Posts

Showing posts from April, 2015

ஜப்னா முஸ்லிமுக்கு மறுப்பு

Image
கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு என்று ஒரு கட்டுரையை www.jaffnamuslim.com/2015/04/blog-post_157.html என்ற இணையத்தளத்தில் கண்டேன். அந்த கட்டுரை பாமர இஸ்லாமியரை ஏமாற்றும் ஒரு தந்திரமாக எழுதப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிந்தது. ISIS என்பது ஒரு போலியானது. அப்படி ஒரு இஸ்லாமிய குழு இல்லவே இல்லை. இருந்தாலும் அது யூதர்களாக இருக்கலாமே தவிர முஸ்லீம்கள் அல்ல என்பதுபோல் எழுதப்பட்டிருந்தது. அதன் உண்மை நிலையையும் அந்த கட்டுரையிலிருந்து சில அறியாமை கருத்துக்களை புரியவைப்பதற்காகவும் இந்த மறுப்புக் கட்டுரை எளிமையாக வரையப்படுகிறது.   மீடியாவுக்கு வராததால் நடக்கவில்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் எவ்வளவு துன்புறுத்தப்படுகிறார்கள். எத்தனை நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். யூசுப் யொஹானா தொடர்ந்து கிரிகெட் விளையாட வேண்டுமானால் இஸ்லாத்தை தழுவுமாறு நிர்பந்திக்கப்பட்டார். எனக்குத் தெரிந்த ஒருவர் மாலை தீவுக்கு வேலைத் தேடிச் சென்றார். அவரிடம் விமான நிலையத்தில் வைத்து சில முல்லாக்கள் மாலை தீவுக்கு வந்ததன் நோக்கத்தை விசாரிக்கின்றனர். கடன் பிரச்சினைய

சிலுவை குர்பான் மறுதலிப்பு! – இஸ்லாமியரின் இரட்சிப்பு இழப்பு!

ஆசிரியர்: அஸ்கர் ''ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள் வரை மேல் நிலையில் வைப்பவனாகவும்  இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. (ஸூரா 3:55 பி ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்) முன்னுரை:  ஈஸ்டர் பெருநாள் இறைவேதம் குறிப்பிடுவது போல, ஈஸா அல் மஸீஹ்வைப் பின்பற்றும் எவருக்கும் மிக முக்கியமான ஒரு திருநாளாகும். இந்த பண்டிகையின்போது, மஸீஹ் ஆகிய ஈஸா சிலுவையில் குர்பானியாகி மரித்த சம்பவங்களை நினைவுகூர்வது மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. 1 கொரிந்தியர் 15:1-20 சொல்வது போல, இதுவே ஈஸ்டர் திருநாளின் மையப் பொருளாக இருக்கிறது. அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்…கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில