சூபி இஸ்லாமியருக்காக துஆ செய்வோம்.
நாள் 14 ஜுலை 23, 2013
சம்பிரதாய இஸ்லாம்/ சூபி இஸ்லாம்
பிலால் பயத்தினால், நடுக்கத்துடன் விழித்தான். இது பல வாரங்களாக அவனுக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவன் ஆவிக்குரிய உலகில் ஒரு யுத்தத்தைக் கண்டு, தன் கதை முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தான். அவனது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, அவனது நண்பர்களிடத்திலும், குடும்பத்திலும் எரிச்சலுடன் நடந்து கொண்டான். இதனை இதற்கு மேலும் தாங்க முடியாமல் மக்காவிற்கு புனித யாத்திரை (ஹஜ்)எசென்று வந்த எல்லாராலும் மதிக்கப்பட்ட அறிஞரான ஒரு ஷேக்கிடம் சென்றான். பல புதிரான காரியங்களை விளக்கிச் சொல்லி விட்டு இந்த ஆவிக்குரிய தலைவர் பிலாலுக்கு ஒரு வௌ்ளை நூலை அவனது மணிக்கட்டில் கட்டும்படி கொடுத்தார். மேலும் இரவில் தலையணையில் வைத்துக் கொள்ள தாயத்து ஒன்றையும் கொடுத்தார்.
பிரபல்ய இஸ்லாம் எல்லாமே கடவுள் என்ற நம்பிக்கையின் பழக்க வழக்கங்களை வைதீக இஸ்லாமோடு கலந்து விடுகிறது. பல முஸ்லீம்கள் ஏதோ ஒரு விதத்தில் பிரபல்ய இஸ்லாமை கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் பல நேரங்களில் ஆவிகளைக் குறித்த பயத்தினால் அவைகளைத் திருப்திப் படுத்தும் சடங்குகளை கடைபிடிக்கின்றனர். ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பாக கோழியை பலி செலுத்துவது பொதுவான இந்தோனேசிய சடங்காக இருக்கிறது. கோழியின் தலை, கால், சிறகுகள் எல்லாம் அஸ்திபார கற்களின் அடியில் தலை கிழக்கு பக்கமாக வைக்கப்பட்டும் அதைச் சுற்றிலும் அரிசி மற்றும் வாசனை திரவியங்கள் சுற்றிலும் தூவப்பட்டும் புதைக்கப்படுகின்றன. கோழியின் இரத்தம் கற்களின் மேல் பூசப்படும் மேலும் ஒவ்வொரு கல்லின் அடியிலும் ஒரு நாணயம் வைக்கப்படும். இவை முடிந்த பிறகு வீடு கட்டத் தொடங்குவார்கள்.
சூபி இஸ்லாமின் மற்றொரு பக்கம் வல்லமை விளங்கும் (தர்காக்களுக்கு)
இடங்களுக்கு
புண்ணிய
பயணம்
மேற்கொள்வது.
அப்படிப்பட்ட
இடங்கள்
பெரும்பாலும்
கல்லறைகளை (சியாரம்)க்
கொண்டதாகவும்,
யாத்திரீகர்கள்
குறிப்பிட்ட
சடங்குகளை
செய்வதும்,
குரானின்
சில
பகுதிகளை
ஓதுவதும்,
இறந்து
போனவரின்
பெயரை
உச்சரிப்பதும்
வழக்கமாக
இருக்கிறது.
அருகாமையில்
உள்ள
கட்டிடத்திலிருந்து
தண்ணீர்
கொண்டு
வந்து
கல்லறையில்
வைக்கின்றனர்.
கல்லறையின்
கதவகளில்
மலர்
இதழ்களைத்
தூவுகின்றனர்.
அந்தத் தண்ணீரும் மலர் இதழ்களும் புண்ணிய ஆசீர்வாதங்களை இழுத்துக் கொண்டது என்று நம்பி அவைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுகின்றனர்.
ஓரு
மனிதர்
வியாதிப்பட்டால்,
அவர்
சுகம்
பெறுவதற்காக
அந்தத்
தண்ணீரைக்
குடிப்பார்.
ஒருவருடைய
ஆத்துமாவை
சுத்தம்
செய்ய
மலர்
இதழ்கள்
குளிக்கும்
தண்ணீரில்
போடப்படுகின்றன.
பிலால் தனது எல்லா முயற்சிகளுக்குப் பிறகும் பயங்கரமான கனவுகளைக் கண்டு கொண்டுதான் இருந்தான். இறுதியாக அவன் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்று கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டான். அவனது அனுபவங்களில் இருந்து வெளி வருவதற்கு அவனுக்கு பல நாட்கள் ஆனது. இன்று அவன் பிரபல்ய இஸ்லாமைக் குறித்துப் போதிக்கிறான் மேலும் அவன் இறுதியாக பெற்றுக் கொண்ட விடுதலையைக் குறித்து சாட்சி கொடுத்து வருகிறான்.
துஆ செய்வோம்.
• இப்படிப்பட்ட அரண்கள் முஸ்லீம்கள் மேல் செலுத்திக் கொண்டிருக்கும் வல்லமைகளிலிருந்து அவர்கள் விடுதலையாக்கப்பட துஆ
செய்வோம்.
(மத்.8:16, 10:1, மாற்கு 5:2-13, அப். 16:16-18)
• ஈஸா அல் மஸீஹிடம் வருகின்ற மக்கள் ஆவிக்குரிய உலகத்தோடு அவர்களுக்கிருந்த தொடர்புகளை வெளிப்படையாக அறிக்கை செய்து கடந்த நாட்களின் செயல்களிலிருந்து முற்றிலுமாக வெளிவர துஆ செய்யுங்கள். (உபாகமம் 18:9-12)
இருளில் இருக்கும் மக்களுக்கு சாட்சி கூறும் கிறிஸ்தவ ஊழியர்கள் “ நட்சத்திரங்களைப்போல பிரகாசிக்க” துஆ
செய்வோம். (பிலி. 2:15)
• கிறிஸ்துவே எல்லாப் பிரச்சனைகளுக்கும் பதில் என்பதை அறிந்திருக்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் இப்படிப்பட்ட ஜனங்களுக்கு கிறிஸ்துவை பகிர்ந்து கொள்ளும் பாரம் கொள்ளும்படி துஆ
செய்வோம்..
Comments
Post a Comment