“ஒரு போதும் கைவிட்டுவிடாதே”

நாள் 22                ஜுலை 31,  2013

சோமாலிய தேசதத்தின் உபத்திரவப்படுத்தப்படுகின்ற அகதிகள்.

“ஹா ரஜோ திங்”  “ஒரு போதும் கைவிட்டுவிடாதே

சூடான பாலைவனக் காற்று, கென்யாவில் உள்ள தாடாப் முகாமில் உள்ள அகதிகளின் கூடாரங்களை குலுக்கிக் கொண்டிருந்தது. கதிஜா, சோமாலியாவில் இருந்து வந்திருந்த 5 இலட்சம் பேரோடு அங்கு பாதுகாப்பைத் தேடினாள். உள்நாட்டுப் போரின் விளைவாக 20 வருடங்களாக தொடர்ந்து அனுபவித்த வந்த பாடுகளுக்குப் பின், கதிஜா தன் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடினாள். அவள் அதிக தூரம் செல்ல முடியவில்லை. பெரும்பாலான மற்றவர்களைப் போல அவளும் ஒரு அகதி, இந்த முகாம் அவளுக்கு ஒதுக்கப்பட்டது. வீட்டிற்குத் திரும்ப முடியவில்லை காரணம் போர் நடந்து கொண்டிருந்தது. மேலும் அவர்களை வரவேற்கும் நாடுகள் இல்லாததால் வேறு இடத்திற்கும் செல்ல முடியவில்லை. தாடாப்தான் ஐக்கிய நாடுகளின் மிகவும் பெரிய உலகலாவிய அகதிமுகாமாகும். ஒரு முழு தலைமுறை தாடாபில் பிறந்து அகதியாக வாழும் கடினமான வாழ்க்கை ஒன்றையே அறிந்ததாக வளர்ந்திருக்கிறது.

முகாமில் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அல்-ஷபாப் எனும் தீவிரவாத இயக்கம் பற்றிய அச்சம் அனைவருக்கும் உள்ளது. இதனால் முகாமிற்கு உள்ளேயும் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறது. பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர், சிறு பையன்கள் அல்-ஷபாபில் சேர்ந்து சண்டை போடும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர், ஐக்கிய நாட்டு சபையின் உதவியாளர்கள் கடத்தப்படுகின்றனர், கண்ணி வெடிகள் மூலம் வாகனங்கள் தகர்க்கப்படுகின்றன, எல்லாவற்றிற்காகவும், எப்பொழுதும் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது.

ஒருவராலும் கதீஜாவை காப்பாற்ற முடியவில்லை

இங்கும் அங்குமாக முகாமிலுள்ள சோமாலியர்கள் மத்தியில் சில கிறிஸ்தவர்களைக் கண்டுபிடிக்கலாம். கதிஜாவும் அவர்களில் ஒருவர். ஆனால் அவ்வாறு கிறிஸ்தவர்களாக இருப்பது எளிது அல்ல. அவளுடைய உடன் கிறிஸ்தவர்கள் எல்லாம் அல்-ஷபாபால் கொல்லப்பட்டிருந்தனர். எவரிடம் இறைவேதம் காணப்படுகிறதோ எவர்கள் இரகசியமாக நடைபெறும் சபையில் கலந்து கொள்ளுகிறார்களோ அவர்கள் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். இறுதியாக, கதிஜா கடுமையான ஷரியா சட்டத்தை உரிமைப் பாராட்டும் அடிப்படைவாத முஸ்லீம்களின் உபத்திரவங்கள் காரணமாக அகதிகள் முகாமிலிருந்து ஓடிப் போக வேண்டியிருந்தது. தாடாபை விட்டு வெளியேறியவுடன் கதிஜாவும் அவளது பிள்ளைகளும் தங்கள் தேவைகளை தாங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. பல போராட்டங்களுக்கு மத்தியில் இறுதியாக நைரோபியை சென்றடைந்தார்கள்.

நாங்கள் சோமாலியாவில் இறைவனின் இடைபடுதலைத் தேடுகிறோம். பாடுபடும் இத்தேசத்திற்கு இறைவன் சமாதானத்தைக் கட்டளையிடுவாராக ! பல சோமாலியர்கள் தங்கள் வாழ்வினை நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் அன்பின் கரங்களில் ஒப்படைக்கும் நாட்கள் வருவதாக!

துஆ செய்வோம்

•          சோமாலியாவில் சுவிசேஷத்திற்கு திறந்த வாசல் உண்டாக துஆ செய்வோம்.

•          தாதாபிலும், சோமாலியாவிலும் விசுவாசிகள் சமாதானத்துடன கூடி வருவதற்கான சூழ்நிலைகளை இறைவன் உருவாக்கவேண்டும் என்று துஆ செய்வோம்.

•          விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்வில் பலமாய் வளர துஆ செய்வோம். விசுவாசத்தில் உறுதியாய் நிற்பவர்கள் மாத்திரமே உபத்திரவங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் ஆகிய அழுத்தங்களைத் தாங்க முடியும்.


•          தனிப்பட்ட தொடர்ப்பு, எழுத்தாக்கங்கள் மற்றும் இணையத்தளத்தில் செய்யப்படும் சுவிவேஷ பணிக்காக துஆ செய்வோம். 

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?