ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை


நிகரற்ற ஈஸா அல் மஸீஹ் - பகுதி 4


குர்ஆனிலும் இறைவேதத்திலும்  ஈஸா அல் மஸீஹ் அவர்களின் தனித்துவம்

). ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை

ஈஸாவன் வாழ்வு பற்றி குர்ஆனும் இறைவேதமும் ஒத்துள்ள, நாம் கருத்திற்கொள்ளவேண்டிய கடைசி காரியம், ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகை ஆகும். குர்ஆனில் ஈஸா அல் மஸீஹ்வின் வருகை பற்றி தெளிவாக போதிக்கும் ஒரு வசனம் பின்வருமாறு:

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்.                                           சூறா 43:61

இந்த பகுதி அரபு மூலப் பிரதியில் சுருக்கமாக கூறப்பட்டிருப்பினும் ஆங்கில மொழிபெயர்ப்பானது சரியாகவே காணப்படுகின்றது. மீண்டுமாக இரண்டாவது வருகை நிகழும் விதம் மற்றும் அதன் விளைவு தொடர்பாக கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வித்தியாசப்படுகின்ற போதிலும் அந்த உண்மையை ஏற்றுள்ளனர். இறைவேதத்தின் தீர்க்கதரிசிகள் புத்தகத்தில், ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகையானது அதிகளவில் பேசப்பட்டுள்ள கருத்துக்களில் ஒன்றாகும். அவற்றுட் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது போதுமானது:

அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள் (மத்தேயு 24:30).

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார் (1தெசலோனிக்கேயர் 4:16).

இதோ, மேகங்களுடனே வருகிறார் கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள் பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்                (வெளிப்படுத்தின விசேஷம் 1:7).

ஈஸா அல் மஸீஹ்வின் இரண்டாம் வருகையானது, நியாயத்தீர்ப்பின் நாளை அறிவித்து நிற்கின்றது எனும் முடிவுக்கு நாம் வரலாம். குர்ஆனும் இறைவேதமும் ஒத்துள்ள கருத்தாகும்.

இறைவேதத்தில் இயேசுவை விபரிக்கும் பல பெயர்கள் குர்ஆனிலும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும். உதாரணமாக, இரு புத்தகங்களிலும் அவர் ‘இறைவனுடைய வார்த்தை என அழைக்கப்படுகிறார். அவரை மேசியா என அழைப்பதில் குர்ஆனும் வேதாகமத்துடன் ஒத்துள்ளது. அதேபோல அவர்இறைவனிடமிருந்து வந்த ஆவியானவர் எனவும் குர்ஆனில் அழைக்கப்படுகின்றார்.

இதுவரை நாம் காண்பிக்க முயன்ற நான்கு குணாதிசயங்களும் ஈஸா அல் மஸீஹ்வின் வாழ்விலும் அவரது ஆள்தத்துவத்திலும் அவரை தனித்துவமானவராக காட்டுகின்றது. மேலும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படாத நாமங்களை குர்ஆனும் இறைவேதமும் அவருக்கு மட்டுமே வழங்கியுள்ளது என்பதனை நாம் நினைவிற்கொள்வது முக்கியமானதாகும்.


Comments

  1. அருமையாக தொடர் செல்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். கர்த்தரின் கரம் உங்களை வழிநடத்தும்.

    ReplyDelete
  2. உங்கள் துஆக்களில் எங்களை தாங்குங்கள் சகோதரரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?