அல்லாஹ்வின் இரக்கத்தை நிராகரிக்கின்றோமா?

ஈஸா அல் மஸீஹ் 8

அல்லாஹ்வின் இரக்கத்தை நிராகரிக்கின்றோமா?


ஈஸா அல் மஸீஹ் அவர்கள் அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவூதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். ஈஸா அல் மஸீஹ் அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று ஈமான் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் ஈமான் கொள்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் ஈமானின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.”

இன்ஜில் (மத்தேயு 9:27-30)

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். ஈஸா அல் மஸீஹ் மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.”

இன்ஜில் (மாற்கு 1:40-42)


மறுநாளிலே அவர் (ஈஸா அல் மஸீஹ்) நாயீன் என்னும் ஊருக்குப் போனார். அவருடைய சஹபாக்கள் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ விதவையாயிருந்தாள். ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். ஈஸா அல் மஸீஹ் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, சந்தாக்கு பெட்டியை தொட்டார். அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மேன்மைமிக்க ரஸுல் ஒருவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், அல்லாஹ் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, அல்லாஹ்வை மகிமைப் படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.”

இன்ஜில் (லூக்கா 7:11-17)


அல்லாஹ்வின் இரக்கத்தை நிராகரிக்கின்றோமா?


அற்புதம் செய்பவராகிய ஈஸா அல் மஸீஹ் அவர்களது நற்செய்தி தொடர்ந்தும் பரவி வருகிறது. இன்றும் அவரது சஹாபாக்களால் அவரது பெயரால் அற்புதங்கள் நடக்கின்றன. ஈஸா அல் மஸீஹ் அவர்கள் உயிருடனிருந்து தனது இறை மகிமையையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறார் என்பது நிரூபணமாகிறது. அல்லாஹ் அவருக்கு விசேட உயரிய இடத்தை கொடுத்திருக்கிறான் என்று இறை வார்த்தைகள் நினைப்பூட்டுகின்றன. மேலும் இந்த உயரிய இடம் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அவனது வல்லமை திரும்ப பெறப்படமாட்டாது. அந்த வல்லமையை நம்புகிறவர்களுக்கு இன்றும் அது கிடைக்கும். இது துன்யாவில் வாழும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களையும் நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பது இன்ஜில் எமக்கு தரும் நற்செய்தியாகும். இன்ஜிலின் நற்செய்தி அறிவிக்கப் படவேண்டும்.




நபி யஹ்யா 2000 வருடங்களுக்கு முன் பிரசங்கித்த அதே நற்செய்தியே இன்றைய செய்தி: இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் இறை ஆட்டுக் குட்டி" தூய குர்பானின் உருக்கமான தொடுகை மரணத்தில் உள்ளவர்களை உயிரடைய செய்யும். அது குருடர்களின் கண்களை திறக்கும், குஷ்டரோகிகளை குணமாக்கும், வியாதியஸ்தர்களின் நோய்களை குணமாக்கும், மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் மரித்துப்போன ஆன்மாவை உயிர்ப்பிக்கும்.

ஈஸா அல் மஸீஹ் அவர்களுக்கூடாக ஒருவன் அல்லாஹ்வை நெருங்குவதன் மூலம் அவனது வல்லமையையும் ஆரோக்கியத்தையும் பெற முடியும். மரணித்த வாழ்வானது, புதிய வாழ்வாக மாறுகிறது. புதிய மனிதன் அல்லாஹ்வின் ரூஹ் ஆனவர் மூலம் உயிர்ப்படைந்து புதிய ஆன்மீக வாழ்வையடைகிறான்.

அநேகர் இந்த இன்ஜிலின் செய்தியை ஏற்க விரும்புவதில்லை என்பது வேதனையானது. அல்லாஹ்வின் இந்த அடையாளத்தை நிராகரிப்பவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் உண்டு. நாம் மீண்டும் ஸுரத்துல் பகராவில் உள்ள பசு மாட்டின் கதைக்கு திரும்புவோம். பலி செலுத்தப்பட்டாகிவிட்டது. மரணித்த மனிதன் உயிரடைந்தவுடன் மக்களின் இருதயம் கடினமாகிவிட்டது. அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான் என்பது அல்லாஹ்வின் அடையாளமாகவிருந்தும், இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின". அல்லாஹ்வின் அடையாளத்தை மறுப்பவர்களுக்கு ஏற்படும் விளைவை நாம் அறிந்திருக்கிறோம்.

இன்றும், மனிதவர்க்கத்தின் வாழ்வில் அற்புதமான மாற்றத்தை கொண்டுவரும் குர்பானின் அடையாளத்தை நம்ப மறுக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஈஸா அல் மஸீஹ் அவர்களின் மரணத்தையும் பலியையும் அவரது வாழ்விலிருந்து நீக்க அநேகர் முயற்சித்திருக்கிறார்கள். ஆனாலும், சத்தியத்தை மறைக்க முடியாது. அல்லாஹ் திறந்ததை ஒருவரும் மூட முடியாது. அதனால் ஈஸா அல் மஸீஹ் அவர்கள் தூய குர்பான் என்பதை அல்லாஹ் உலகத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறான். ஈஸா அல் மஸீஹ் அவர்கள் நித்திய வாழ்வளிக்கும் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி" அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.

பாவத்தின் சம்பளம் மரணம். அல்லாஹ்வுடைய கிருபைவரமோ நம்முடைய ரப்புவாகிய ஈஸா அல் மஸீஹ் அவர்களால் உண்டான நித்திய ஜீவன்.”

இன்ஜில் (ரோமர் 6:23)

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?