‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

நாள் 23                    ஆகஸ்டு 01, 2013          



நாம் வாழும் நவீன உலகைப் புரிந்து கொள்ளுவோம்.

ஷரிஆ என்பது  அரசியல், இறையியல், இராணுவம் போன்றவற்றை வளர்ச்சியடைய செய்யும்படியாக (முகமது நபியின் மறைவிற்குப் பின் ) ஆயிரம் வருடங்களாக உருவாக்கப்பட்ட சட்டங்களாகும். கோடிக் கணக்கான முஸ்லீம்களுக்கு இது மார்க்கமாகவுள்ளது. கடுமையான ஷரிஆ சட்டம் 35 நாடுகளிலும், சற்றுக் குறைந்த அளவில் மற்ற முஸ்லீம் நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. முஸ்லீம் குடும்ப விவகாரங்களில், இந்தச் சட்டம் இரட்டை அமைப்பாக பல மேற்கத்திய நாடுகளின் கோர்ட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல உண்மையான முஸ்லீம்களுக்கு அடிப்படையான மதச்சட்டங்களான தொழுகை, நோன்பு, சக்காத் போன்றவைகள் தவிர ஷரியாவைக் குறித்து வேறு ஒன்றுமே தெரியாது.

ஷரீஆவின் பிரயோகம்

ஷரீஆவில் இஸ்லாமிய சட்டத்தின் பிரிவுகளும், தலைப்புகளும் இருக்கின்றன. இவைகள் ஃபிக்குகின் (இதன் அர்த்தம்புரிந்து கொள்ளுதல்’) கிளைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் இஸ்லாமிய தொழுகை, சொத்து விதிகள், சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், நிர்வாகம், வரி விதிப்பு, அரசியல் சாசனம், சர்வதேச உறவுகள், யுத்தமும் ஒழுக்கமும் மற்றும் பல துணைப்பிரிவுகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. சுருங்கச் சொல்லப்போனால் அது ஒரு வாழ்க்கையின் முழு நெறி. அது, உணவுச் சட்டங்கள், வங்கி சம்பந்தமான காரியங்கள் துவங்கி கிலாபத் என்ற ஆட்சிமுறை வரை நடைமுறைக் காரியங்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.

உண்மையைச் சொன்னால் உலகமெங்கிலுமுள்ள பல இலட்சக்கணக்கான முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தின் கடுமையானபகுதிகளைக் கடைபிடிப்பதே இல்லை              (பல நேரங்களில்  அவற்றைப்   பற்றி            அறியாமலேயே இருக்கிறார்கள்). முஸ்லீம்களுக்கு சட்டம் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இது ஆதாரமாக            இருந்தாலும், உலகமெங்கும்        ஷரியா சட்டம், பல்வேறு மற்றும் வித்தியாசமான வழிகளில், அளவுகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனுடைய முக்கிய ஆதாரம் குரானும் சுன்னாவுமாகும். ஆனால் எந்த ஒரு சட்ட அமைப்பிலும் இருப்பது போல அதைக் காத்துக் கொள்வதில் வித்தியாசங்கள் உண்டு, எனவே அதைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் எங்கும் விவாதம் செய்கின்றனர். ஒரு பக்கத்தில் விபரீத உதாரணங்களாக ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஷரியா நடைமுறைப் படுத்தப்பட்டதை நாம் பார்க்கிறோம். ஆனால் மற்றொரு பக்கத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் உலகமயமாக்கப் பட்ட உலகில் அதின் கடினான பகுதி ஒத்து வராது என்று நிராகரிக்கின்றனர். சில முஸ்லீம் தலைவர்கள் கடுமையான ஷரியாவைப் பிரசங்கிக்கின்றனர். இருப்பினும் அதிகமான முஸ்லீம்கள் அதற்குப் பயப்படுகின்றனர், மேலும் அதன் கீழ் வாழ விரும்புவதில்லை.

கிறிஸ்தவர்களின் மாறுத்தரம் என்ன?

ஊடகங்களில் வருகிற செய்திகளுக்கு அப்படியே பதிலளிக்க வேண்டாம். சில வேளைகளில் நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதாலும், சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதாலும் முஸ்லீம்கள் மேல் தவறான மனநிலை உடையவர்களாயும் அவர்கள் மீது மனதுருக்கம் இல்லாதவர்களாயும் இருக்கிறோம் . நமது இந்த தவறான மனநிலைக்காக, அக்கறையற்றத்தன்மைக்காக, முஸ்லீம்கள் மேல் விரோதம் பாராட்டியமைக்காக நாம் மனந்திரும்ப வேண்டும். மேலும் பரிசுத்த ஆவியானவர் முஸ்லீம்கள் இருதயத்தில் அசைவாடி உண்மையான கிறிஸ்தவத்தை புரிந்து கொள்ள பசியை உண்டாக்குகிறார் என்பதை நாம் உணர வேண்டும். தேவன் முஸ்லீம்கள் மத்தியில் கிறிஸ்தவ சாட்சி மற்றும் நேரிடையான வெளிப்பாடுகள் மூலமாக கிரியை செய்து கொண்டிருக்கிறார்.


துஆக்கள்

•          இறைவா எல்லா இஸ்லாமியரும் ஈஸா அல் மஸீஹை ஏற்றுக்கொள்ளச் செய்வாயாக! அவர்களுக்கு சத்தியத்தை அறிவிக்க என்னை நான் அர்ப்பணிக்கிறேன்.

•          இறைவா, ஈஸா முஸ்லீம்களும் கிறிஸ்தவ விசுவாசிகளும் இஸ்லாமியருக்கு உப்பாகவும், ஒளியாகவும் வாழ உதவிசெய்வாயாக!

•          இறைவா, இஸ்லாமியர் மத்தியில் சத்தியத்தை அறிவிக்க அநேகரை எழுப்புவாயாக!

•          இறைவா இப்பொழுது இஸ்லாமியர் மத்தியில் சத்தியத்தை எத்திவைக்கிற ஒவ்வொரு ஊழியரும் உண்மையோடும், உத்தமத்தோடும் நீர் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்ற  அவர்களை பெலப்படுத்துவாயாக!  


Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?