ரமளான் என்றால் என்ன?
உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களின் இருந்து 1.57 பில்லியனுக்கும் மேற்பட்ட இஸ்லாத்தை தழுவியவர்கள், பல்வேறு மரபுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
கிறிஸ்தவம், யூத மதத்திலும் இதேபோன்ற பிரிவுகள் காணப்படுகின்றன. ஆனால் முஸ்லீம்கள் பழக்கவழக்கங்களிலும் நடைமுறைகளிலும் வேறுபடுகின்றனர். இஸ்லாத்தின் மையம் கட்டளைகள் என்றே விளக்கம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் முஸ்லீம்களை புரிந்துகொள்ளவேண்டும் என்றால் இணையத்தளத்தில் படிப்பதும் கேள்விப்படும் செய்திகளுக்கூடாக அறிந்து கொள்வதும் போதுமானதல்ல. ஒவ்வொரு தனி முஸ்லீமின் வாழ்க்கையிலும் அவனது விசுவாசப் பயணம், குடும்ப கலாச்சாரம், அனுபவங்களில் மாற்றங்கள் உள்ளன. அனேகமான முஸ்லீம்கள் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்:
- ஷஹாதா- விசுவாச அறிக்கை
- ஸலாத்- ஒவ்வொரு நாளும் ஐந்து முறை தொழுதல்
- ஸகாத்- ஏழைகள், தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்தல்
- சவ்ம்- ரமளான் மாதம் முழுவதும் நோன்பு பிடித்தல்
- ஹஜ்- மக்காவுக்கு புனித யாத்திரை செல்லுதல்.
நோன்பின் நோக்கம் sawm என்ற அரபு சொல்லுக்கு “தவிர்த்துக் கொள்ளல்” என்று அர்த்தமாகும். ரமளான் மாதத்தில் உணவு, பாணத்தை மட்டும் அல்ல தீய செயல்கள், எண்ணங்கள், வார்த்தைகளில் இருந்தும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமாகும். இந்த ரமளான் மாதத்தில்தான் குர்ஆன் முஹம்மது நபிக்கு இறக்கப்பட்டது என்று இஸ்லாமியர் நம்புகின்றனர். இந்த மாதத்தில் சூரிய உதயத்திலிருந்து அது மறையும் வரையில் ஒன்றுமே உண்ணாமலும் குடிக்காமலும் இருப்பதை நோன்பு பிடித்தல் என்று சொல்வார்கள். நோன்பு பிடித்திருக்கும் சமயத்தில் புகைபிடிப்பதையும் உடலுறவையும் தவிர்ப்பார்கள். இது அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இது ஆத்துமாவையும் உடலையும் சுத்தப்படுத்தி இறை வழிபாட்டில் கவனம் செலுத்த ஒரு சுய கட்டுப்பாட்டு பயிற்சி முறையாகும்.
ரமளான் மாதம் முழுவதும், குடும்பங்களும் நண்பர்களும் மாலையிலிருந்து இரவு முழுவதும் ஒன்றாக இணைந்து உணவுகளை பறிமாறிக்கொள்வார்கள். இது வணக்க வழிபாடுகளையும் நன்மையான காரியங்களையும் குறிந்து சிந்திப்பதற்கு ஒரு நல்ல தருணமாகும். முஸ்லீம்கள் இந்த மாதத்தில் தங்கள் விசுவாசத்தை குறித்தும் வாழ்க்கையை குறித்தும் ஆராய்ந்து பார்ப்பதற்கும், ஒருவருக்கொருவர் சமாதானம் செய்துகொள்வதற்கும், குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளவும், பொதுவாக ஒரு நல்ல மனிதனாக மாற அழைக்கப்படுகின்றனர்.
Comments
Post a Comment