யூதர்களின் கைக் கூலிகளா ஷீஆ முஸ்லீம்கள்?

பாரசீக அறை

பாரசீக அறையானது நவீன நாட்களில் ஈரான், அதைச் சுற்றியுள்ள அயல்நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் தாஜிகிஸ்தான் என்ற நாடுகளைச் சேர்த்த அறையாகும். இதில் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் மாறுப்பட்ட பழங்கால பாரசீக மொழிகளைப் பேசுபவர்களாகக் காணப்படுகின்றனர்.

இஸ்லாமிய இல்லத்தின் பிற இடங்களில் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் ஈரானில் ஷீஆ முஸ்லீம்களே பெரும்பான்மையினராவார்கள். 1979 இல் ஆயதுல்லாஹ் கொமைனி என்பவரால் ஈரான் இஸ்லாமிய குடியரசாக நிறுவப்பட்டது. அநேகமானோர் இதை கிறிஸ்தவத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே கண்டார்கள்.

ஆனால் பல நூற்றாண்டுகளாக தங்கள் நாட்டை ஒடுக்கி வைத்திருந்த இஸ்லாம் மத அடிப்படைகளை நிராகரித்துவிட்டு பல்லாயிரம் பேர் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி கிறிஸ்துவை பின்பற்றிய ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள், மற்றவர்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். சிலர் இன்னும் ஈரானில் ரகசியமாக வாழ்ந்துவருகிறார்கள். நிலத்தின் கீழுள்ள ஆலயங்களிலோ அல்லது தங்களது வீடுகளிலே பொருத்தப்பட்டிருந்த செய்மதி தொலைக்காட்சியினூடாக கிடைக்கும் வழிக்காட்டலினூடாகவோ இறைவனை ஆராதித்து வருகிறார்கள்.

இந்த விசுவாசிகளின் வளர்ச்சியானது, ஈரானிய ஆர்மேனிய கிறிஸ்தவரான ஹய்க் ஓவ்ஸ்பியனைப் போன்று நீண்டக்காலங்களாக கிறிஸ்துவுக்குள் இருப்போருக்கு சாட்சியாக அமையும். 1980 இல் ஹயிக் எஸம்பிலி ஒப் கோட்
சபையிலே முதலாவது தேசிய சபை ஆயராக நியமிக்கப்பட்டார். அரசாங்கம், தனி இன சார்பான கிறிஸ்தவத்திற்கு மாத்திரம் அனுமதியளித்திருந்தது. ஆர்மனியனான ஹயினுக்கு தங்களுடைய விசுவாசத்தை நடைமுறைப்படுத்த அதிகாரம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அதை முஸ்லிம் மக்களுக்கு பகிர அதிகாரம் இல்லை. ஆனால் ஹயிக் அரசின் அழுத்தத்திற்கு கட்டுப்பட மறுத்தார். “நாங்கள் எங்களுடைய விசுவாசத்திற்காக சிறைக்குச் சென்றாலும் அல்லது கொலை செய்யப்பட்டாலும் இதற்கு கட்டுப்படமாட்டோம்” என்று கூறினார்.

வணக்கத்திற்குரிய மஹ்தி திபாஜ் என்ற முஸ்லிம் ஒருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். 1983 ஆம் ஆண்டு இவர் சிறைப்படுத்த்ப்பட்டு மற்றும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தன்னுடைய விசுவாசத்தை திரும்ப மாற்றிக்கொள்ளும்படி அழுத்ததிற்கு உற்படுத்தப்பட்டார். முஹ்தி ஒரு வாக்கு மூலத்தோடு சகித்துக்கொண்டார், அவருடைய பரிசுத்த நாமத்துக்காக நான் சிறையிலிருப்பதையிட்டு திருப்தியடையவில்லை. இயேசுவுக்காக என் வாழ்க்கையையே கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன்.”

1993 இல், ஒரு இரகசிய நீதிமன்றத்தில் மதம்மாறிய குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனைப் பற்றி பிஷப் ஹய்க் அறிந்துகொண்டபோது, ஒரு ஆமேனியனாக அவர் முன் இரண்டு தெரிவுகள் இருந்தது. இந்த துன்புறுத்தலை அமைதியாக ஏற்றுக்கொள்வதா? அல்லது இதற்கு எதிராக குரல் கொடுப்பதா?

அவர் மஹ்தியைகாப்பாற்ற தீர்மானித்தார். அவர் மூலமாக சர்வதேசம் கொடுத்த அழுத்தங்களை முன்னிட்டு, 1994 ஜனவரி 16 ம் திகதி மஹ்தி விடுதலை செய்யப்பட்டார். மூன்று நாளைக்குப் பிறகு, பிஷப் ஹய்க் தஹ்ரானின் வீதியொன்றில் சடலமாகக் கிடந்தார். அவருடைய மார்பு பகுதியில் 27 கத்திக்குத்துக்கள் காணப்பட்டது. அவருடைய மரண ஆராதனையில் கலந்துகொண்ட மஹ்திஇயேசு சிலுவையில் மரித்தது எனக்குப் பதிலாக என்று பரபாசுக்கு மட்டும்தான் தெரியும். பிஷப் ஹய்க் மரித்தது எனக்காகதான் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் என்று சத்தமாக கூறினார்.

ஜெபம் செய்வோம்:

  • ஷீஆ முஸ்லீம்களுக்கு பிஷப் ஹய்கைப் போன்று தைரியமாக சுவிசேஷம் அறிவிக்கும் கிறிஸ்தவர்களுக்காக ஜெபிப்போம்.
  • பாரசீக நாடுகளில் மதச் சுதந்திரம் ஏற்பட ஜெபிப்போம்.
  • ஈராக்கிலிருந்து குடிபெயர்கிறவர்கள் தங்கள் புதிய இடங்களில் கர்த்தரை அறிந்துகொள்ள சந்தர்ப்பங்கள் உருவாக ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?