சாம்ராஜ்ஜியத்திலிருந்து குழப்பத்திற்கு
ஈராக்:
கிறிஸ்துவுக்கு முன்பிலிருந்து இன்றுவரை ஈராக்கும் அதை சுற்றியுள்ள பிரதேசங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கானப்பட்டது. மொசபொதேமியா, டைக்ரீஸ், ஐப்பிராத்து நதிகள், பைபிளில் குறிப்பிடப்படும் நினிவே நகரம் மற்றும் பாபிலோன் ஆகியனவும் அரசியல், பொருளாதாரம் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
சமீப காலம்வரை பக்தாத், கலை மற்றும் விஞ்ஞான பல்கலைகழக நகரமாகவும் பிரசித்திப்பெற்றிருந்தது. ஆனால் இன்று அநேகமாக இதில் எதுவும் எஞ்சிக்காணப்படவில்லை.
பல ஆண்டுகளாக குண்டுவெடிப்பது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈராக்கின் பெறும்பகுதியிலும், இரண்டாவது பெரிய நகரமான மோசுலையும் சேர்த்து “இஸ்லாமிய தேசம்” என்ற தீவிரவாதக்குழு படையெடுத்தது.
இஸ்லாமிய தேசம் மோசமானதாக இல்லாவிடில் ஈராக்கில் கிறிஸ்தவர்கள், யூதர்கள், ஏனைய முஸ்லிம்களை அகற்றுவதற்காகவும் படுகொலைச் செய்தும், ஷீயா, சுன்னி ஒருவரோடொருவர் அரசியல் மற்றும் அரசியலற்ற காரணங்களிற்காகச் சண்டையிட்டுக்கொண்டும் இருக்கமாட்டார்கள். இனக் குழுக்களுக்கிடையிலான விரோதம் நாட்டை தொடர்ந்து பிரிவுக்குள்ளாக்கியது.
பக்தாத், சபாக், காகாய் போன்ற நகரங்களில் சிறுபான்மையினர் துன்புறுத்தல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பல வருட ஒடுக்குமுறைக்கு பின் குர்திஸ் மக்கள் தற்போது ஈராக்கிலே தங்களது தன்னாட்சியினை பலப்படுத்தி வருகிறார்கள்.
ஆனாலும் சில கிறிஸ்தவர்கள் முஸ்லிம் மற்றும் எசிடிஸ் மக்களுக்கும் உணவளிப்பது, போர்வைகள் வழங்குவது மற்றும் ஆலோசனை வழங்குவது போன்ற காரணங்களினால், கிறிஸ்துவுக்குள் வெளிக்காட்டும் அன்பின் காரணமாக பல முஸ்லீம்கள் இரட்சிக்கப்படும் இறை செயல்பாடுகளையும் காணக் கூடியதாகவுள்ளது.
சாலை நிறைந்துக் காணப்பட்ட வேளையில் கிறிஸ்துவைப் பற்றி அநேகம் தெரிந்துக்கொள்ள எத்தனித்தனர். ஆரம்பத்திலே ரகசியமாக இருந்த எசிடிஸ் இனத்தினர்
தங்கள் பாரம்பரிய நம்பிக்கையிலே சந்தேகங்கொண்டு இயேசுவைப் பின்பற்ற முனைந்தார்கள். பல குழப்பங்களையும் தாண்டி புதிய ராச்சியத்திற்கான துளிகளை எங்களால் காணமுடிகிறது.
ஜெபம் செய்வோம்:
- யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டுச் சென்றவர்களுக்கு தேவ கிருபையும் ஆறுதலும் கிடைக்க ஜெபிப்போம்.
- அனைத்து சிறுப்பான்மையினருக்குமான நிலையான நாடு உருவாகவேண்டுமென்று ஜெபிப்போம்.
- விடாமுயற்சியுள்ள கிறிஸ்தவர்களின் சாட்சிகள் மூலம் அநேகமானோர் கிறிஸ்துவை அறிந்துகொள்ள வேண்டும் என ஜெபிப்போம்.
Comments
Post a Comment