அகதிகளின் பிரதான வீதி
அகதிகளின் பிரதான
வீதி
நாள்
03 ஜுலை 12. 2013
ஆவிக்குறிய அறுவடை ஐரோப்பாவிலிருந்து…
ஐரோப்பாவில் ஒரு ஆவிக்குரிய அறுவடை முதிர்ச்சி அடைந்து வருகிறது. ஒரு கோடியே பத்து இலட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸ் நாட்டில் பத்து இலட்சம் அகதிகள் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமான பேர் மத சுதந்திரம் இல்லாத இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களது சொந்த நாட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இவர்களில் அதிகமானவர்கள் பயமுறுத்துகிற, அழிக்கின்ற இஸ்லாம் மதத்தின் மீது ஏமாற்றம் அடைந்திருப்பவர்களாக இருப்பதால் சுவிசேஷத்திற்குத் திறந்த மனதுடையவர்களாய் இருக்கின்றனர்.
2012ம் ஆண்டு ஜுலை மாதம் விசுவாசிகளின் குழு ஒன்று இங்குள்ள அகதிகளுக்கு வார்த்தையாலும் செயலினாலும் உதவி செய்வதற்கு ஏதென்ஸ் நகருக்கு பிரயாணமாய் சென்றது. உள்ளுர் சபைகளோடு இணைந்து உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள், செல்போன் மெமரி கார்டுகள் ஆகியவற்றோடு பல்வேறு மொழிகளில் கிறிஸ்தவ இலக்கியங்கள் மற்றும் வேதாகமங்களை விநியோகம் செய்தனர். செல்போன் மெமரி கார்டுகளில் ஆறு மொழிகளில் ‘இயேசு’ திரைப்படமும், இறைவேதமும், பாடல்களும் மற்றும் தங்களது கலாச்சார சூழலில் எவ்வாறு ஈஸா அல் மஸீஹ்வை சந்தித்தார்கள் என்று கூறும் உண்மை சம்பவங்களும் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான அகதிகள் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள். மேலும் ஹெட்போன்களையும் பயன்படுத்துகின்றனர். எனவே வேதாகமத்தை அவர்கள் வாசிக்கக் கேட்கும் போது யாராவது பார்த்து விடுவார்களோ அல்லது கேட்டு விடுவார்களோ என்று பயப்படத் தேவையில்லை. அவர்கள் மத்திய ஐரோப்பாவை நோக்கி பயணப்பட்டுச் செல்லும்போதும் செல்போன்களும் அவர்களோடுகூடச் செல்கிறது.
உண்மையான அமைதியும் இளைப்பாறுதலும்.
அமீரின் பெற்றோர் ஈரான் நாட்டிற்கு ஓடிச் சென்றபோது அவன் சிறு குழந்தையாய் இருந்தான. அவன் இளைஞனான போது இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ‘சாட்’ அறையின் மூலமாக ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டான். சாட் அறையில் உரையாடும் போது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அவனுக்குக் கூறினார்கள், அவனுக்காக ஜெபித்தார்கள்.
அது அவனை மிகவும்
தொட்டது. தனது மகனின் பிறப்புச் சான்றிதழில் ‘அகதி குழந்தை ’ என்று முத்திரையிட்டிருப்பதைப் பார்த்து அமீர் தான் சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ நிரந்தரமான வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தான்
. அவ்வாறு செல்லும் போது ஏதென்ஸ் நகரில் தங்கினான். அங்கு சில கிறிஸ்தவர்களை சந்தித்தான்.
அங்கே இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள
விசுவாசத்திற்கு வந்தான். தானே ஒரு அகதியாக இருந்தும்
தன்னில்
இளைப்பாறுதலையும்,
சமாதானத்தையும்
அருளுகிற
ஈஸா அல் மஸீஹ்வை தங்களது வழிப் பிரயாணங்களில் கண்டு கொண்ட பல அகதிகளில் அமீரும் ஒருவன் ஆனான்.
நாங்கள் துஆ செய்வோம்
1. அகதிகளின் பிரதான வீதிகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களுக்காக துஆசெய்வோம். அவர்கள் மெய்யான ஜீவனைக் கண்டு கொள்ள மன்றாடுவோம். (யோ.14:6 “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்….”)
2. கிறிஸ்தவர்கள் இந்த அகதிகளிடம் அன்பையும் மரியாதையையும் காண்பிக்கவும் உதவி செய்யவும் துஆசெய்வோம். (மத். 25:35 “…நான் அந்நியனாய் இருந்தேன் ….”)
3. ஈஸா அல் மஸீஹ்வை அறிந்துகொண்ட முஸ்லீம்கள் தங்களது விசுவாச வாழ்ககையை சந்தோஷத்தோடு வாழவும் மற்ற இஸ்லாமியரையும் ஈஸாவோடு வாழ அழைக்கவும் துஆ
கேட்போம். (யோ.13:35, “…..நீங்கள் என்னுடைய சீஷர்கள் …”).
Comments
Post a Comment