தாய்வானில் பணிப்புரியும் இந்தோனேசிய இஸ்லாமியர்
நாள் 17 ஜுலை 26, 2013
வார முடிவில் இந்தோனேசிய தொழிலாளர்கள் செல்லுமிடம்? தாய்வானில்…
வெளிநாட்டுத் தொழிலாளர்கள்
அடுத்த
10 ஆண்டுகளில் 60 கோடி வேலை
தேவையாயிருககிறது.
2012ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமை மேலும் அது ரமளான் மாதம் முடிவுறும் நாளான ‘ஈத்’ பெருநாளாகவும் குறிக்கப்பட்டிருந்தது. தைப்பியின் முக்கிய ரயில் நிலையத்தில் கூடியிருந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான இந்தோனேஷிய தொழிலாளர்களுக்கு அந்நாள் சந்தோஷமான நாளாக ஆரம்பித்தது. அவர்கள் அங்கிருந்த தாழ்வாரத்தில் பெருங்கூட்டமாக திரண்டனர். அந்த இடம் அவர்கள் உட்காரவும், தங்கள் நண்பர்களை சந்தித்து இந்த முக்கியமான முஸ்லீம் பெருநாளை கொண்டாடவும் வசதியான ஒரு இடமாக இருந்தது. இந்த மிகப் பெரிய ஒரு நாள் கூடுகை பல அடுக்கு சுரங்கப்பாதை, மற்றும் வேகமாக செயல்படும் ரயில் நிலையம் ஆகியவற்றின் வழக்கமான ஓட்டத்தை தெரியாமலேயே ஸ்தம்பிக்க வைத்து விட்டது.
பயணிகளிடமிருந்து முறையீடுகள் வந்த போது தைப்பி ரயில்வே நிலையம் அதன் முக்கிய தாழ்வாரத்தின் பெரும் பகுதிகளை வாரக்கடைசியில் மூட ஆரம்பித்தது. அது சில வெளிநாட்டு இந்தோனேஷிய வெளிநாட்டு வேலையாட்களிடமிருந்து கோபமான எதிர்ப்பைக் கொண்டு வந்தது. எனவே செப்டம்பர் 12ம் தேதி சுமார் 50 தொழிலார்கள் இரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினா;. “இன-வெறி எதிர்ப்பு” அட்டைகளைப் பிடித்தவாறு நாங்கள் பொது இடங்களில் கூடுவதற்கு எங்களுக்கு உரிமை வேண்டும் என்று கேட்டும், “ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்கு எங்களுக்கு இடம் வேண்டும்” என்றும் முழக்கமிட்டனர். பிறகு இரயில் நிலையத்திற்கு உள்ளே சென்று அங்கிருந்த முக்கிய தாழ்வாரத்தின் தரையில் அமர்ந்து கொண்டனர்.
தாய்ப்பேயில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வார இறுதியிலே ஒன்று கூடுவது சாதாரண காரியமாக
காணப்பட்டது. அது டையான் மற்றும் டாய்சூங்கில் வழக்கமான காட்சியாகும். அவர்கள் இரயில் நிலையத்திலும், பூங்காக்களிலும், இன்னும் சில தெருக்களின் சாலையோரப் பாதைகளிலும் கூடுகின்றனர். இதனை சிலர் பார்த்து கோபங்கொண்டாலும் அவர்கள் சார்பில் ஒரு தீர்வைக் காண ஒருவரும் முயற்சிப்பதாகத் தெரியவில்லை.
இன்றைக்கு தாய்வானிலும், ஹாங்காங்கிலும் வீட்டு வேலைக்காரர்களாக இந்தோனேஷியகள் பணிபுரிகின்றனர். இரு. செம்படம்பர் 2012ன் புள்ளி விவரத்தின்படி தாய்வானில் 1,55,000 பேரும், ஹாங்காங்கில் 1,51,000 பேரும் இருக்கின்றனர். இவர்களில் அதிகமான பேர் கிறிஸ்தவ எஜமான்களுக்கு வேலை செய்கின்றனர்.
ஒரு சில ஹொங்கொங்கிலே உள்ள திருச்சபைகள் இந்தோனேசிய உள்நாட்டு ஊழியர்கள் என்றழைக்கப்படும்
கூட்டத்தினருக்கு ஊழியங்களை செய்கின்றார்கள். அவர்கள் இணையத்தளம், சமூகம் கணணி கல்வி
மற்றும் மொழிப்பயிற்சியை வழங்கும் பயிற்சி நிலையங்களை நிறுவி உதவி செய்கின்றார்கள்.
மற்றைய கிறிஸ்தவ உதவிகளாக ஹொங்கொங் உட்பட தாய்வான் நமஸ்கார மற்றும் ஐக்கிய ஸ்தாபனங்கள்
மற்றும் தங்குமிட வசதிகள் கொண்ட மனைகளினூடாக உதவிகளை செய்கின்றனர்.
துஆ செய்வோம்.
• ஹாங்காங்கில் உள்ளது போல
தாய்வான் சபைகளும் இந்துனேசிய
தொழிலாளர்களுக்கு மையங்களை அமைத்து
கொடுக்க துஆ செய்வோம்.
• தாய்வானில் உள்ள
சபைகளும், கிறிஸ்தவர்களும் பரலோக ராஜ்யத்தின்
தரிசனம் பெற்றுக் கொள்ளவும்,
தங்களிடம் நீண்ட நாட்களாக
வேலை செய்து கொண்டிருக்கும்
வீட்டு வேலைக்காரர்களின் (இந்துனேசிய முஸ்லீம்கள்) கலாச்சாரத்தை
அறிந்து கொள்ளவும் அவர்களை
அன்பினால் சந்திக்கவும் துஆ செய்வோம்.
• வெளிநாட்டு வேலையாட்கள்
மீது எப்படி அக்கறை
கொண்டு உதவுவது, அவர்களுக்கு
சுவிசேஷம் அறிவிப்பது, சீஷர்களாய்
மாற்றுவது என்பவைகளைப் பற்றிய நீண்ட
கால திட்டத்தை ஏற்படுத்த
திருச்சபைகள்
மற்ற ஸ்தாபனங்களோடு இணைந்து செயல்பட
துஆ செய்வோம்.
• இந்தோனேஷிய வெளிநாட்டுத்
தொழிலாளர்கள்
தங்கள் இருதயத்தை சத்தியத்துக்கு
திறக்க துஆ செய்வோம்.
Comments
Post a Comment