இரத்த பூமி
நாள் 10 ஜுலை 19, 2013
தமஸ்கஸ் – சிரியா – இரத்த பூமி
1974ம் ஆண்டில் நான் சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்தேன். எனது மனைவி பாகிஸ்தானிலிருந்து வந்திருந்தாள். நாங்கள் பெய்ரூட்டில் சந்தித்தோம். நாங்கள் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருந்த புராதான இடங்களான ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியா ஆகியவற்றிற்கு சுற்றுப்பயணம் செய்தோம். தமஸ்குவில் நாங்கள் தங்கியிருக்கும்போதுதான் பயங்கர கனவு ஒன்று வந்தது. ‘ஒவ்வொரு அங்குலம் அளவு நிலமும் இரத்தத்தால் தோய்ந்து “எவ்வளவு காலம்?” என்று கதறிக் கொண்டிருந்தது.’
நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் இதை என்னுடைய சிரிய நாட்டு சகோதரனிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். அவன் நினைத்தான் அது கடந்த காலத்துக்குரியது என்று. நானும் அவ்வாறுதான் நினைத்தேன். பார்க்கப் போனால், மக்கள் குடியிருந்த பட்டணங்களிலே தமஸ்குதான் உலகிலேயே பழமையான பட்டணம். அது முடிவில்லாத படையெடுப்புகளையும் அதோடு சேர்ந்து வரும் பயங்கரங்களையும் அனுபவித்திருக்கிறது. நாங்கள்; கண்ட கனவு எதிர்கால நிகழ்வுகளின் முன்னறிவிப்பு என்பதை ஒரு போதும் எண்ணியதில்லை. 2012ம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அங்கு ஏற்பட்ட கலவரங்களில் 40,000த்துக்கும் அதிகமான பேர் கொல்லப் பட்டிருந்தனர். நேற்றைய தினம் மீண்டும் கூடினோம். அவரது தஃவா சங்கம் இரத்தம் வடித்துக் கொண்டிருக்கும் இந்நாட்டிற்காக துஆ
செய்கிறவர்களை எழுப்பும்படியாக அவரைக் கேட்டுக் கொண்டுள்ளது. அவர் 40 ஆண்டுகளுக்கு முன் வந்த கனவை ஞாபகப்படுத்தினார். மேலும் கிறிஸ்தவர்கள் குறி வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். சில சுதந்திர போராட்டக்காரர்களும், வஹாபிகளும், அல்-கொய்தாவினரும் மற்றும் வெளிநாடுகளிலிருந்த வந்த மற்றவர்களும் கிறிஸ்தவர்களை தேடித் தேடி வேட்டையாடி வருகின்றனர் என்ற தகவலையும் சொன்னார்.
இந்த சூழ்நிலையிலும் தமஸ்குவின் ஏழ்மையான பகுதியில் போதகராக இருக்கிற அவரது தகப்பனார் தனது மந்தையை கைவிட மறுக்கிறார். ஆச்சரியவிதமாக, இறைவன் ஒரு புதிய காரியத்தை செய்து வருகிறார். தங்கள் சபைகள் அந்நியர்களால் - முஸ்லீம்களால் நிரப்பப்படுவதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லீம் பெண்கள் தங்கள் குழந்தைகளுடனும், ஆண்மக்களுடனும் நூற்றுக்கணக்கில் ஈஸா
அல் மஸீஹிடம் வந்து கொண்டிருக் கின்றனர்.
என்ன ஒரு வேடிக்கை! சிரியா பக்கத்து நாடான லெபனானின் காரியங்களில் தலையிட்டு சதிசெய்து கொலை செய்வதை அதிலும் கிறிஸ்தவர்களையும் விட்டு வைக்காமல் கொல்வதை தூண்டிவிட்டதின் பலனை இப்பொழுது அறுத்துக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக
இறைவன் இத்தேசத்தை உலுக்கி வருகிறார்.
மத்திய கிழக்கிலே நிகழ்ந்து வரும் இடைவிடாத போர்களுக்கு முடிவு வருமா? ஈஸாவே சமாதானப் பிரபு. ஜனங்கள் அவரை நிராகரிக்கிற வரைக்கும் சமாதானம் இருக்காது.
மனிதர்களுடைய காயப்படுத்துதலுக்கு இறைவன்
பொறுப்பாக மாட்டார். ஆனால், எவ்விதம் தீமையிலிருந்து நன்மையை வரவழைப்பது என்பதை அறிந்திருக்கிறார். அதை நாம் இன்று சிரியாவில் கண்டு கொண்டிருக்கிறோம். எல்லாப்
புகழும் இறைவனுக்கே
துஆ செய்வோம்.
1. நீதியான ஆட்சியாளர்களோடும் மத சுதந்திரத்தோடும் இங்கு சமாதானம் வர துஆ செய்வோம். (நீதி.13:25)
2. சிரியாவிலேயே தங்கி இருக்க விரும்புகிற கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்படவும் மிகுந்த அதிர்ச்சியுடன் ஒரு புதிய வாழ்க்கை முறையை எதிர்நோக்கி உள்ள தங்கள் அயலாருக்கு சாட்சி பகருவதற்கு வல்லமையாய் பயன்படுத்தப் படவும் துஆ செய்வோம்.
3. சிரியாவிற்கு உள்ளிருந்து பாடுபடுபவர்களுக்கும் இப்பொழுது அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்யவும், உதவிகளை அனுப்பவும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.
4. சபைகளுக்கு வந்து கொண்டிருக்கிற முஸ்லீம்களை சரியான விதத்தில் வழி நடத்தி அவர்கள் நல்ல சீடர்களாக மாறுவதற்கு உதவுகின்ற போதகர்களையும், விசுவாசிகளையும் இறைவன்
எழுப்ப வேண்டும் என்று மன்றாடுவோம்.
Comments
Post a Comment