கனடா வான்குவர் முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.
நாள் 09 ஜுலை 18, 2013
கனடா வான்குவர் முஸ்லீம்களுக்காக துஆ செய்வோம்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் கனடா தேசத்தின் மிகப்பெரிய துறைமுகமாகவும் மூன்றாவது பெரிய நகரமாகவும் விளங்குகின்ற அழகிய ஒரு கடற்கரைப் பட்டணம் ஆகும். அதன் வடக்கிலுள்ள மலைத்தொடர்ச்சிக்கு பல பனி சறுக்கு மையங்களைக் கொண்ட பெருமை இருப்பதால் 2010ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற்றுக் கொண்டது. வான்கூவர் மாநகரம் கனடா நாட்டிலேயே மக்கள் கூட்டத்தில் மற்றும் மொழியில் பெருத்த வேறுபாடுகளைக் கொண்டுள்ள நகரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. 2006ம் ஆண்டின் கணக்கெடுக்கின்படி 40% மக்களுக்குஆங்கிலம் முதலாம் மொழியாக இல்லை.
வான்கூவரில்
1931ம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து குடியேறிய முஸ்லீம்கள் சிலர் காணப்பட்டனர். 1970ம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலிருந்து முஸ்லீம்கள் பெரும் குழுவாக வந்து சேர்ந்தனர். 1980ம் ஆண்டில் வான்கூவரில்
ஜும்மா தொழுகைக்குக்
கூடுகிறதற்கு ஒரு இடம் மட்டுமே இருந்தது . ஆனால் இன்றைக்கு 15 பெரிய
பள்ளிவாசல்கள் இருக்கின்றன.
2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி வான்கூவர் நகரின் 19.9 இலட்சம் மக்கள் தொகையில் 52,600 பேர் முஸ்லீம்கள் இருந்தனர். 2006ன் கணக்கெடுப்பின்படி 21 இலட்சம் மக்கள் தொகையில் 90,000 முஸ்லீம்கள் இருந்தனர். (2006ம் ஆண்டு கணக்கெடுப்பு மதங்களை கணக்கெடுக்கவில்லை). முஸ்லீம் மக்களின் வேகமான வளர்ச்சிக்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்து குடியேறுதல், அகதிகளுக்கு அடைக்கலம் அளித்தல் மற்றும் அதிக பிறப்பு விகிதம் ஆகியவைகளே காரணமாக இருக்கிறது.
இன்றைக்கு கனடாவில் பிறந்த பல முஸ்லீம்கள், இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஈராக், எகிப்து, மத்திய ஆசியா, ஃபிஜி, ஆப்கானிஸ்தான், போஸ்னியா, இலங்கை, அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரிட்டன் இன்னும் பல நாடுகளிலிருந்து வந்து சேரும் மக்களோடு கலக்கின்றனர். இரண்டு மிகப் பெரிய குழுக்கள் பஞ்சாபியர்கள் மற்றும் ஈரானியர்கள் ஆவர். அதோடு அரேபிய அரசாங்கத்தால் 2007ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மாணவர் சலுகையைப் பெற்று ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வான்கூவரில் கல்வி பயில வருகின்றனர். ரமளான் மாதத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் வான்கூவர் பள்ளிவாசல்களில் இஃப்தார் (நோன்பை முடிக்க உண்ணும் உணவு) மற்றும் தாராவீஹ் (இரவு நேரங்களில் கூட்டமாகக் கூடி தொழுகை செய்வது) தொழவும், ரமதானின் உணர்வுகளைப் பெறவும் கூடுகின்றனர். இதில் மிகவும் அதிகமானவர்கள் 20 வயதினராகவும், தங்கள் வீட்டிலிருந்து வெளியே முதல் முறையாக ரமளானைக் கொண்டாடுகிறவர்களாகவும் இருக்கின்றனர்.
வான்கூவர் பள்ளிவாசல்களில் நடப்பது
என்பது ஐக்கிய நாடுகளின் சபையில் நடப்பது போல காணப்படுகிறது. பல்வேறு வித்தியாசமான நாடுகளைச் சார்ந்தவர்கள் ஒன்றாகக் கூடி தொழுகை செய்வது சாதாரண காட்சியாக இருக்கிறது. ஆங்கில மொழியிலேயே அவர்கள் தொழுகை நடாத்துவது அருமையானதொரு விடயமாகும்.
இவர்களுக்காக துஆ செய்வோம்.
1. வான்கூவருக்கு அகதிகளாகவும், குடியேறுபவர்களாகவும் வருகின்றவர் களிடம் கிறிஸ்தவ சமுதாயத்தினர் அன்பையும், மனதுருக்கத்தையும், உதவியையும் காண்பிக்க துஆ செய்வோம்.
2. முஸ்லீம்களோடு எவ்வாறு இடைபடுவது என்பதை அறிந்து கொள்ள இறைவனுடைய ஞானத்தையும் வழிநடத்துதலையும் கிறிஸ்தவ சமுதாயங்கள் பெற்று
கொள்ள துஆ செய்வோம்.
3. இம்மாநகரத்தில் வித்தியாசமான சூழ்நிலைகளில் இளைய தலைமுறை முஸ்லீம்கள் ஈஸா அல் மஸீஹ்வை தீவிரமாகத் தேட துஆ செய்வோம்.
Comments
Post a Comment