சத்தியத்திற்கான பசி



நாள் 04                                             ஜுலை 13, 2013   

                       

ல்ஜீரியா நாடடுக் குழநதைகளை     ந்தியுங்கள்.                                 
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                வடக்கு அல்ஜீரியா நாட்டிலுள்ள மிகப் பெரிய மலை ஒன்றின் அடிவாரத்திலுள்ள கபிலை என்ற குக்கிராமத்தில் ஜோசப் என்ற சிறு பையன் வளர்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் பள்ளியில் இஸ்லாமைக் குறித்தும் அரபி மொழியில் குரானையும் படித்து வந்தான். அவனுடைய தகப்பன் ஈஸா அல் மஸீஹ்வின் மீது ஈமான் கொண்ட பிறகும் அவன் இறைவனை குறித்து அதிகம் கேள்விப் படவில்லை. அவனுடைய தகப்பனார் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்ததால், ஜோசப்புக்கு வேதாகமக் கதைகளைக் கூறுவதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

ஜோசப்பின் சிந்தனைகள் எல்லாம் குழம்பிப் போயிருந்தன: பள்ளிக்கூடத்தில் இஸ்லாமைப் போதித்தனர் ஆனால் வீட்டில் அவனது தகப்பனார் இறைவேத்த்தின் இறைவனை குறித்து கூறினார். ஆகவே இந்த இரண்டு வழிகளில் எது சரியான வழி என்பதையும், எந்த வழி, தான் உயிருள்ள இறைவனை அறிந்து கொள்ள வழி நடத்தும் என்பதையும் அறிந்து கொள்ள ஆவலுள்ளவனாய் இருந்தான்.


வாய்ப்பு கதவைத்  தட்டுகிறது

ஒரு கோடை காலத்தில், சுமார் 50 கி.மீ. தொலைவில் இருந்த சபை ஒன்று சிறு பிள்ளைகளுக்காக ஒரு முகாமை ஒழுங்கு செய்திருந்தது. ஜோசப் அந்த முகாமிற்குச் செல்ல ஏங்கினான், ஆனால் அது அந்த சபையின் பிள்ளைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஜோசப் அந்த சபையைச் சார்ந்தவனல்ல. அவன் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள். ஆனால் முகாம் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பாக, முகாமை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் மனதிரங்கி எப்படியோ அவனுக்கு ஒரு இடத்தைக் கொடுத்து விட்டார். ஜோசப் மிக்க மகிழ்ச்சியடைந்தான்.

ஜோசப் முகாம் நாட்களை அதிக மகிழ்ச்சியுடன் அனுபவித்தான், ஆனால் அவனது இருதயத்தின் ஆழத்தில், இந்த இரண்டு வழிகளில் எது சரியான வழி என்ற கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது. முகாமின் கடைசி நாளில், அவனை முகாமிற்கு அனுமதித்தவர் அவனோடு பேச ஆரம்பித்தார். இறுதியாக, ஜோசப்பிற்குத் தனது கேள்விகளைக் கேட்கவும், சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு தனக்கு இருந்த ஆர்வத்தையும் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த உரையாடல் மூலமாக இறைவனுடைய அன்பைக் குறித்தும், நமது பாவங்களுக்காக மனந்திரும்பி அவரைப் பின்பற்ற வேண்டும் என்கிற ஈஸா அல் மஸீஹின் செய்தியினையும் அறிந்து கொண்டான். ஈஸா அல் மஸீஹ்வை தனது இரட்சகராக ஈமான்கொள்ள விரும்புகிறாயா என்று கேட்ட போது ஜோசப் ஆம் என்று சொல்லி அந்த நபரோடு இணைந்து துஆ செய்தான், கடைசியாக அவனது கேள்விக்கு விடை கிடைத்த சமாதானத்தையும் அடைந்தான்.

நாங்கள் துஆ செய்வோம்

1.      ஈஸா அல் மஸீஹ்வைக் குறித்து கேள்விப்படுவதற்கான வாயப்பினை கபிலையில் உள்ள பிள்ளைகளும், அல்ஜீரியா நாடு முழுவதும் உள்ள பிள்ளைகளும் பெற்றுக் கொள்ள துஆ செய்வோம். (லூக்கா 18:16)

2.      இறைவனாகிய ஈஸா அல் மஸீஹ்வை ஈமான்கொண்ட பிள்ளைகளின் விசுவாசம் வளரவும், அவர்கள் மற்றவர்களுக்கு அவரைக் குறித்து சொல்லும் தைரியம் பெற்றுக் கொள்ளவும் துஆ செய்வோம். (மாற்கு 9:36, 37)



3.      அல்ஜீரியா நாட்டில் உபத்திரவப்படுத்தப்படுகிற ஈஸாவை பின்பற்றுகிறவர்களை இறைவன் பாதுகாத்துக் கொள்ள துஆ செய்வோம். (மத். 5:10) 

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?