குமாரனிடத்தில் ஈமான் கொள்ளுகிறவன்

ஈஸா அல் மஸீஹ் 9

குமாரனிடத்தில் ஈமான் கொள்ளுகிறவன்

இறைவன், தம்முடைய ஒரேபேறானவரை ஈமான் கொள்ளுகிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”

இன்ஜில் (யோவான் 3:16)


எமது வாழ்வின் மீது அல்லாஹ்வின் தொடுகையை நிராகரிப்பதன் மூலம் அல்லாஹ் அளிக்கும் கொடையாகிய நித்திய வாழ்வை நிராகரிக்கிறோம். மேலும், அல்லாஹ்வின் கொடையை நிராகரிப்பது அவரது இரக்கத்தை நிராகரிப்பதாகும். இதுநியாயத்தீர்ப்புக்கும் நித்திய அழிவுக்குமே வழிவகுக்கும். இக்காரணத்தால் ஈஸா அல் மஸீஹ் அவர்களையும் அவரது பலியையும் நிராகரிப்போர் மீது தெளிவான எச்சரிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர் அல்லாஹ் வினுடைய வார்த்தைகளைப் பேசுகிறார். அல்லாஹ் அவருக்குத் தமது ரூஹ்ஹை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். இறைவன் அவரில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் ஈமான் கொள்ளுகிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான். அவரை ஈமான் கொள்ளாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, அல்லாஹ்வின் கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்."
இன்ஜில் (யோவான் 3:34,36)


ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப் போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப் பேன்......நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்கள்.”
சூரத்துல் ஆல இம்ரான் (3):55,56


முடிவுரை

என் அருமையான சகோதரனே, சகோதரியே! அடையாளமாகிய இந்த தூய குர்பான் அல்லாஹ்வின் இரக்கத்தை வெளிக்காட்ட வந்திருக்கிறது என்பதை நாம் கவனமாக கருத்திற்கொள்ள வேண்டும். எமது இருதயத்தை நாம் கடினமாக்கக்கூடாது அப்படி செய்தால் அல்லாஹ்வின் கோபத்தை வரவழைக்கிறவர்களாக இருப்போம். ஈஸா அல் மஸீஹ் ஆகிய தூய குர்பான் எமது வாழ்வை தொட நாம் அனுமதிக்க வேண்டும். ஈஸா அல் மஸீஹ் அவர்களின் பணி உருக்கமானதும் அவரது பணி அர்-ரஹ்மானின் இரக்கத்தினால் மனித இதயத்தை தொடுவதுமாகும்.


கூட்டத்துக்குள் புகுந்து ஈஸா அல் மஸீஹ் அவர்களின் ஆடையை தொட்டு குணமடைந்த மிகவும் சுகவீனமுற்றிருந்த ஒரு பெண்ணின் கதையை இன்ஜில் கொண்டிருக்கிறது. அவரது வல்லமையை அறிந்து தனக்குத்தானே அவள் இப்படி கூறிக்கொண்டாள்: நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.”
இன்ஜில் (மத்தேயு 9:21)

என் அருமையான சகோதரனே, சகோதரியே!

நீங்களும் நானும் ஈஸா அல் மஸீஹ் ஆகிய ரூஹுல்லாஹ், கலிமத்துல்லாஹ் வின் வாழ்வில் அடங்கியிருக்கும் மிகப்பெரும் இரகசியத்தை முழுமையாக அறிய முடியாது. அவர்மேலிருந்து வந்தவர்" எனவே அவரது இறை தன்மை மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படியிருந்தாலும், நாம் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளா விட்டாலும் அல்லாஹ்வின் அடையாளங்களில் ஈமான் கொள்ளும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம். நாம் புரிந்து கொள்வ தல்ல, ஈமான் கொள்ள வேண்டும். நாம் அவரை முழுமையாக அறியாமலிருக்கலாம், ஆனால் அவரது ஆடையின் ஓரத்தை தொட்டால் முழுமையாக்கப்படுவோம். அல்லாஹ் எமது ஈமானை மதிக்கிறான். அவன் எங்களை அவனிடத்தில் சேர்த்துக் கொள்வான். அவன் எங்களை பரக்கத்செய்து இம்மையிலும் மறுமையிலும் எமக்கு வாழ்வளிப்பான்.

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனாகிய அல்லாஹ்வுக்கே புகழ்ச்சியுண்டாகட்டும்! எங்களை அவனிடத்தில் சேர்த்துக்கொள்ளும் அன்பானவனுக்கு புகழ்ச்சி உண்டாகட்டும்! எமது தேவைகள் அனைத்தையும் ஆயத்தம் செய்த பராமரிப்பாளனுக்கு புகழ்ச்சி உண்டாகட்டும். இதோ, உலகத்தின் பாவத்தை சுமக்கும் அல்லாஹ்வின் ஆட்டுக் குட்டி அதே குர்பான் உங்கள் வாழ்வையும் தொடட்டும். அவர் உங்களை இருளின் ஆழத்திலிருந்து பிரகாசமான ஒளியினிடத்துக்கு தூக்கியெடுக்கட்டும். நீங்கள் எதிரியின் பிடியிலிருந்து அன்பானவரிடம் வர உங்களை அவர் விடுவிக்கட்டும். மெய்யாகவே, அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சி களையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.” அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ்!



ஆமீன்!

ஆமீன்

Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?