என்னைப் புரிந்து கொள்வார் உண்டோ? பகுதி 2
பொய்குற்றச்சாட்டு, அநீதியாக நடத்தபடுவதன் கொடுமையை பொறுமையாக
ஏற்றுக்கொண்டார்.
சிறுபிராயத்தில் பாடசாலையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டதிலிருந்து காணி பிரச்சினைகளுக்காக பொய்சாட்சிகளால் தோற்கடிக்கப்பட்ட பலர் இதனை வாசித்துக் கொண்டிருக்கலாம். ‘நான் எவ்வளவு நேர்மையாக வாழ முயற்சித்தாலும் அநீதியாய் வாழ்கிறவர்கள் பக்கம் காற்றுவீசுகிறதே’ என்ற வேதனையிலிருக்கிறீர்களா? இவரால் உங்களை புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் இவருக்கெதிராக பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, பொய் சாட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவரை விசாரித்த தேசாதிபதி: “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்” இவரை விசாரித்த இன்னொரு தேசாதிபதி இவரில் குற்றமெதுவும் காணவில்லை. அவர்களை நோக்கி: “ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள் நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. மரணத்தண்டனை கொடுக்க இவன் குற்றமொன்றும் செய்யவில்லையே!”
என்று கூறினான். ஆகவே இவர் பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு விமர்சனங்களுக்கு உட்படுவதன் வேதனையை அறிந்திருந்தார். பலவிதமான பொய்க்குற்றச் சாட்டுகளை அவர் மேல் சுமத்தி அவரை சிறைபிடித்தனர். செய்யாத தவறுக்காக பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருப்பதன் வேதனையை அனுபவித்தார்.
அவமானப்படுவதன் அவஸ்தையை அறிந்திருந்தார்.
எம்மில் எவருமே அவமானப்பட விரும்பவ தில்லை. நாம் இரகசியமாச் செய்த தவறுகள் கூட மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவமானப்பட வேண்டுமே என நாம் அவற்றை மூடி மறைக்கிறோம். இவரோ தவறொன்றையும் செய்யவில்லை. ஆனால் இவரை அவமானப்படுத்தினார்கள் இவரைப் பிடித்துக்கொண்ட மனுஷர் இவரைப் பரியாசம்பண்ணி, அடித்து, இவருடைய கண்களைக் கட்டி, இவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, மற்றும் அநேக தூஷண வார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள். முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி, அவரின் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைப் பரியாசம்பண்ணினார்கள். ஒரு பாவமும் அறியாத இவரை தூக்கிலிட இழுத்துச்சென்றனர்.
பாடுகள் கஷ்டங்களின் வேதனையை அறிந்திருந்தார்.
இவரை வாரினால்
அடித்தார்கள்.
அந்த வாரின் முனை
உருண்டை போலிருக்கும் அந்த உருண்டையில்
கூரான ஆணிகள் போலிருக்கும்
ஒருமுறை அவ்வாரினால் அடித்த இடத்தால்
சதையும் சேர்ந்து வெளியே
வரும். இந்த வாரினால்
பலமுறை இவரை அடித்தார்கள்.
கைகால்களில் ஆணிகள் அடித்து
தூக்கிலிட்டார்கள்.
அப்படி தொங்குகையில் ஒரு புறம்
கை கால்களில் இரத்தம்
வடிந்தது மறுபுறம் வாரினால்
அடித்த காயங்களின் வேதனை.
தலையிலும் முள்முடி சூட்டியிருந்தனர்.
சரீர பாடுகளை மட்டுமல்ல.
மனரீதியான, உணர்வு ரீதியான
பாடுகளையும் அனுபவித்தார். தன் தாய்,
தான் படும் வேனையைக்
காண்பது இவருக்கு இலகுவாயிருந்திராது.
உடைகள் உரியப்பட்ட நிலையில்
தூக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டார்.
தூக்குமரத்தில்
வைத்து ஆணியடிப்பது மிகவும் அவமானத்திற்குரிய காரியமாகக் கருதப்பட்டது.
அதனால்தான் இத்தண்டனையை நிறைவேற்றிய ரோமர்கள் ரோம
பிரஜைகளுக்கு
இத்தண்டனையை கொடுப்பதில்லை. மிகவும் மோசமான
குற்றவாளிகள்
தேசத்துரோகிகள்
போன்றவர்களே இவ்வாறு தண்டிக்கப்பட்டனர்.
