மலேசியாவின் மேற்கு கடற்கரை - பஜாவ்

நாள் 06                                ஜுலை 15, 2013                   
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
மலேசியாவின் மேற்கு கடற்கரை -  பஜாவ்

மேற்கு கடற்கரை பஜாவ் மக்கள் போர்னியோ தீவிலுள்ள மலேசியா நாட்டின் வடகோடி மாநிலமான சாபாவில் வாழ்கின்றனர். இவர்களது எண்ணிக்கை 65,000 ஆகும். வெளியிலுள்ளவர்கள் இவர்களை பஜாவ் என்று அழைக்கின்றனர். இவர்கள் தங்களைசாமாஎன்று அழைத்துக் கொள்ளுகின்றனர். இவர்கள் பேசும் மொழி பிலிப்பைன்ஸ், சாபாவின் கிழக்கு கடற்கரை மற்றும் சூலாவேசி (இந்தோனேஷியா)யில் பேசப்படும் சாமா-பஜாவ் மொழிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது.

மக்களும் அவர்களது அடையாளமும்

மேற்கு கடற்கரை பஜாவ் மக்கள் பூர்வீகத்தில் படகில் வசிப்பவர்களாகவும், அவர்களது வாழ்வு கடலை மையமாகக் கொணடதாகவும் இருந்திருக் கிறது. தற்பொழுது இவர்களில் அதிகமான பேர் விவசாயம் செய்கிறவர்களாக மாறி நெல் மற்றும் பிற பயிர்களை பயிர் செய்கிறவர்களாகக் காணப்படுகின்றனர். மேலும் கால்நடைகள் மற்றும் குதிரைகளையும் இவர்கள் வளர்க்கின்றனர். எனவே இவர்களை சில வேளைகளில் கிழக்கத்திய மாட்டிடையர்கள்  என்றும் அழைக்கின்றனர். அவர்களுக்கு குதிரைகளையும், அதின்மேல் சவாரி செய்பவர்களையும் ஆடம்பரமாக அலங்கரித்தும், வண்ண ஆடைகளை அணிவித்தும் காட்சியாக காண்பிப்பது மிகப் பெரிய பாரம்பரியமாக இருக்கிறது.

அவர்களது மொழியிலும் கலாச்சாரத்திலும் மிகுந்த பெருமை கொள்ளுகின்றனர். இருப்பினும், அருகாமையிலுள்ள குழுவினரோடு கலப்புத் திருமணம் செய்வதன் காரணமாகவும், வாலிபர்கள் வேலைகளைத் தேடி நகரங்களுக்குச் சென்றுவிடுகிற காரணத்தினாலும் இவர்களது கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவது கடினமாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள மற்ற மக்களைப் போலவே, இவர்களையும் நவநாகரீகம் மேற்கொண்டு வருகிறது.

மதமும் சமுதாயமும்

மேற்கு கடற்கரை பஜாவ் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம்களாக இருக்கின்றனர். மதமானது அவர்களை அடையாளப்படுத்தவதிலும், அவர்களது சமுதாய வாழ்விலும் முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. கிராமத்தின் பல நிகழ்வுகள் இஸ்லாமிய பழக்க வழக்கங்களோடும், இஸ்லாமிய நாட்காட்டியோடும் தொடர்புடையவைகளாய் இருக்கின்றன. குடும்பங்களில் மொசொடு என்னும்ராதீபு மஜ்லிஸ்கள்நடைபெறுகிறது. இதனைத்  தொடர்ந்து கந்தூரி வழங்கப்படும். சதகா என்னும் ‘தானதா;மம்  செய்தல்’   இந்த உணவுகளில்          முக்கியமான ஒரு  பங்காக இருக்கிறது. இதன் நோக்கம் இதில் பங்கு       பெறுபவர்கள் ஆவிக்குரிய பலன்களையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும். வருடத்தின் மிகப் பெரிய பண்டிகைஈதுல் பித்ர்’ - பிரபலமாக ஹரி ராயா பூசா என்று அறியப்பட்டிருக்கிறது அல்லது ஹரி ராயா (கொண்டாட்டத்தின் நாள்) என்று மலேசியாவில் அழைக்கப்படுகிறது - நோன்பு இருக்கும் ரமளான் மாதத்தின் முடிவைக் கொண்டாடும் நாள் இது.

இஸ்லாத்தின் பாதிப்பு இருந்தாலும் பல பஜாவ் மக்கள் பல நிலைகளில் ஜின் வணக்கத்தின் நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆவிகளின் உலகத்திற்கு ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். ஜின்கள் வியாதியையோ அல்லது பல வகையான தீமைகளையோ விளைவித்துவிடுமோ என்று பயப்படுகின்றனர். குர்ஆனின் வார்த்தைகளை ஓதுதல் தீய சக்திகளுக்கு எதிரான வல்லமையான மருந்தாக இருக்கிறது என்று நம்புகிறார்கள்.  சிலர் தங்களையும் மற்றவர்களையும் சுகப்படுத்துவதற்காக ஜின்களை வசப்படுத்திகொள்கிறார்கள்.

இவர்களுக்காக துஆ செய்வோம்.

1.                  இந்த சந்திக்கப்படாத மக்கள் கூட்டத்திற்கு இறைவன் தமது குமாரனை சொப்பனங்கள் மற்றும் தரிசனங்கள் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்று துஆ செய்வோம்.

2.                  அருகாமையிலுள்ள விசுவாசிகள் மொழி மற்றும் கலாச்சார தடைகளைக் கடந்து மேற்கு கடற்கரை பஜாவ் மக்களை சந்திக்க வேண்டும் என்று துஆ செய்யுங்கள்.

3.                   எல்லா ஆவிகளும் ஈஸா அல் மஸீஹின்  வல்லமைக்குக் கீழ்ப்பட்டது என்பதை மேற்கு கடற்கரை பஜாவ் மக்கள் அறிந்து கொள்ளும்படி இறைவன் தமது வார்த்தையை அற்புதங்கள் மூலமாகவும் அடையாளங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்த துஆசெய்வோம்.



Comments

  1. இவ்வூழியத்தை எக்காரணம் கொண்டும் இடை நிறுத்தி விட வேண்டாம். god bless u

    ReplyDelete
  2. உங்கள் துஆக்களில் தொடர்ந்தும் இந்த ஊழியத்தை தாங்குங்கள் பிரதர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?