திர நாட்காட்டியிலிருந்து கணிக்கப்படுவதால் ஒவ்வொரு வருடமும் 11 நாட்கள் முன்பாகவே ரமளான் ஆரம்பமாகிவிடும். பிறை கண்டே தீர்மானிக்கப்படுவதால் நாட்டுக்கு நாடு ரமளானின் ஆரம்பமும் முடிவும் வேறுபடலாம்.
ஓவ்வொரு முஸ்லீமும் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து சகர் எனும் உணவை சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிக்கவேண்டும். சூரியன் அஸ்தமிக்கும் வரையில் எந்த ஒரு உணவோ குடிபானமோ அருந்துவது தடையாகும். சூரியன் மறையும் பொழுது உணவருந்த ஆரம்பிக்கவேண்டும். அது இப்தார் என்று அழைக்கப்படும். நோயாளிகள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர அனைத்து முஸ்லீம்களுக்கும் ரமளான் மாதத்தில் நோன்பு பிடிப்பது கட்டாய கடமையாகும்.
நாம் ஏன் ரமளான் மாதத்தில் ஜெபிக்கவேண்டும்?
30 நாட்கள் ஜெபம் ரமளான் மாதத்தில் திட்டமிடப்பட்டதற்கான காரணம் அந்த மாதத்தில் தான் முஸ்லீம்களும் தங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒன்றாக நோன்பு பிடித்து நோன்பு திறக்கும் போது ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொள்ள உதவியாக அமையும். முஸ்லீம்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது கிறிஸ்தவர்களும் மிகவும் அக்கறையாக அவர்களுக்காக ஜெபிக்க உதவியாக அமையும். தங்கள் விசுவாசத்தை குறித்து ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டு, உண்மையான இறைவனை பற்றி அதிகம் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதால் இந்த மாதத்தில் முஸ்லீம்களுக்காக ஜெபிப்பது மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
Comments
Post a Comment