சத்தியத்தைத் தேடி தாஜிகிஸ்த்தான்:
பாரசீக அறை
மத்திய ஆசியாவிலே 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட தாஜிகிஸ்தான் ஒரு மிகச் சிறிய நாடாகும். இதில் 70 விகிதமானோர் 30 வயதிற்கும் குறைந்தவர்கள்.
அதிகமாக சுன் னி முஸ்லிம் இளைஞர்களைக்கொண்டுக் காணப்படும் தாஜிகிஸ்தான் இயேசுவைக் குறித்து ஆர்வமாய் இருக்கிறதா?
நாம் யோவான் சுவிசேஷத்தை கற்றுக்கொண்டிருந்த வேளையில், “உண்மையிலே நாம் இயேசுவின் மந்தைக் கூட்டத்தில் ஒருவர் என்று எப்படி எங்களுக்குத் தெரியும்?” என்று அலி என்ற தஜிக் மாணவன் கேட்டார்.
அலி மற்றும் மூன்று மத்திய ஆசிய இளம் மாணவர்களோடு வாராந்த வேதாகம பாடத்தினை படித்துக் கொண்டிருந்தோம். அலிக்கு இயேசுவோடு உள்ள இந்த ஆர்வமானது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் தொடர்ச்சியாக வாசிப்பதற்கு ஒரு பைபிளை தரும்படிக்கேட்டார்.
கோடைக்கால விடுமுறையில் தன்னுடைய குடும்பத்தை பார்க்கச் செல்லும் போது பைபிளையும் தன்னோடு எடுத்துச்சென்றார். ஆறு வாரங்களுக்குப் பின்னர், பாடசாலை ஆரம்பமான போது, அவர் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பினார். ஆனால் அவர் பைபிளை கொண்டுவரவில்லை.
நான் சற்று குழப்பமடைந்து “யார் உங்களிடமிருந்து பைபிளை எடுத்தார்?” என்றுக் கேட்டேன்.
அ வர் பிரச்சினையில் மாட்டிக்கொண்டாரா? அவருடைய பைபிள் அபகரிக்கப்பட்டு விட்டதா?
அலி சொன்ன செய்தி, எங்களுக்கு ஆச்சரியத்தையும் மிகுந்த உற்சாகத்தையும் தந்தது: தனது
தங்கையின் இயேசுவைப் பற்றிய தேடலிலுக்கு அந்த பைபிளை கொடுத்துதவியதாகச் சொன்னார்.
நாங்கள் மேலும் விசாரிக்கையில், ‘அவள் எப்பொழுதும் கதைகள், திரைப்படங்கள், இசை போன்ற அனைத்து விடயங் களிலும் இயேசுவைப் பற்றிய செய்திகளை தேடுவாள். அவள் இயேசுவின் பிள் ளை. நல்லதொரு முஸ்லிம்.’ என்ற அலியின் வார்த்தைகள் எங்களுக்கு மேலும் நம்பிக்கையை கொடுத்தது.
“அறுப்பு தயாராக இருக்கிறது” என் று இயேசு எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். ஏழ்மையில் இருந்தாலும், அடையவதற்கு கடினமான தாஜிகிஸ்த்தானைப் போல் இருந் தாலும், அலியும் அவருடைய தங்கையையும் போன்று இன்னும் அநேகமான முஸ்லிம்கள் சத்தியத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏக்கத் துடன் இருக்கிறார்கள். அதை அவர்கள் இயேசுவிடம் கண்டடைவார்கள்.
நாம் இயேசுவின் மந்தைகள் என்பதை எப்டி சரியாக அறிவோம்?
ஜெபம் செய்வோம்:
- தாஜிக் மக்களின் உள்ளங்கள் இயேசுவின் வார்த்தைகளுக்கு திறந்து இருக்கவும், அவர்களுக்கு அன்போடு சுவிசேஷத்தை பகிர வாய்ப்புகள் கிடைக்கவும் ஜெபிப்போம்.
- தற்போது தாஜிகிஸ்தானில் மிகவும் குறைவான விசுவாசிகளே உள்ளனர். உள்ள சபைகள் இன்னும் பலப்படவும் இன்னும் அதிகம் சபைகள் உருவாகவும் ஜெபிப்போம்.
- தாஜிக் மக்களின் மத்தியில் இயேசுவைத் தேட பசித்தாகம் கொண்டவர்களுக்காகவும், ஆப்கானிஸ்த்தான், உஸ்பகிஸ்தான், ரஷ்ய மக்களுக்காகவும், அனேக ஊழியக்காரரை தாஜிக் மக்கள் மத்தியில் தேவன் அனுப்ப வேண்டும் என்றும் ஜெபிப்போம்.
Comments
Post a Comment