ஒரு நிச்சயமற்ற பயணத்தில் சிரிய மக்கள்
அகதிகள் சமீப காலம் வரையில் சிரியா ஒரு ஸ்தீரமான நாடாகும் . விவசாயத்திலும் எண்ணை வளத்திலும் நல்ல வருமானத்தை பெற்று வந்தது . சிறுவர்களுக்கு நல்ல கல்வியும் கிடைத்தது . ஆசாதின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அரசியல் எதிரிகளுக்கு எதிராக இரக்கமற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது . பெரும்பான்மையும் சிறுபான்மையுமான சுன்னி ஷீஆ முஸ்லீம்கள் சமாதானமாகவே வாழ்ந்து வந்தார்கள் . அரபு வசந்தம் நிலைமையை மாற்றிவிட்டது . 2011 இல் இருந்து உள்நாட்டு போர் வருடத்துக்கு வருடம் மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது . முழு சனத்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் தங்கள் தேசத்தை விட்டு எதிர்பார்ப்பில்லாத ஒரு பயனத்திலிருக்கிறார்கள் . நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மற்ற நாடுகளிலேயே வாழ்கிறார்கள் . அநேகருக்கு தங்கள்குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பமுடியவில்லை . அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்று யாருக்குமே தெரியாது . இந்த நிச்சயமற்ற பயணத்தில் நன்மையும் உள்ளது . கடும் சட்டங்களுக்கும் அடக்குமுறைக்கும் கட்டுப்பட்டிருந்தவர்களுக்கு சுதந்திரம் க