குடியேற்ற வாசிகளுக்கு பரலோக வாசல்...

ஒரு குளோபல் நுழைவாயில்

உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் இன்று குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 250 மில்லியனுக்கும் அதிகமாகும். இந்த குடியேற்றவாசிகளின் முதல் இடம் ஐக்கிய அமேரிக்காவாகும்.

இவர்களில் மில்லியன் கணக்காகனவர்கள் குறைந்த அளவில் ஆதாயம் செய்யப்பட்ட மக்கள் - குர்திஷ், யமன், புஷ்துன், சோமாலியா - போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பல நூற்றாண்டுகளாக சுவிசேஷம் மறுக்கப்பட்டு வந்தது.

சரித்திரத்தில் முதன்முறையாக நியூயோர்க், ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, அதே போல் டொராண்டோ, லண்டன், ஆம்ஸ்டர்டாம், வான்கூவர் மற்றும் பிற நுழைவாயில் நகரங்களில் வசிக்கிறார்கள். தேவன் புதிய காரியங்களை செய்துகொண்டிருக்கிறார்! உலகத்தின் மூ லைகளில் உள்ளவர்களை பிரதான கிறிஸ்தவ தேசங்களுக்கு கொண்டுவருகிறார். 

இதற்கு அமெரிக்கர்களின் மாறுத்தரம் என்ன?

2001ம் ஆண்டு, கிறிஸ் என்ற இளம் மிஷனரி மேற்கு ஆபிரிக்காவின் மாலி தேசத்துக்குச் சென்று, மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பம்பாரா மொழி பேசக்கூடிய, 160,000 வஸ்ஸோலூ மக்கள் மத்தியில் ஊழியம் செய்தார். இந்த முஸ்லீம்களில் யாருக்கும் கறிஸ்தவர்களை பற்றியோ திருச்சபைகளை பற்றியோ தெரிந்திருக்கவில்லை.
அவர் அவர்கள் மொழியை கற்றுக்கொண்டிருக்கும்போது வஸ்ஸோலூ மக்கள் வியக்கத்தக்க விதத்தில் சுவிசேஷத்துக்கு மனதை திறந்தார்கள். அந்த கிராம வாழ்க்கை ஒத்துக்கொள்ளாமல், கிறிஸ் நோய்வயப்பட்டு மாலி நாட்டைவிட்டு திரும்பவேண்டியேற்பட்டது. அவரை அனுப்பிய மிஷன் ஸ்தாபனமும் கிறிஸ் மீண்டும் மேற்கு ஆபிரிக்காவுக்கு போககூடாது என்று சொல்லிவிட்டது.

ஆனால் கிறிஸ் முயற்சியை விடவில்லை. 2006 இல், கிறிஸும் அவன் மனைவியும் நிவ்யோகுக்கு ஒரு ஆய்வு பிரயானம் செய்தபோது, ஹாலேமில் வஸ்ஸோலூ இனத்தவர்களைச் சந்தித்தார்கள்.

நடுவயதையுடைய ஜமால் எனும் வஸ்ஸோலூ இனத்தவன் “22 வருடங்களுக்கு முன்பு ஈஸா அல் மஸீஹ்வை கனவில் கண்டு அவரை பின்பற்றத் தொடங்கினேன். அதனை எனது குடும்பத்தாருக்கு சொன்னவுடன் அவர்கள் என்னை கொலைசெய்ய முயற்சித்தார்கள். துன்புறுத்தலுக்கு மறைந்து பல வருடங்களாக நிவ்யோக்குக்கு வரும் வரையில் நகரத்திலிருந்து நகரத்துக்கு மாறிக்கொண்டிருந்தேன்.” என்று அவன் கிறிஸிடம் சொன்னான்.

கிறிஸ் சந்தித்த முதலாவது வஸ்ஸோலூ விசுவாசி ஜமால் ஆவான். ஜமால் அவருக்கு மேலும் கடந்த 22 வருடங்களாக என் மக்களை ஆதாயப்படுத்த ஒரு சகோதரனை அனுப்புமாறு தேவனிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கான பதில் நீங்கள் தான் என்று சொன்னான்.

சில மாதங்களுக்குப் பிறகு கிறிஸ் தன் குடும்பத்துடன் ஹாலேம் பகுதிக்கு வசிக்கச் சென்றார். இன்று ஸ்ஸோலூ இனத்தவர்கள் வாழும் கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
மேற்கு ஆபிரிக்காவில் முதலாவது வஸ்ஸோலூ இனத்தவர்களுக்கான திருச்சபையும் கட்டப்பட்டுள்ளது.

உலகின் பல மூலைகளிலும், நுழைவாயில்களிலும் ஊழியம் செய்யும் மிஷனரிகளைப் பற்றி மேலம் அறிந்துகொள்ள (www.GlobalGates.info) இந்த தளத்தை பார்வையிடவும்.

ஜெபம் செய்வோம்.

  • தங்கள் சொந்த இடங்களை விட்டு, புதிய பிரதேசங்களில் புதிய எதிர்பார்ப்புகளுடன் குடியேறியிருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் அவர்கள் புதிய வாழ்வில் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவேண்டும் என்று ஜெபிப்போம்.
  • குடியேற்றவாசிகளுக்கு அமெரிக்க கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் அன்பை காண்பிக்கவேண்டும் என்று ஜெபியுங்கள்.
  • சபைகளும் ஊழிய ஸ்தாபனங்களும் குளோபல் நுழைவாயிலுக்கூடாக வரும் குடியேற்றவாசிகளுடை கலாச்சாரத்தை கடந்துச் சென்று சுவிசேஷம் அறிவிக்கவேண்டும் என ஜெபிப்போம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?