மத்திய கிழக்கிலிருந்து ஒரு குரல் :
மத்திய கிழக்கிலிருந்து
ஒரு குரல் :
“மத்திய கிழக்கில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத ஒவ்வொரு நபருடைய கரத்திலும் இறை வார்த்தையின் ஒரு பகுதியை கொடுப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். இஸ்லாமிய நாடுகளில் அநேகருக்கு இறைவேதம் என்பது புதியதும் புத்துணர்வானதொன்றுமாகும். ஒரு கிறிஸ்தவ பிண்ணனியோ உலக தொடர்ப்போ இல்லாமல் இறைச்செய்தியை அவர்கள் கேட்டு, அதற்கு தங்களை மாற்றிக்கொள்ளும் விதமானது ஆச்சரியமாக உள்ளது. இவ் விடயமானது பின்தங்கிய இடங்களிலே உள்ள ஏழைகளுக்குள் மிகவும் யதார்த்தமானதாக உள்ளதோடு அனேக திரவிய சம்பன்னங்கள் நிறைந்த பெரிய நகரங்களிலே அது சற்று குறைவாக உள்ளது. சத்தியத்தை ஜனங்கள் கேட்டவுடன் அதனை முழு மனதோடு கட்டியணைத்துக் கொள்ளவும் முழு இருதயத்தோடு இறைவனுக்காக வாழவும் தங்களை ஆயத்தம் செய்துகொண்டார்கள். அதனாலேயே ஈஸா அல் மஸீஹ்வை பின்பற்றுகிற
நாம் இறைவேதத்தை
பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறோம்...”
இப்படிப்பட்ட
பல குரல்கள் மத்திய கிழக்கிலிருந்து நாளார்ந்தம் ஒலித்தவண்ணமே உள்ளது. இவர்களுக்காக
நாங்கள் என்ன செய்யபோகிறோம்.
ஜெபம் ஜெபம்.... நேரடியாக சுவிஷேசம் சொல்ல தடை உள்ளதால் ஊடகங்களை நுட்பமாக பாவிக்க வேண்டும்.
ReplyDelete