சிலட்டிஸ் இஸ்லாம்

நாள் 05                                ஜுலை 14,   2013              
                                                                                                                                                                                                                                                                                                                        ங்களாதேஸ் - சிலட்டிஸ்  மத அணுஷ்டான முறை

சிலட்டிஸ் இஸ்லாமிய நம்பிக்கையின் மீது பாதிப்பை ஏற்படுத்துகின்ற இரண்டு காரியங்கள் உண்டு - ஒன்று கடந்த காலத்திற்குரியது மற்றொன்று நிகழ்காலத்திற்குரியது.

800 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முஸ்லீம் துறவி தனது 360 சீடர்களோடு, தற்போது வடகிழக்கு பங்களாதேஷ் தொடங்கி அண்டை நாடான இந்தியா வரைக்கும் பரவி இருக்கும் சிலட்டிஸ் பகுதியில் இருக்கிற மிக முக்கிய நகரமான சிலட்டிற்கு வந்தார். அந்த முஸ்லீம் தனது மந்திர சக்தியினால் அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த இந்து இராஜாவை முறியடித்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வந்த பல நூற்றாண்டுகளில் இஸ்லாம் மதமானது சிலட்டிலிருந்து ஏனைய வங்காளத்திற்குப் பரவியது. இந்த முஸ்லீமின் சமாதியோடும் மற்றும் அவருடைய சீஷர்களோடும் தொடர்புடைய, பல விதமான இரகசிய மற்றும் மந்திர பழக்க வழக்கங்களோடு ஒரு வலுவான மத அணுஷ்டான முறையாக மாறியது. வியாழக்கிழமை மாலைகளில், மரித்துப் போனவர்களின் ஆவியை அவர்கள் சமாதிகளில் தங்களது உதவிக்காகத் தேடுவது சிலட்டி முஸ்லீம்களுக்கு சாதாரணமான பழக்கமாக இருக்கிறது.


சமீப நாட்களில் பாரம்பரிய இஸ்லாத்தின் தாக்கமானது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ள்ளிக்கிழமைகளிலும், பள்ளிவாசல்கள் தொழுகை செய்யும் ஆண்களால் நிறைந்து காணப்படுகிறது. இந்த பகுதி முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் எல்லாரையும் விட சிலட்டி முஸ்லீம்களே மிகவும் பாரம்பரிய முஸ்லீம்களாக இருக்கின்றார்கள். உலகிலேயே நான்காவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக பங்களாதேஷ் விளங்குகிறது. இஸ்லாம் மதம் அரசியலிலும் மக்களின் வாழ்வு மற்றும் கலாச்சாரத்திலும் பெரிய பங்கை வகிக்கின்றது. இஸ்லாம் அரசாங்க மதமாக இருந்தாலும் மற்ற மதத்தினைப் பின்பற்றுவதற்கு உரிமை சுதந்திரம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது.

மிகப்பெரிய  தேவை

சிலட்டி முஸ்லீம்கள் பங்களாதேசத்தில் 70 இலட்சம் பேரும், இந்தியாவில் 20 இலட்சம் பேரும், உலகின் பிற பகுதிகளில் 20 இலட்சம் பேருமாக மொத்தம் ஒரு கோடியே பத்து இலட்சம் சிலட்டி முஸ்லீம்கள் உள்ளனர். பல சிலட்டி முஸ்லீம் குடும்பங்களில் வெளிநாடுகளில் வாழுகின்ற, வேலை செய்கின்ற அங்கத்தினர்கள் இருக்கின்றனர். வசதி படைத்த குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை மேற்கத்திய உலகத்திற்கு, குறிப்பாக இங்கிலாந்து நாட்டிற்கு னுப்புகின்றனர். ஏழ்மையான குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் வேலை செய்வதற்கு அனுப்புகின்றனர். இவைகள்  இப்படியிருந்தாலும் பெரும்பாலான் சிலட்டி முஸ்லீம்கள் இன்னும் மிகுந்த  வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

துஆ தேவைகள்

1.      சிலட்டி இஸ்லாமியருக்கு தங்கள் சொந்த மொழியில் இறைவேதம் கிடைக்கவும் அதனை அவர்கள் வாசிக்கும் திறனை பெற்றுகொள்ளவும் துஆ செய்வோம்.

2.      இவர்கள் தொடர்ந்தும் மரித்துபோனவர்களிடம் உதவியையும் விடுதலையையும் தேடாமல் மரணத்தை வென்ற ஈஸா அல் மஸீஹ் அவர்களிடம் உதவிதேடகூடியவர்களாக  மாற துஆ செய்வோம்.


3.      வெளிநாடுகளில் வாழ்கிற சிலட்டி இஸ்லாமியருக்கு அங்குள்ள விசுவாசிகள் சத்தியத்தை சொல்லவும். அதனை பெற்றுகொண்டவர்கள் தங்கள் குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் துஆ செய்வோம்.


4.      சிலட்டி இஸ்லாமியர் மத்தியில் வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானான எங்கள் இறைவனிடம் வேண்டுவோம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?