வானொலி தஃவா

நாள் 8                   ஜுலை 17
வானொலி  தஃவா  இஸ்லாமிய உலகில் பயன்கொடுப்பதேன்?

இலத்திரனியல் ஒலிபரப்புகள் கணணி மூலமாக அலைவரிசை ஒலி அலை தொழிநுட்ப சாதனங்கள் என்று வளர்ந்துள்ள இந்த காலத்திலும் சத்தியத்தை எத்திவைப்பதற்கு பெரும் பங்களிப்பாக வானொலி ஏன் காணப்படுகிறது? அது சரளமாக தனித்துவமாக தாக்கத்துடன் செய்தியை கொடுக்க வல்லதுடன், செலவின்றி புவியியல் அமைவு, கல்வி நிலை, பொருளாதார நிலையை துறந்து அதிகளவு உள்ளங்களுக்கு கொண்டு செல்ல வல்லது.

உதாரணமாக, மத்திய ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திலே மிகவும் கட்டுப்பட்டவர்களாயுள்ளார்கள். சில இடங்களிலே வெளிநாட்டு ஊழியர்கள் விரட்டப்பட்டுள்ளனர். ஆனாலும் உள்நாட்டு இறைஜமாஅத் வானொலியின் தாக்கத்தினாலே தொடர்ந்து முன்னேறி சென்றது. வட ஆபிரிக்காவிலே, வானொலிப்பெட்டிகள் நாடு முழுவதுமாக காணப்படுகிறது. இது நகர்புறங்களிலும் பின்தங்கிய கிராமங்களிலே உள்ள மக்களுக்கு தங்களது மொழியிலே செய்திகளை கேட்பதற்கு உதவி செய்துள்ளது.

எழுதப்பட்ட வாக்கியங்களுடன் சேர்க்கும்போது வானொலியானது சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. உதாரணமாக, துர்க்மெனிஸ்தானிலே முதியோர் தலைமுறையினர் சிரிலிக் அரிச்சுவடியை பயன்படுத்துகின்றனர் ஆனாலும் இளம் சந்ததியினர் லத்தின் அரிச்சுவடியை பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளிலே உள்ள துர்க்மெனியர்கள் அரபு, பாரசீகம் போன்ற மொழிகளை வாசிப்பார்கள். வானோலி ஒலிப்பரப்புகள் அவர்களுக்கு தங்கள் சொந்த மொழியிலேயே நிகழ்ச்சிகளை கேட்பதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.

ஆபிரிக்காவிலிருந்து ஆசியாவை நோக்கும் போது இஸ்லாமிய உலகமானது முழுமையாக கலாச்சார திருபத்தை கொண்டுள்ளது. மொரோக்கோ மக்களின் வாழ்க்கை முறையானது இந்தோனேசியர்கள் அல்லது சிரியரின் வாழ்க்கை முறையை காட்டிலும் வித்தியாசமாக உள்ளது. ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கும் போது வானொலி ஊழியங்கள் கலாச்சார வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள்  போன்றவற்றை  பெற்றுக்கொள்ளும். மலைப் பிரதேசம் அல்லது பாலைவனப்பகுதியிலே ஏற்படக்கூடிய மின்தடைகள் நிமித்தம் சூரிய சக்தியில் இயங்கும் வானொலிகள் வேதாகம காரியங்களை ஒலிபரப்பு செய்வதிலே மிக முக்கிய இடம் வகிக்கின்றன. ஆதிகாலத்திலே தஃவா ஊழியர்கள் அச்சிடப்பட்ட இறைவேதம் கொண்டுச்செல்ல கடினமாக காணப்பட்ட எல்லைகளை கடந்து வானொலி அலைகள் செல்லக்கூடியன. கிறிஸ்துவுக்காக இஸ்லாமிய உலகை போய் அடையும் பணியிலே இவ்வாறாக வானொலிகள் பாரிய பங்களிப்பை அளிக்கின்றன. மற்றைய அணுகு முறைகளை காட்டிலும் வானொலியானது மிகவும் இலகுவானதாக உள்ளது.


நாங்கள் துஆ செய்வோம்.

1.   தேவைகளோடு காணப்படும் ஜனங்களை வானொலி நிகழ்ச்சிகள் சந்திக்கவேண்டும் என்று துஆ செய்வோம்.

2.   உள்நாட்டு வானொலி தயாரிப்பாளர்களுக்காக துஆ செய்வோம். அவர் உட்சாகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும் துஆ செய்வோம்.


3.   சத்தியத்தை தேடுகிறவர்கள் ஈஸா அல் மஸீஹ் அவர்களை அறிந்துகொள்வதோடு ஈமானில் வளவும் படியாக துஆ செய்வோம்.

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?