எமது உம்மத்துக்காக துஆ செய்வோம். நாள் 01

எமது உம்மத்துக்காக துஆ செய்வோம்.

நாள் 01                                                                                                                     ஜுலை 10, 2013                        
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
அரேபிய வசந்த காலம்  - 2 வருடமும் அதன் பின்பும்.

இது ஒரு பெரிய பரபரப்போடு ஆரம்பமானது. புரட்சிகள் துனிசியாவிலிருந்து எகிப்து மற்றும் லிபியா வரை அடித்துச் சென்றது. வெகு சீக்கிரத்தில் அரேபிய வசந்தம் என்ற பெயர் பெற்றது. “அரேபிய உலகம் சர்வாதிகார, ஊழல்கள் மலிந்த அரசாங்கங்களைத் தூக்கி எறிந்து விட்டு கிழக்கு ஐரோப்பாவைப் போல பெரியசுதந்திர உலகம் என்ற கனவைப் பின்பற்றும் காலம் இதுவாக இருக்குமோ?” நம்பிக்கைத் தெருக்களில் தண்ணீரைப் போல ஓடியது.

ஆனால், இரண்டு வருடங்கள் கழித்து நம்பிக்கையின் ஆறுக்கு பதிலாக நிச்சயமற்ற நிலை மற்றும் பயம் வந்து அது வற்றும் நிலைக்கு வந்து விட்டது. சமாதானம் மற்றும் வளர்ச்சிக்குப் பதிலாக, பழைய தலைமை நீக்கப்பட்டவுடன், இதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த அழுத்தங்கள் வெடித்து இன்னும் அதிகமான நிச்சயமற்ற நிலையினைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த நாடுகளுக்குள்ளே இருக்கிற இளம்புரட்சியாளர்கள்நமது புரட்சியை யார் கடத்திச் சென்றிருக்கிறார்கள்?” என்று கேட்கிறார்கள். வெளியில் இருக்கும் வர்ணணையாளர்கள், “அரேபிய வசந்தம் குளிர்காலமாக மாறிவிட்டதோ?” என்று கேட்கிறார்கள்.

அரேபிய வசந்தத்தின் உண்மை நிலை என்ன?

ஊழல் அரசாங்கங்களை தூக்கி எறிய வேண்டும் என்ற ஆசையில் சமுதாயங்கள் ஒன்று பட்டிருந்தாலும், அவைகளின் மக்கள் தங்கள் எதிர்காலத்தைக் குறித்து மிக வித்தியாசமான கனவுகளைக் கொண்டிருந்தனர். ஒரு குழுவினர் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தான் விடை என்று நினைத்தனர். ஆனால் மற்றொரு குழுவினர், ஷரியா சட்டத்திற்கு மிகுதியான அர்ப்பணிப்பு மற்றும் கடுமையாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதுதான் விடை என்று நினைத்தனர். இந்த வேறுபட்ட கனவுகள் அரேபிய உலகிலுள்ள வீடுகளிலும், வீதிகளிலும் போராட்டங்களை அதிகப்படுத்தி விட்டது.

இருப்பினும் இந்த குழப்பங்களுக்கு மத்தியில் வேறு கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

கிறிஸ்தவ சமுதாயத்தில் பலருக்கு இந்த நாடுகளில் இறைவனுடைய ஆட்சி வர வேண்டும் என்கிற புதிய உத்வேகம் மற்றும் அர்ப்பணிப்பு வந்திருக்கிறது. 2012ம் ஆண்டு நவம்பர் மாதம்  ஈஸா அல் மஸீஹ்வை ஈமான் கொண்ட 70.000  கிறிஸ்தவர்கள் கெய்ரோ நகரத்தில் கூடி தங்கள் தேசத்திற்காக துஆ செய்திருக்கிறார்கள். இன்னும் பலர் இந்த நிச்சயமற்ற காலங்களில் தங்களது இஸ்லாமிய அயலார்களை புதிய வழிகளில் அன்புடன் சந்திப்பதற்கு தைரியத்தைக் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிராந்தியத்தின் பல பகுதிகளிலிருந்து  இஸ்லாமியர் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்கு வந்து கொண்டிருக்கின்ற மற்றும் அவர்கள் ஒருவரையொருவர் ஆதரவுப் படுத்துவதற்காகவும், உற்சாகப் படுத்துவதற்காகவும் , சீஷத்துவத்திற்காகவும் ஒன்றாகக் கூடி வருகின்ற சாட்சிகள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இக்கூட்டத்தார் தங்களது குடும்பங்கள், சமுதாயம் மற்றும் அரசாங்களால் துன்புறுத்தப்படுகின்றனர்.

துஆ செய்யவேண்டியவைகள்

1.      அரேபிய உலகிலுள்ள மக்களுக்காக, அரசியல் தலைவர்களுக்காக துஆ செய்யுங்கள். சத்தியத்தை அறிந்து கொள்ளும்படியாக அவர்களது கண்கள் திறக்கப்படவும் அதை தைரியத்தோடு தொடரவும் துஆ செய்யுங்கள்.

2.      கிறிஸ்துவின் விசுவாசிகள் அவர்கள் கடந்து போய்க் கொண்டிருக்கம் போராட்டமான சூழ்நிலைகளின் மத்தியில் அமைதித் தீவுகளாக விளங்க துஆ செய்யுங்கள். (சங்கீ.46)

3.      புதிய மற்றும் பழைய விசுவாசிகள்தங்களில் உள்ள நம்பிக்கையைக் குறித்து தைரியமாக சாட்சி பகரவும், அதன் மூலம் பலர் ஈஸா அல் மஸீஹ்வின் மேலுள்ள விசுவாசத்திற்குக் கடந்து வரவும் துஆ செய்யுங்கள்.


4.      அரேபிய உலகிலுள்ள விசுவாசிகளுக்கு பாதுகாப்பு, தைரியம் மற்றும் மத சுதந்திரம் கிடைக்கவும் துஆ செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?