Posts

Showing posts from July, 2013

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

நாள் 23                    ஆகஸ்டு 01, 2013           நாம் வாழும் நவீன உலகைப் புரிந்து கொள்ளுவோம். ஷரிஆ என்பது   அரசியல், இறையியல், இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக ( முகமது நபியின் மறைவிற்குப் பின் ) ஆயிரம் வருடங்களாக உருவாக்கப்பட்ட சட்டங்களாகும். கோடிக் கணக்கான முஸ்லீம்களுக்கு இது மார்க்கமாகவுள்ளது. கடுமையான ஷரிஆ சட்டம் 35 நாடுகளிலும் , சற்றுக் குறைந்த அளவில் மற்ற முஸ்லீம் நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது . முஸ்லீம் குடும்ப விவகாரங்களில் , இந்தச் சட்டம் இரட்டை அமைப்பாக பல மேற்கத்திய நாடுகளின் கோர்ட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . பல உண்மையான முஸ்லீம்களுக்கு அடிப்படையான மதச்சட்டங்களான தொழுகை , நோன்பு , சக்காத் போன்றவைகள் தவிர ஷரியாவைக் குறித்து வேறு ஒன்றுமே தெரியாது. ஷரீஆவின் பிரயோகம் ஷரீஆவில் இஸ்லாமிய சட்டத்தின் பிரிவுகளும் , தலைப்புகளும் இருக்கின்றன . இவைகள் ஃபிக்குகின் ( இதன் அர்த்தம் ‘ புரிந்து கொள்ளுதல் ’) கிளைகள் என்று அழைக்கப்படுகின்றன . அவைகள் இஸ்லாமிய தொழுகை , சொத்து

“ஒரு போதும் கைவிட்டுவிடாதே”

நாள் 22                ஜுலை 31,  2013 சோமாலிய தேசதத் தின் உபத்திரவப்படுத்தப்படுகின்ற அகதிகள். “ஹா ரஜோ திங் ”  “ ஒரு போதும் கைவிட்டுவிடாதே ” சூடான பாலைவனக் காற்று , கென்யாவில் உள்ள தாடாப் முகாமில் உள்ள அகதிகளின் கூடாரங்களை குலுக்கிக் கொண்டிருந்தது . கதிஜா , சோமாலியாவில் இருந்து வந்திருந்த 5 இலட்சம் பேரோடு அங்கு பாதுகாப்பைத் தேடினாள் . உள்நாட்டுப் போரின் விளைவாக 20 வருடங்களாக தொடர்ந்து அனுபவித்த வந்த பாடுகளுக்குப் பின் , கதிஜா தன் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடினாள் . அவள் அதிக தூரம் செல்ல முடியவில்லை . பெரும்பாலான மற்றவர்களைப் போல அவளும் ஒரு அகதி , இந்த முகாம் அவளுக்கு ஒதுக்கப்பட்டது . வீட்டிற்குத் திரும்ப முடியவில்லை காரணம் போர் நடந்து கொண்டிருந்தது . மேலும் அவர்களை வரவேற்கும் நாடுகள் இல்லாததால் வேறு இடத்திற்கும் செல்ல முடியவில்லை . தாடாப்தான் ஐக்கிய நாடுகளின் மிகவும் பெரிய உலகலாவிய அகதிமுகாமாகும். ஒரு முழு தலைமுறை தாடாபில் பிறந்து அகதியாக வாழும் கடினமான வாழ்க்கை ஒன்றையே அறிந்ததாக வளர்ந்திருக்கிறது .