யூத, முஸ்லீம்களால் வேதனை படுத்தப்படும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்

நாள் 13                    ஜுலை 22, 2013                
                                                                                                                                                                                                                                                                                                                       
பெதலகேமிற்காக துஆ செய்வோம்

ஈஸா அல் மஸீஹ் பிறந்த ஊரான பெத்லேகேமில் உயிருள்ள விசுவாசத்தை உடைய கிறிஸ்தவரே இல்லாத நிலை சாத்தியமா ?

சூழ்நிலைகள் இன்னும் இவ்வளவு மோசமான நிலைக்குச் செல்லவில்லை ஆனால் சூழ்நிலைகளின் போக்கு அத்திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காஸா உட்பட பாலஸ்தீனிய எல்லைகளில் வாழும் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதத்திற்கு சற்று அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். பரிசுத்த பூமியில் வசிக்கும் கிறிஸ்தவர்களுக்கு வரும் அதிகமான அழுத்தங்கள் அவர்கள் வெளிநாடுகளில் குடியேறக்-காரணமாக இருக்கிறது. இந்த அழுத்தங்கள் பல திசைகளில் இருந்து வருகிறது.

உள்ளுர் இறை ஊழியர் கூறுகிறார்: “ அரசியல் சூழ்நிலைகள் இருக்கின்றன. கிறிஸ்தவர்களாக நாங்கள் ஒரு அமைதியான நாட்டில் வசிக்க விரும்புகிறோம், ஆனால் மத்திய கிழக்கில் சமாதானம் கண்களுக்குத் தென் படவில்லை . அண்டை நாடுகளில் நடைபெற்று வரும் அரேபிய எழுச்சிகளின் புரட்சி, சமாதானமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உருவாக்கவில்லை. பொருளாதார ரீதியாகவும், நம்பிக்கை இல்லாதிருக்கிறது. 40% பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் வேலையில்லாதிருக்கிறார்கள். காரணம் குறைவான வேலைகளே இருக்கின்றன. மேலும் குறிப்பிடத்தக்கவிதமாக கிறிஸ்தவர்கள், சமுதாயத்தில் மிகச் சிறிய சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆவிக்குரியவிதமாக, ஈஸா அல் மஸீஹ்ஹை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளாத இரண்டு பெரிய மதங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அவர்களது பார்வையில் நாங்கள் வேத புரட்டர்கள், எனவே அவர்களது கேலிக்கும், இகழ்வுக்கும் அடிக்கடி இலக்காக மாறிவிடுகிறோம். இது போதாதென்று, உலகளாவிய கிறிஸ்தவ சபைகளாளும் கைவிடப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வினால் உள்ளுர் இறை சபைகள் சோர்வினால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.”

இருப்பினும், இன்னும் நம்பிக்கை உண்டு. பல்வேறு திருச்சபைகளும், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளும் பாலஸ்தீனிய எல்லைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாரம்பரிய கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிப்படையாக தஃவா செய்ய முடியும். முஸ்லீம்கள் மத்தியில் ஊழியம் செய்வது ஒரு பெரிய சவால் எனவே திருச்சபை ஞானமுடன் நடந்து கொள்ள வேண்டும். இருந்தாலும் மக்கள். ஈஸா அல் மஸீஹ்வின் மேலுள்ள ஜீவனுள்ள ஈமானுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெத்லகேமிலுள்ள ஒரு இவாஞ்சலிக்கல் சபை 5லிருந்து 56 குடும்பங்களாக வளர்ந்திருக்கிறது. அவர்களது போதகரின் அறிக்கை,”தேவன் மக்களை இங்கு இரட்சிக்கிறார். மேலும் அற்புதங்கள் இன்றும் நடக்கின்றன. நாங்கள் இதனைக் கண்டிருக்கிறோம், எனவே சாட்சி கூற முடியும்”.

துஆ செய்வோம்.

•          பாலஸ்தீனிய எல்லைகளிலிருக்கும் கிறிஸ்தவர்களை அவர்களது சமுதாயத்தில் உப்பாகவும் ஒளியாகவும் இருக்க தேவன் அவர்களை உற்சாகப்படுத்த துஆ செய்வோம். (ஏசாயா 41:10)

•          முஸ்லீம் பின்னணியிலிருந்து கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்கு வந்தவர்களுக்கு தேவனுடைய பாதுகாப்பு கிடைக்க துஆ செய்வோம். (மத். 6:13,14)


•     அப்படிப்பட்ட விசுவாசிகளை சீஷர்களாக உருவாக்குகின்ற போதகர்களுக்கு ஞானம் அருளப்படவும், உலகளாவிய கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை அவர்களை உற்சாகப்படுத்தும் வழிகளைக் கண்டறியவும் துஆ செய்வோம்.


•          மத்திய கிழக்கில் நிரந்தரமான சமாதானம் வரவும், சுவிசேஷத்திற்கான வாசல்கள் அடைபட்ட நாடுகளில் அவைகள் திறக்கப்படவும் துஆ செய்வோம்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?