இவரின் சமுதாயம் இந்த
தண்டனையை மாபெரும் சாபம்
எனக் கருதினார்கள். பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு
தண்டனை அனுபவிக்கும் உங்களையும் இவரால்தான்
புரிந்துக்கொள்ள முடியும்!
உண்மையான குற்றவாளிகளையும் இவரால் புரிந்துகொள்ளமுடியும்! ஏனென்றால் இவர் சரீர, மானசீக, உணர்வுரீதியான பாடுகளை மட்டுமல்ல இன்னொரு விதமான பாடொன்றையும் அனுபவித்தார். அது என்னனெவன்றால் உலக மனிதர்கள் அனைவரும் செய்த பாவங்கள் இவர்மேல் விழுந்தது. அக்காலத்தில். பாவம் செய்தவன் தன் பாவத்தை ஒரு குறையற்ற ஆட்டக்குட்டியின் மேல் கைகளை வைத்து அதில் சுமத்தி; அதனை கொர்பான் கொடுப்பான். அவ்வாறே அந்த சிலுவையில் எமது பாவங்கள் இவரின் மேல் விழுந்தது. எப்படி ஒரு பலியாடு கொர்பான் கொடுக்கப்படுமோ அப்படியே எமது பாவங்களுக்காக இவரும் கொர்பானானார்.
இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும் உங்களை புரிந்துகொள்பவர் யாரென்று. அவர்தான் பாவமறியா பாரிசுத்தரான ஈஸா அல் மஸீஹ்! 'என்வேதனை எங்கே இறைவனுக்குப் புரியப் போகிறது’ என்று புலம்பிக்கொண்டிருக்கும் என் அருமை சகோதர சகோதரிகளே! உங்களை புரிந்துகொள்வதற்காக மாத்திரமல்ல, உங்கள் பாவங்களுக்கான அபராதத்தையும் செலுத்தி, சுவனபதியை அடையும் நிச்சயத்தையும் உங்களுக்குத்தரவே இறைவார்த்தையாம் கலிமதுல்லாஹ் இந்த பூமிக்கு வந்தார்.
ஈஸா அல் மஸீஹ் அவர்கள் பூமிக்கு வருவதற்கு சுமார் 700 வருடங்களுக்கு முன்பு புனித கித்தாபில் இவ்வாறு முன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது: “மெய்யாகவே அவர் நம்முடைய
பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச்
சுமந்தார், நாமோ, அவர்
இறைவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார் நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும்
ஆக்கினை அவர்மேல் வந்தது,
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து,
அவனவன் தன் தன்
வழியிலே போனோம்; இறைவனோ
நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்.”
அன்பான வாசகர்களே!
நானும் நீங்களும் செய்த
பாவத்திற்காகத்
தான் ஈஸா அல்
மஸீஹ் இந்த பாடுகளை
அனுபவித்தார்.
நாம் எமது பாவத்தோடே
மௌத்தாவோமேயானால்
நரகம் என்ற பயங்கரமான
இடத்திற்குப்போய்
சதாகாலமும் வேதனைப்பட நேரிடும்.
அதிலிருந்து எம்மை பாதுகாக்கும்படி
அவர் எமது இடத்தில்
எமக்காக மரித்தார். மரித்து
அடக்கம்பண்ணப்பட்டு
மூன்றாம் நாளில் உயிரோட
எழுந்து இன்றும் உயிரோடு
இருக்கிறார். நாம் எமது
பாவங்களுக்காக
மனஸ்தாபப்பட்டு
அதிலிருந்து விலகி அவரிடம்
மன்னிப்புகேட்டு
அவரை ஈமான்கொண்டு எமது உள்ளத்தில்
ஏற்றுக்கொண்டால்
அவர் எம் பாவங்களை
அனைத்தையும் மன்னித்து, எமக்கு
இறைவனோடு சதாகாலமும் வாழும்
சந்தோஷமமான வாழ்வைத் தர
வாக்குப்பண்ணியுள்ளார்.
உண்மையான உள்ளத்தோடு எமது
பாவங்களை அறிக்கைசெய்து உண்மையான தௌபாவின்
சந்தோஷத்தை உணர்வோமா நாங்கள்?
Comments
Post a Comment