‘இயேசுவைத் தேடு, சத்தியத்தை கண்டடைவாய்’
நாள் 12 ஜுலை 21, 2013
தடைகளுக்கு
எதிராக துஆ செய்வோம்
பல முஸ்லீம்கள் சுவிசேஷத்தை நிராகரிக்க வில்லை மாறாக அதை அவர்கள் கேள்விப்படவே இல்லை.
இறைவனின்
பைத்தியம் என்ற தனது புத்தகத்தில் நிக் ரிப்கின் என்பவர் இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்த விசுவாசியான பிரமானா என்பவரின் கதையைக் கூறுகிறார். கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பாக பிரமானா தன் வாழ்க்கை சீரழிந்து விட்டது என்று எண்ணினான். உள்ளுர் இமாமின் அறிவுரைப்படி தனது பிரச்சனைகளுக்கான பதிலை பெற்றுக் கொள்வதற்காக நோன்பு இருக்கத் தொடங்கினான். மூன்றாவது நாளிலே, ‘இயேசுவைத் தேடு, சத்தியத்தை கண்டடைவாய்’என்கிற சத்தம் ஒன்றைக் கேட்டான். மத சுதந்திரம் ஒடுக்கப்பட்டிருக்கிற ஒரு இஸ்லாமிய நாட்டில் இருந்த பிரமானா இயேசுவைக் குறித்து ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை. அந்த நேரத்தில் அவனுக்கு இயேசு ஒரு பழமா, ஒரு பாறையா அல்லது ஒரு மரமா
என்றுகூட தெரியவில்லை. அந்த சத்தம் தொடர்ந்து எவ்வாறு இயேசுவைக் கண்டு கொள்ளுவது என்று விளக்கமான அறிவுரைகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. பிரமானா, அந்த சத்தத்தின் வழி நடத்துதலைக் கேட்டு, தான் இது வரையில் சென்றிராத நகரம் ஒன்றிற்கு ஒரு இராத்திரி முழுவதும் நடந்து சென்றான். பிரமானாவின் பிரயாணம் 2 கோடியே 40 இலட்சம் மக்கள் தொகை கொண்ட அவனது மக்கள் கூட்டத்தில் விசுவாசிகளாய் இருந்த வெறும் 3 பேரில் ஒருவரது வீட்டிற்கு வழி நடத்திச் சென்றது . அங்கே பிரமானாவிற்கு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்டனர், பிரமானா அந்த நாளில்தானே கிறிஸ்துவின் சீஷனாய் மாறினார்.
World
Watch List (உலக கவனப் பட்டியல்) என்ற ஸ்தாபனம் கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தும் நாடுகளை கவனித்து, உபத்திரவத்தின் அளவுப்படி அவைகளை வரிசைப்படுத்தியுள்ளது. அவ்வரிசையில் முதல் பத்து நாடுகளில் ஒன்பது நாடுகள் இஸ்லாமிய நாடுகள். பல நாடுகளில் இயேசுவைக் குறித்து அறிந்து கொள்வது கிட்டதட்ட இயலாத ஒன்றாகவே இருக்கிறது.
வேதாகமம்,“கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்….அவரைக் குறித்து கேள்விப்படாதவர்கள் எப்படி அவரை விசுவாசிப்பார்கள் ? (ரோமா; 10:13-14). அற்புதமாக, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார். பிரமானா போன்றவர்களுக்கு செய்தது போல அற்புதமான விதங்களில் முஸ்லீம்களை சந்திக்கிறார். ஆனாலும் முஸ்லீம்கள் இயேசுவை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்கு இன்னும் சுதந்திரம் அவசியமாயிருக்கிறது. மேலும் இவர்களுக்கு இறைவேதம் கிடைப்பதற்கும், உயிருள்ள உதாரணங்களாக கிறிஸ்தவ சாட்சிகளை இவர்கள் சந்திப்பதற்கும் சுதந்திரம் தேவையாயிருக்கிறது. இஸ்லாமிய அரசாங்கங்களாலும், சமுதாயங்களாலும் விதிக்கப்பட்டிருக்கிற கட்டுப்பாடுகள் விலக வேண்டும்.
அதற்காக துஆ செய்வோம்.
• இயேசுவைக் குறித்து அறியவே முடியாத சூழ்நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? இலட்சக்கணக்கான முஸ்லீம்கள் சுவிசேஷத்தைக் கேள்விப்படாமலே நித்தியத்தை சந்திப்பார்கள் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா ? கற்பனை செய்யுங்கள், முகங்குப்புற விழுந்து முஸ்லீம்கள் இயேசுவைக் குறித்து அறிந்து கொள்ளுகிற வாய்ப்பு கிடைக்க கதறுங்கள்.
• முஸ்லீம் நாடுகளின் மூடப்பட்ட கதவுகள் திறக்கப்பட துஆ செய்யுங்கள். அரசாங்க கட்டுப்பாடுகளும், சமுதாயத்தின் அழுத்தங்களும் நீங்க ஜெபியுங்கள். இறைவேதம்
இவர்களுக்குக் கிடைக்கவும், அதிகமான முஸ்லீம்கள் தங்கள் மொழிகளில் வேதாகமத்தை வாசிக்கவும் துஆ செய்யுங்கள்.
• இஸ்லாமிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களை இறைவன் பெலப்படுத்தவும், தங்களது தாய்நாட்டிலேயே இவர்கள் தங்கியிருக்க உதவவும் துஆ செய்வோம்.
Comments
Post a Comment