சீன ஹூய் முஸ்லீம்கள்

நாள் 15                    ஜுலை 24 2013                
                                                                                                                                                                                                                                                                                                                                               
சீன ஹூய் முஸ்லீம்கள்

நான் ஹாலீதை 4 வருடங்களுக்கு முன் சந்தித்தேன். எனது முதல் சந்திப்பிலேயே நான் அறிந்து கொண்டது அவன் இறைவனால் அவனது சொந்த மக்கள் மத்தியில் விசேஷித்த விதமாகப் பயன்படுத்தப் போகிற ஒரு மனிதன் என்று.

ரமளான் மாதத்தில் ஒரு இரவில் ஹாலீத் என்னோடு ஒரு கனவைப் பகிர்ந்து கொண்டான். அவன்,“என் கனவில் ஒரு மனிதன் என்னிடத்தில் வந்து என் கையைப் பிடித்துக் கொண்டார். அந்த மனிதன் யார் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் அவர் நல்லவர் என்பதை அறிந்திருந்தேன். அவர் ஒரு மலையுச்சிக்கு என்னை அழைத்துச் சென்றார் ஆனால் நான் களைப்படைந்து என் கையை இழுத்துக் கொண்டேன். அவர் எனக்காக பொறுமையோடு காத்திருந்து நான் இளைப்பாறிய பிறகு என் கையை மறுபடியும் பிடித்துக் கொண்டு மலையேறத் தொடங்கினார். மலை உச்சியை அடைந்த பிறகு நாங்கள் அடைய வேண்டிய இடம் வந்து விட்டதால் நான் மீண்டும் என் கையை அவரிடமிருந்து இழுக்க முயற்சித்தேன் . ஆனால் அவர் மென்மையாக, அதே நேரத்தில் நான் அவனிடமிருந்து என் கையை உதறாதவண்ணம் உறுதியாக என் கையைப் பற்றிக்கொண்டார். அந்த நேரத்தில் நான் விழித்துக் கொண்டேன்.





ஹலீத்  தனது  கனவை         நண்பன்      (முஸ்லீம்)            ஒருவனிடம் அதன் அர்த்தத்தைப்      புரிந்து கொள்ளும்படி பகிர்ந்து கொண்டான். அவனது நண்பன் சொன்னான், “ஹலீத் உன் கனவில் வந்த மனிதர்ஈஸா அல் மஸீஹ் என்று.
 ஹலீத் சொன்னான்,“நான் அதைக் கேட்டவுடனே அது உண்மை என்றும் நான் இயேசுவை உண்மையாக பின்பற்ற வேண்டும் என்று இறைவன் என்னிடம் சொல்லுகிறார் என்பதையும் அறிந்து கொண்டேன். நான் என் கையை இழுத்துக் கொண்டாலும் அவர் எப்பொழுதும் எனது கரத்தைப் பிடித்துக் கொள்ள காத்துக் கொண்டிருக்கிறார்; என்பதை காண்பித்தார். அவர் எனக்கு எப்பொழுதும் தேவை என்பதையும் நான் அவரை தள்ளி விட்டாலும் அவர் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறார் என்பதையும் என்னால் இப்பொழுது பார்க்க முடிகிறது. இந்த விதமான அன்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனாலும் அது எனக்கு வேண்டும் என்பதையும் நான் அதை விரும்புகிறேன் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

ஹாலீத் இறைவேதத்தை படிக்க ஆரம்பித்தான் மேலும் சத்தியத்தை தனது மக்களுக்குப் பகிர்ந்து கொண்டிருக்கிறான்.

இறைவன் சீனாவிலுள்ள ஹூய் மக்கள் மததியில் ஆச்சரியமான காரியங்களை  செய்து வந்தாலும்  ஒரு கோடிக்கும் அதிகமான ஹூய் மக்கள் ஹாலீத் இப்பொழுது அனுபவிக்கிற உன்னத அன்பை அறிந்திராத உலகத்தில் இன்னும் வாழ்கிறார்கள். இன்னும் அநேகர் பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சத்திய இறைவனை அறிந்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்கிற உண்மையான ஆசையிருந்தாலும் அதை எவ்வாறு செய்வது என்று தெரியவில்லை.

நாங்கள் துஆ செய்வோம்

•          ஹூய் மக்களுக்கு ஏக இறைவன் அசாதரணமான விதங்களில் தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்று துஆ செய்வோம். (அப்.2:17)

•          சீன கிறிஸ்தவர்களுக்கு ஹூய் மக்கள் மேலுள்ள பயம் நீங்கவும் அது   அன்பாக மாறவும் துஆ செய்வோம். (1 யோ. 4:18)

•          ஏற்கனவே ஈஸா அல் மஸீஹ்வை பின்பற்றிக் கொண்டிருக்கிற ஹூய் இஸ்லாமியர்கள் தங்கள் குடுமபங்களோடும் நண்பர்களோடும் அவரைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஞானம் மற்றும் தைரியம் அருளப்பட மன்றாடுவோம். (எபே.6: 18-20)

•          ஹூய் இஸ்லாமியர் அவர்களது சொந்த மொழியில் இறைவேதம் மற்றும் கைப்பிரதிகள் கிடைக்க துஆ செய்து செயல்படுவோம்.




Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?