ஒரு நிச்சயமற்ற பயணத்தில் சிரிய மக்கள்

அகதிகள்

சமீப காலம் வரையில் சிரியா ஒரு ஸ்தீரமான நாடாகும். விவசாயத்திலும் எண்ணை வளத்திலும் நல்ல வருமானத்தை பெற்று வந்தது. சிறுவர்களுக்கு நல்ல கல்வியும் கிடைத்தது.
ஆசாதின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அரசியல் எதிரிகளுக்கு எதிராக இரக்கமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பெரும்பான்மையும் சிறுபான்மையுமான சுன்னி ஷீஆ முஸ்லீம்கள் சமாதானமாகவே வாழ்ந்து வந்தார்கள். அரபு வசந்தம் நிலைமையை மாற்றிவிட்டது.

2011 இல் இருந்து உள்நாட்டு போர் வருடத்துக்கு வருடம் மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது. முழு சனத்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் தங்கள் தேசத்தை விட்டு எதிர்பார்ப்பில்லாத ஒரு பயனத்திலிருக்கிறார்கள். நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மற்ற நாடுகளிலேயே வாழ்கிறார்கள். அநேகருக்கு தங்கள்குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பமுடியவில்லை. அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று யாருக்குமே தெரியாது.

இந்த நிச்சயமற்ற பயணத்தில் நன்மையும் உள்ளது.  கடும் சட்டங்களுக்கும் அடக்குமுறைக்கும் கட்டுப்பட்டிருந்தவர்களுக்கு  சுதந்திரம் கிடைத்தது.

வெளிப்படையாக கிறிஸ்துவை அறிய ஆர்வம் காட்ட சந்தர்ப்பம்  கிடைத்தது. மதத்தின் பெயரால் இஸ்லாமிய அரசு செய்யும் கொடுமைகள் மதத்தைகுறித்து பலருக்கு கேள்விகளை எழுப்பியது.

அன்பின் வெளிப்பாடாக, உணவு பொதிகள், போர்வைகள், உஷ்னப்படுத்தும் கருவிகள், ஆலோசனைகள் வழங்குவதற்கூடாக தேவன் இந்த அனர்த்தத்தில் கிரியை செய்துகொண்டிருக்கிறார்.

சில இடங்களில் சபைகள், புதிய விசுவாசிகளால் நிறைந்துள்ளது. இன்னும் சிலருக்கு விசுவாசத்தைக் குறித்துப் பேச வழி திறந்துள்ளது.

சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து பெய்ரூத்தில் ஒரு சிறிய விடுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் எங்களுக்குண்டான எல்லாவற்றையும் விட்டுவிட்டு எமது பெரிய குடும்பம் இப்படி ஒரு சிறிய அறையில் இருப்பது கடினமாகதான் உள்ளது. எங்கள் பிள்ளைகளுக்கு பாடசாலையில்லை. ஆனாலும் இந்த சூழ்நிலைக்கு மத்தியில் விலைமதிக்க முடியாத இயேசுவை அறிந்து கொண்டோம் என்று ஆனந்தத்துடன் சொன்னார்கள்.

ஜெபம் செய்வோம்

  • சிரியாவில் மோதல்கள் முடிவுக்கு வருவதுசாத்தியமற்றதாக தோன்றுகிறது.  ஆனால் இறைவனால்கூடாத காரியம் ஒன்றும் இல்லை. ஆகவே மோதல்கள் முடிவுக்கு வர ஜெபிப்போம்.
  • மில்லியன் கணக்கான அகதிகளின் சரீர, மன ரீதியான தேவைகளுக்காக மன்றாடுவோம்.
  • சபைகள் முழு மனதுடன் அகதிகளுக்கு உதவவேண்டும் என்று மன்றாடுவோம்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?