சுவிசேஷம் ஊடுருவுகிறது!


கம்போடியாவின் மேற்கு சாம் மக்கள்

2000 ஆம் ஆண்டில், கென்டி உடல் சுகயீனமுற்ற நிலையை கம்போடியாவின் கிராமபுறத்தில் வாசித்துவந்தாள். பிள்ளைகளோடுகூட கணவனாலும் கைவிடப்பட்ட நிலையிலிருந்த அவளுக்கு அங்கு நல்ல சிகிச்சை பெற்றுக்கொள்ளவது மாபெரும் சவாலாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தம்பதியினரை கென்டி சந்தித்தாள். கென்டியின் மொழியை கற்றிருந்த அந்த தம்பதி, கவனமாக அவளுக்குச் செவிகொடுத்தார்கள். தேவ பிள்ளைகளால் நடந்தப்படுகிற மேசி மெடிகல் சென்டர் என்ற ஸ்தாபனத்தை அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள்.

அது ஏழைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கும் ஒரு இடமாகும். இந்த இடத்தில் கென்டி இயேசுவைக் குறித்தும், அனைத்து மக்களுக்குமான அவருடைய தியாகத்தைக் குறித்தும் அறிந்துக்கொண்டாள். கென்டியின் மக்கள் சாம் இனத்தை சேர்ந்தவர்கள். கம்போடிய மாகாணங்கள் எங்கும், எங்கு பெரிய ஆறுகள் உள்ளனவோ அங்கே இவர்களை காணலாம்.
இவர்களுடைய பூர்வீகம் பண்டைய சம்பா சாம்ராஜ்யம் என்று அழைக்கப்படுகின்ற இன்றைய வியட்னாம் ஆகும். வியட்னாமியருடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக பெருந்தொகையான சாம் இனத்தவர்கள் கம்போடியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்கள் வட சாம் மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மேலும் 80,000 சாம் மக்கள் வியட்னாமில் வாழ்கிறார்கள். இவர்கள் கிழக்கு சாம் மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மிகவும் குறைவான சாம் மக்களே இயேசு பற்றி அறிந்துள்ளார்கள்.
2000ம் ஆண்டுகளில், தேவன் தன்னுடைய ஒரு ஊழியருக்கு வாரம் தோரும் இந்த சாம் மக்களுக்காக ஜெபிக்குமாறு உணர்த்தினார். தொடர்ந்து அந்த ஜெபத்தில் இன்னுமொரு பெண்ணும் இணைந்துகொண்டாள். 2014ம் ஆண்டுகளில் பல நாடுகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த ஜெபத்தில் கழந்துகொண்டார்கள். இது இன்றுவரை தொடர்கிறது. இன்று அயிரக்கணக்கானவர்கள் சாம் மக்களுக்காக ஜெபிப்பததை காண்கிறோம்.

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த தம்பதியினர் கென்டியை சந்தித்தனர். அப்பொழுது அவள் பூரண சுகம் அடைந்து, கணவன் மகனுடன் உண்மையான விசுவாசியாக காணப்பட்டாள். மற்றவர்கள் கென்டியிடம் கேட்கின்ற அநேக கேள்விகளுக்கு பதில் தெறியாதவளாக அவள் இருந்தாள்.

அந்த தம்பதியினர் அவள் கிராமத்தில் ஒரு வேத படிப்பை ஆரம்பித்தார்கள். இப்படியாக சாம் மக்கள் மத்தியில் சுவிசேஷம் ஊடுருவுகிறது!

ஜெபிப்போம்

  •  கென்டியின் குடும்பத்தைபோன்று அந்த கிராமத்திலுள்ள அனைவரும் விசுவாசத்தில் வளரவேண்டும் என்று ஜெபிப்போம்.
  •  வேதம் அவர்கள் சொந்த மொழியில் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • சாம் மக்கள் கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ளும் இயக்கமாக மாற ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?