Posts

Showing posts from August, 2015

இறைவனின் முகத்தைத் தேடுகிறீர்களா? அல்லது கரங்களை மட்டும் பார்க்கின்றீர்களா?

Image
“நாடு இப்படியே போச்சினா நம்ம பசங்கள்ட எதிர்காலம் என்னாவது !” “இந்த நாட்டுல தொடர்ந்து வாழ்ந்தா நம்ம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் . US போற வழிய தேடணும் ” இப்படியான கருத்துக்கள் எமது சமுதாயத்தில் அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. எதற்கு எடுத்தாலும் நாட்டையும் நாட்டை ஆள்கிறவர்களையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இப்படி குறை சொல்லி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பலர், கலாச்சாரப் பிரச்சினைகளால் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் “ஏன் திரும்ப வந்துவிட்டீகள் ” என்று கேட்டால், “அந்த கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது, என் பையனையே எனக்கு திட்ட முடியல, உடனேயே அவன் பொலிஸுக்கு போன் செய்கிறான் ” என்று குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்ட வேதனையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினைகளிலிருந்து விடுபட, நான் வெளிநாடு போக முயற்சித்தேன். அப்பொழுது ஒரு தங்கை கூறினாள், “பிரச்சினை உங்களுக்குள் இருந்தால் அது எங்கு சென்றாலும் உங்களுடன் வரும் ” என்று. அந்த வார்த்தைகள் என்னை சிந்திக்கவைத்

நபிமார்களை (அலை) போட்டுதான் அழைக்கவேண்டுமா?

1. முஸ்லீம்கள்   ஈஸா அல் மஸீஹின் பெயரை , முகமது நபியின் பெயரை, மற்ற நபிமார்களின் பெயரைச் சொல்லும்போது , ( அலை) " அவர் மீது சாந்தி உண்டாகட்டும் "   என்றுச் சொல்கிறார்கள் , ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள் ? இக்கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பிரித்துச் சொல்லலாம் :  1.   ஏன் கிறிஸ்தவர்கள் முகமது நபியின் பெயரைச் சொல்லும்போது " அவர் மீது சாந்தி உண்டாகட்டும் " என்றுச் சொல்வதில்லை . 2.   ஏன் கிறிஸ்தவர்கள் ஈஸா அல் மஸீஹின் பெயரைச் சொல்லும்போது ( அலை) " அவர் மீது சாந்தி உண்டாகட்டும் " என்றுச் சொல்வதில்லை . 3.   ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற நபிமார்களின்   பெயரைச் சொல்லும்போது ( அலை) " அவர் மீது சாந்தி உண்டாகட்டும் " என்றுச் சொல்வதில்லை . 1. ஏன் கிறிஸ்தவர்கள் முகமது நபியின் பெயரைச் சொல்லும்போது " அவர் மீது சாந்தி உண்டாகட்டும் " என்றுச் சொல்வதில்லை . இதற்கான பதிலை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு , கிறிஸ்தவர்களின் நம்ப