1993 ஆம் ஆண்டு முதல்...
முஸ்லீம் உலகுக்கான 30 நாட்கள் ஜெபம்:
ஊக்குவித்தல், கல்வி புகட்டுதல், இயக்குவித்தல்.
இந்த கையேட்டுக்கூடாக வருடத்துக்கு வருடம் முஸ்லீம் உலகு மாற்றமடைந்து வருவதை அவதானிக்கின்றோம்.
30 நாட்கள் ஜெப கையேட்டின் நோக்கம் ஊக்குவித்தல், கல்வி புகட்டுதல், இயக்குவித்தலாகும். ஜெபத்துக் கூடாக முஸ்லீம் உலகை நேசிக்கவும், அவர்கள் சுமைகளை பகிர்ந்து கொள்ளவும், அவர்கள் வேதனைகளை புரிந்துகொள்ளவும் முடியுமாக இருக்கிறது. இதன் மூலம் இயேசுவின் கட்டளையான அயலானை நேசிக்கவேண்டும் என்ற கட்டளையை நிறைவேற்றுகிறோம்.
ஊக்குவித்தல்
30 நாட்கள் சர்வதேசம் முஸ்லீம் உலகை தேவன் எப்படி பார்க்கிறாரோ அதேவிதமாக பார்க்கக்கூடிய - தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்களாக ஒரு குழுவுடன் ஆரம்பித்தது. வாசகர்களும் அதேவிதமாக தேவ அன்பின் அறிவையும் ஜெபிக்கவேண்டிய விதத்தை தேவன் வழிநடாத்தவேண்டும் என்று ஜெபிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கல்வி புகட்டுதல்
இப்பொழுது, அநேக தகவல்கள் நம்மிடம் உள்ளது. அவை நம்மைச் சூழவுள்ள உலகை புரிந்துகொள்ள உதவுகிறது. அவர்களின் குரல்களை எதிரொலிக்க முயற்சிக்கிறது. 30 நாட்கள் சர்வதேசம் முஸ்லீம்களிடமிருந்தே அவர்கள் உலகை பற்றிய தகவல்களையும் அவர்கள் கலாச்சாரம் மற்றும் இறையியல் பற்றியும் அறிவதே சிறந்தது என்று நம்புகின்றது.
இயக்குவித்தல்
ரமளான் மாதத்தில் ஜெபிப்பது கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அடையாளம்காண ஒரு பயனுள்ள வழியாகும். இந்த நேரத்தில், அநேக முஸ்லீம்கள் உண்மையான இறைவனை தேடுபவர்களாகவும், அவருடைய வழியில் நல்ல முன்னேற்றத்தை கண்டவர்களாகவும், அவருடைய தொடுதலுக்கு ஆளானவர்களாகவும் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிக்கின்ற கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் தேவன் செய்த காரியங்களை வருடம்தோறும் நாம் அறிக்கைகளாக பெற்றுவருகிறோம். உங்கள் முஸ்லீம் நண்பர்களுக்கு தேவன் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்திய விதத்தை பகிர்ந்து கொள்ளவும், உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு ஜெபிப்பதற்கூடாக நீங்கள் கற்றுக்கொண்டவைகளை பகிர்ந்து கொள்ளவும் இதுவே சரியான சந்தர்ப்பமாகும்.
30 நாள் ஜெப இயக்கத்தை குறித்து மேலும் அறிந்து கொள்ளவும், எப்படி தாக்கமுள்ள விதத்தில் ஜெபிப்பது என்று அறிந்து கொள்ள எமது இணையத்தளத்தை பார்க்கவும்: www.pray30days.org:
Comments
Post a Comment