Posts

Showing posts from May, 2016

2016 இன் 30 நாட்கள் ஜெபத்துக்கு உங்களை வரவேற்கிறோம்!

Image
அன்பார்ந்த ஜெப தோழர்களே , கடந்த ஆண்டு 30 நாட்கள் ஜெபத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகமானவர்கள் கலந்து கொண்டதை நாம் காணக் கூடியதாக இருந்தது ! ஆராய்ச்சியாளர் டேவிட் கெரிசன் அவர்களின் இஸ்லாமிய வீட்டுக்குள் ஒரு காற்று என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட எழுச்சியூட்டும் கட்டுரைகள் ஜெப வழிகாட்டி புத்தகத்துக்கு உற்சாகத்தை கொடுக்கும் சாட்சிகளாக அமைந்தது . நாம் இஸ்லாமிய வீட்டின் ஒன்பது அறைகளையும் ஆராய்ந்து , தொடர்ந்தும் எப்படி , எங்கே கிறிஸ்து முஸ்லீம் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கிறார் என்பதை இந்த வருடமும் டேவிடிடமிருந்து அறிந்துகொள்வோம் .  இந்த ஆண்டு நாம் இஸ்லாமிய வீட்டுக்குள் அனைத்து வகையான இயக்கங்கள் பற்றியும் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம் . போர் , பயங்கரவாதம் முஸ்லீம் உலகம் முழுவதும் பரவியுள்ளது . லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாதுகாப்பான வாழ்க்கையைத்தேடி நம்பிக்கையோடே புதிய இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் . இந்த இடம்பெயர்வு முஸ்லீம்கள் கிறிஸ்துவை சந்திக்க அதிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது .

யஹ்யா நபி சொன்ன ஷஹாதா

Image
(யஹ்யா) யோவான் 3:22-36 22 இவைகளுக்குப்பின்பு , ஈஸா அல் மஸீஹ்வும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள் ; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து , ஞானஸ்நானங் கொடுத்துவந்தார் . 23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால் , யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான் ; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள் . 24 அக்காலத்தில் யஹ்யா காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை . 25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று . 26 அவர்கள் யோவானிடத்தில் வந்து : ரபீ , உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே ; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே , இதோ , அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார் , எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள் . 27 யஹ்யா பிரதியுத்தரமாக : பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய , அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான் . 28 நான் கிறிஸ்துவல்ல , அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு