ஈஸா முஸ்லீம்களை ஆதரிப்போம்
நாள் 21 ஜுலை 30, 2013
தஞ்சம் கேட்கும் இஸ்லாமியரை திறந்த மனதோடு உபசரிக்கும்
வீடுகள்
ஜாக் வெளியே ஓடிப் போய் விட்டான் - ஒரு சகோதரன், அவனுக்கு விஷம் கொடுத்து விடுவார்கள் என்பதைத் தெரியப்படுத்தியிருந்தான் - ஜாக்கின் தந்தை ஒரு மௌலவியாவார் தனது 17 வயது மகன் ஈஸா அல் மஸீஹை பின்பற்றுபவனாக மாறி விட்டான் என்பதைக் கண்டுபிடித்து விட்டார். சில வருடங்கள் கழித்து இறையியல் கல்வி பயில்வதற்காக கனடாவிற்கு வந்தான் அந்த ஈஸா முஸ்லிம். கடுமையான தனிமையும், ஒரு அந்நிய தேசத்தில் குடும்பமே இல்லாத புதிய நபராக இருப்பதன் வலியும் அவனை வாட்டியது.
யுத்தம், ஒழுக்கமின்மை முரண்பாடுகள், மத ரீதியான உபத்திரவங்கள்,
இயற்கை அனர்த்தங்கள் நிமித்தம் அவற்றிலிருந்து தங்களை காத்துகொள்வதற்காக ஜனங்கள் வட
அமெரிக்கா நோக்கி வருகின்றார்கள். இப்படி ஆயத்தமில்லாமல் வருகின்ற புதியவர்கள் வெளிநாட்டில், குறிப்பாக, அவர்களை உண்மையிலேயே வரவேற்காத நாட்டில் எவ்வாறு இருக்கிறார்கள்?
2008ம் ஆண்டில் புதியவர்கள் மையம்(ஜாக்கும் அதில் ஒருவன்) கனடாவில் திறக்கப்பட்டது. இதன் நோக்கம் முஸ்லீம்களை வரவேற்று அவர்களுக்குப் புதிய நாட்டில் நடைமுறை உதவிகளை செய்வதாகும். வீடு-கட்டும் உதவி, ஆங்கில மொழி பயிற்சி, பிள்ளைகள் பராமரிப்பு உதவி, வீட்டுப்பாட உதவி போன்றவற்றை பெற்றுக் கொண்டதன் விளைவாக நட்புறவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்றைக்கு புதிய தாய்மார்களின் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, இளைஞர்களுக்குக் கால்பந்தாட்டம், முழு குடும்பத்திற்கும் சமுதாய கொண்டாட்டங்கள் ஆகிய சில காரியங்களையும் புதிய வரவேற்பதற்காக இந்த மையம் செய்து கொண்டிருக்கிறது.
முஸ்லீம்கள் புதிய கிறிஸ்தவ நண்பர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் போது, இதயத்தோடு இதய தொடர்புகள் ஏற்படுகின்றன. சிலர் ஏற்கனவே ஈஸா அல் மஸிஹை பின்பற்றுபவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் சமாதான பிரபுவிடம் செல்லும் வழியில் உள்ளனர். சுவிசேஷத்தின் விதை, சர்வதேச குழு அவர்களுக்கு ஊழியம் செய்யும்போது விதைக்கப்படுகிறது.
துஆ செய்வோம்.
• தனது சொந்த மதத்தை விட்டு வெளியேறியுள்ள இஸ்லாமியர் மற்ற மக்களோடு
கலாச்சாரம் மற்றும் மொழியிலே இணைவதை கடினமாக காண்கிறார்கள். முதிர்ச்சியான கிறிஸ்தவர்கள்
ஈஸா முஸ்லீம்களை நண்பர்களாகவும் தங்கள் குடும்பத்தினராகவும் நோக்கவேண்டும் என்று துஆ
செய்வோம்.
• விசுவாசிகள் சமாதான மனிதர்களை (லூக்கா 10) சந்திக்கவும், முஸ்லீம்களை சமாதானப் பிரபுவிடம் அறிமுகப்படுததும் கருவிகளாக மாறவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டும் என்று துஆ செய்வோம்.
• வடஅமெரிக்காவிலுள்ள முஸ்லீம்கள் மேற்கத்திய நாட்டவர் ஒருவர் ‘ஹாய்’ என்று வாழ்த்தும் போது அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் பல நேரங்களில் இந்த ‘ஹாய்’தான் வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற உறவுகளை ஏற்படுத்த உதவுகின்றன. எனவே விசுவாசிகள் இவ்வித வாழ்த்துகளைத் தெரிவிக்க முன்வர துஆ செய்யுங்கள்.
• மேற்கத்திய திருச்சபைகள் தங்கள் நாட்டிற்கு வரும் முஸ்லீம்களை தொந்திரவாக, ஆபத்தாகப் பார்க்காமல், தேவன் தரும் வாய்ப்பாக பார்க்கத்தக்கதான பார்வையை தேவன் அவைகளுக்குத் தர ஜெபியுங்கள்.
Comments
Post a Comment